Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

தமிழ் திரையுலகில் அதிரடியான, துணிச்சலான கருத்துக்களால் எப்போதும் பரபரப்பை ஏற்படுத்தி வந்த மூத்த தயாரிப்பாளரும், இயக்குநருமான கே.ராஜன் (70) குடும்பப் பிரச்சினை காரணமாகச் சென்னையில் உள்ள அடையாறு கூவம் ஆற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் ஒட்டுமொத்தத் திரையுலகையும், ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையினர், ஆற்றில் இருந்து அவரது உடலை மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இவர்களது மரணம் குறித்து போலீஸார் தற்போது தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

-1983 ஆம் ஆண்டு சுரேஷ் நடிப்பில் வெளியான ‘பிரம்மச்சாரிகள்’ என்ற திரைப்படத்தைத் தயாரித்ததன் மூலம் கே.ராஜன் தனது சினிமா வாழ்க்கையைத் தொடங்கினார். கணேஷ் சினி ஆர்ட்ஸ் நிறுவனத்துடன் இணைந்து பல படங்களை உருவாக்கினார்.

இயக்குநராக 1991 இல் நிழல்கள் ரவி மற்றும் சரத்குமார் நடிப்பில் வெளியான ‘நம்ம ஊரு மாரியம்மா’ என்ற திரைப்படத்தை இயக்கி இயக்குநராகவும் முத்திரை பதித்தார். பின்னர் 2005 இல் ‘உணர்ச்சிகள்’ திரைப்படத்தையும் இயக்கினார். இயக்குநர் செந்தில்நாதனுக்காக ‘தங்கமான தங்கச்சி’ (1991), ‘சின்ன பூவை கில்லாதே’ (1992) போன்ற படங்களுக்குக் கதை, திரைக்கதை எழுத்தாளராகப் பணியாற்றினார்.

இதையும் படியுங்க  "22 வருஷ பழக்கம்.. என் குடும்பத்துல நடந்த சோகம்!" - மேடையில் ஓப்பனாக உடைந்த RJ பாலாஜி!

மைக்கேல் ராஜ், கபடி கபடி, கிரிவலம், பகிரி, மற்றும் சமீபத்தில் வெளியான அஜித் குமாரின் ‘துணிவு’, செல்வராகவனின் ‘பகாசுரன்’ உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து ரசிகர்களுக்குப் பரிச்சயமானார்.

2000 ஆம் ஆண்டில் சென்னை விநியோகஸ்தர்கள் சங்கத்தின் தலைவராகப் பொறுப்பேற்றுத் திரையுலக நிர்வாகத்திலும் முக்கியப் பங்காற்றினார். தனது மகன் பிரபுகாந்தையும் ‘அவள் பாவம்’ படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகப்படுத்தினார்.

கே.ராஜன் என்றாலே சினிமா ஆடியோ வெளியீட்டு விழாக்களில் எதற்கும் அஞ்சாமல் பேசும் அவரது கணீரென்ற குரல்தான் நினைவுக்கு வரும். தமிழ் சினிமா நஷ்டத்தைச் சந்திப்பது குறித்தும், தயாரிப்பாளர்களின் நலம் குறித்தும் அவர் பேசிய பல விஷயங்கள் விவாதப் பொருளாகின.

நயன்தாரா போன்ற முன்னணி நடிகைகள் படங்களுக்கு அதிக சம்பளம் வாங்குவதைக் கடுமையாக எதிர்த்தார். கமல் ஹாசன், தனுஷ், கௌதம் வாசுதேவ் மேனன் ஆகியோரது ‘ஆயிரத்தில் ஒருவன்’, ‘என்னை நோக்கி பாயும் தோட்டா’ போன்ற நஷ்டம் ஏற்படுத்திய படங்களை மேடைகளிலேயே விமர்சித்தார்.

இதையும் படியுங்க  "புகழுக்கு அடிமையானேன், எல்லாமே முடிந்தது என அழுதேன்: சமந்தாவின் எமோஷனல் பேட்டி!"

2001-ல் சக தயாரிப்பாளர் கேயாரை தாக்கிய வழக்கில் கைது செய்யப்பட்டார். 2019-ல் ‘மீ டூ’ விவகாரத்தில் சின்மயிக்கு எதிராகவும், மற்றொரு நிகழ்வில் இயக்குநர் பா.ரஞ்சித்தின் கருத்துகளுக்கு எதிராகவும் பேசி பரபரப்பை ஏற்படுத்தினார். பாரதிராஜா, யோகி பாபு மற்றும் விலங்குகள் நல வாரியம் எனப் பலரையும் பொதுவெளியில் விமர்சிக்கத் தயங்கியதில்லை.

திரைப்பட விவாதங்களிலும், மேடைகளிலும் எப்போதும் சுறுசுறுப்பாகவும், கோபமாகவும் காணப்பட்ட ஒரு மூத்த கலைஞர், குடும்பப் பிரச்சினை காரணமாக இப்படியொரு தற்கொலை முடிவை எடுத்திருப்பது சினிமா வட்டாரத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது மறைவுக்குப் பல தயாரிப்பாளர்களும், இயக்குநர்களும், திரையுலகினரும் தங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 months ago at 3 months ago