Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

தமிழ்நாட்டில் அடுத்த தேர்தலில் எதிர்க்கட்சி என்ற ஒன்றே இருக்காது என இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ஜுனன் தெரிவித்துள்ளார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், இலங்கைத் தமிழர்களுக்கு தமிழக அரசு தொடர்ந்து ஆதரவு வழங்க வேண்டும் என்ற தனது விருப்பத்தை தெரிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில்,“இந்தத் தேர்தலுக்குப் பிறகு தமிழ்நாட்டில் எதிர்க்கட்சி என்ற ஒன்று இருக்காது என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. அதற்கு காலம்தான் பதில் சொல்லும்.முதலமைச்சர் விஜய் அண்ணாவை சந்திப்பேன் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை. அந்த எதிர்பார்ப்பும் இல்லை. நாங்கள் ஒரு சிறிய புள்ளி மட்டுமே.

தமிழகம் என்பது மிகப்பெரிய, பரந்துபட்ட தேசம். அந்த மாநிலத்தின் முதலமைச்சராக இருப்பது மிகவும் கடினமான பொறுப்பு என்பதை இலங்கை நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் எனக்கு நன்றாகத் தெரியும்” என்றார்.

Eswari

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 months ago at 2 months ago