Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

Viji

செஞ்சி ‘காலையில எழுந்து பாத்தா குழந்தைய காணோம் சார்…” – இந்த ஒரு வார்த்தையில்தான் ஆரம்பித்தது அந்தப் பதற்றம் , இன்றோடு நான்காவது நாள். 100-க்கும் மேற்பட்ட போலீசார், 2 டி.எஸ்.பி-க்கள் தலைமையில் 5 தனிப்படைகள், மோப்ப நாய், டிரோன் என அத்தனை நவீன வசதிகளையும் இறக்கி தேடியும், 7 வயது சிறுமி குறித்து ஒரு சின்ன தடயம்கூட கிடைக்கவில்லை என்பதுதான் இதில் பெரும் சோகம்.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி தாலுகா ஆலம்பூண்டி ஊராட்சி, நடுப்பட்டு கிராமத்தை சேர்ந்த வடிவேல் – பவானி. தம்பதியர்களுக்கு , 2 மகள்கள் உள்ளனர். மூத்தமகள் விஜி சென்னையில் டிப்ளமோ படித்து வருகிறார். 2-வது மகள் ஹேமாவதி (7) ஆலம்பூண்டியில் உள்ள அரசு பள்ளியில் 2ம் வகுப்பு படித்து வருகிறார்

சம்பவத்தன்று, மகளின் 7-வது பிறந்தநாளை முந்தைய நாள் இரவுதான் கோலாகலமாகக் கொண்டாடியது. வீட்டில் கேக் வெட்டி, தெரு குழந்தைகளுக்கெல்லாம் இனிப்பு கொடுத்து சிரித்த முகத்துடன் உறங்கச் சென்ற சிறுமி, அரசு தொடக்கப் பள்ளியில் 2-ம் வகுப்பு படிக்கும் அந்தக் குறும்புக்காரி, மறுநாள் காலை வீட்டில் இல்லை!

இதையும் படியுங்க  83-inch smartwatch-style display with 1200 mAh swappable

பெற்றோர் அலறித் துடித்து உறவினர்களுடன் சுற்றுப்புறம் முழுக்க தேடியும் பலனில்லை. தகவலறிந்து விரைந்த போலீசார், மாவட்ட எஸ்.பி. மதிவாணன் நேரடி மேற்பார்வையில் விசாரணையை முடுக்கிவிட்டனர்.

அக்கம் பக்கம் வீடுகளில் விசாரணை ஒருபுறம், உறவினர்களிடம் கிடுக்கிப்பிடி விசாரணை மறுபுறம், சிசிடிவி காட்சிகளை அலசுவது என போலீசார் பம்பரமாகச் சுழன்றனர். விவசாயக் கிணறுகள், குட்டைகள், மலைக்குகைகள் என டிரோன் கேமரா உதவியுடன் சல்லடை போட்டுத் தேடியும் ஏமாற்றமே.

”அதிகாலையில குழந்தை அழுற சத்தம் கேட்டுச்சு…” என அக்கம்பக்கத்தினர் சொன்ன ஒரே தகவலை வைத்துக்கொண்டு போலீசார் அலைந்து கொண்டிருக்கின்றனர். சோசியல் மீடியாவில் புகைப்படம், வீடியோ எனப் பலரும் பகிர்ந்தும் இதுவரை உருப்படியான தகவல் இல்லை.

”என் பொண்ணுக்கு என்ன ஆச்சுன்னே தெரியலையே…” என கதறும் பெற்றோரின் கண்ணீர் அந்த ஊரையே கலங்கடிக்கிறது. பிறந்தநாள் கொண்டாடிய குழந்தை பத்திரமாகத் திரும்ப வேண்டும் என்பதே ஒட்டுமொத்த செஞ்சியின் பிரார்த்தனையாக இருக்கிறது.

போலீசாரின் தேடுதல் வேட்டை தொடர்கிறது… விடைதான் கிடைக்குமா?

இதையும் படியுங்க  " If you have a clitoris, you are no stranger to the intense

பிரச்சனையை கையில் எடுத்த அரசியல் கட்சிகள்

செஞ்சி தொகுதி பா.ம.க., – எம்.எல்.ஏ., கணேஷ்குமார் நேற்று இரவு நேரில் சென்று விசாரித்தார். ஆரணி தொகுதி தி.மு.க., – எம்.பி., தரணிவேந்தன், சிறுமியின் பெற்றோரை சந்தித்து ஆறுதல் கூறியதுடன், சிறுமியை விரைவில் கண்டுபிடிக்கப்படாவிட்டால், தி.மு.க., சார்பில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என, எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Manikandan Kaliyappan

By Manikandan Kaliyappan

ஊடகங்களில், 5 ஆண்டுகள் பணி அனுபம் பெற்றிருக்கிறேன். அரசியல் , க்ரைம், ஸ்டோரி என செய்திகளை சுவாரசியமாக கொடுப்பதில் ஆர்வம் அதிகம். சமூக வலைதளங்களின் டிரெண்டை புரிந்துகொண்டு செய்திகளை வழங்குவதில் தேர்ந்த அனுபவம் உண்டு. தற்போது "REPUBLIC-தமிழ்" ஊடகத்தில் இணை ஆசிரியராக பணியாற்றுகிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 day ago at 1 day ago