Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

vs babu

கொளத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ். பாபுவின் உடல்நிலை தற்போது சீராக இருப்பதாகவும், அவர் அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகளுக்கு நல்ல முறையில் ஒத்துழைத்து வருவதாகவும் தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார்.

அவரது உடல்நிலையில் தொடர்ந்து முன்னேற்றம் ஏற்பட்டு வருவதால், இன்னும் ஓரிரு நாட்களில் அவர் பூரண குணமடைந்து வீடு திரும்புவார் என மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.

சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சுவாசக் கோளாறு காரணமாக அனுமதிக்கப்பட்ட வி.எஸ். பாபு, தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) மருத்துவர்களின் கண்காணிப்பில் இருந்து வருகிறார். கடந்த செப்டம்பர் 9-ஆம் தேதி மூச்சுத்திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு, செயற்கை சுவாச உதவி உள்ளிட்ட தீவிர சிகிச்சைகள் வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

பல்துறை மருத்துவ நிபுணர்கள் அடங்கிய குழுவினர் அவரைத் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். அவருக்கு நுரையீரல் தொற்று ஏற்பட்டு, அதற்கான சிறப்பு சிகிச்சைகளும் அளிக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வி.எஸ். பாபுவின் உடல்நிலை குறித்து கடந்த 19 நாட்களாக மருத்துவமனை நிர்வாகம் மற்றும் அரசுத் தரப்பிலிருந்து புதிய அதிகாரப்பூர்வ மருத்துவ அறிக்கை வெளியாகவில்லை. இதனால், அவரது உடல்நிலை குறித்துப் பல்வேறு கேள்விகளும் விவாதங்களும் எழுந்தன.

இதையும் படியுங்க  "கைதா? முன்ஜாமீனா? திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் வழக்கில் கோர்ட் கொடுத்த அதிரடி திருப்பம்!"

அதிமுக முன்னாள் அமைச்சர் இன்பதுரை மற்றும் புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி ஆகியோர், வி.எஸ். பாபுவின் உடல்நிலை குறித்த உண்மை நிலவரத்தைத் தமிழக அரசு வெளிப்படையாகத் தெரிவிக்க வேண்டும் என வலியுறுத்தியிருந்தனர்.

இந்நிலையில், சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் அருண்ராஜிடம், வி.எஸ். பாபுவின் உடல்நிலை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. வடபழனியில் சென்னை மாநகரின் கொசு ஒழிப்பு நடவடிக்கைகள் மற்றும் பருவமழை முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் குறித்து விளக்கமளித்துக் கொண்டிருந்தபோது செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர், வி.எஸ். பாபுவின் உடல்நிலை சீராக இருப்பதாகவும், அவர் தொடர்ந்து குணமடைந்து வருவதாகவும் தெரிவித்தார். இதன் மூலம், அவரது உடல்நிலை குறித்து சமூக வலைத்தளங்களில் பரவி வந்த வதந்திகளுக்கும் கேள்விகளுக்கும் விளக்கம் அளித்துள்ளார்.

வி.எஸ். பாபு நீண்ட நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதால், அவரது உடல்நிலை குறித்து கொளத்தூர் தொகுதி மக்களும் தமிழக வெற்றிக் கழகத்தினரும் கவலையடைந்திருந்தனர். இந்தச் சூழலில், அவர் விரைவில் குணமடைந்து வீடு திரும்புவார் என அமைச்சர் தெரிவித்திருப்பது நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படியுங்க  செந்தில் பாலாஜியை விசாரிக்க கூடாது..! பாஜக சப்போர்ட்..? திமுக ரகசிய உறவால் கவர்னர் பிடிவாதம்..?!

அரசியல் ரீதியாகவும் வி.எஸ். பாபுவின் உடல்நிலை முக்கியத்துவம் பெற்றுள்ளது. கடந்த சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் போட்டியிட்டு, திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மு.க. ஸ்டாலினை கொளத்தூர் தொகுதியில் தோற்கடித்து வெற்றி பெற்றவர் வி.எஸ். பாபு. இதனால், அவரது உடல்நிலை குறித்த தகவல்கள் அரசியல் வட்டாரங்களிலும் கவனிக்கப்பட்டு வருகின்றன.

Eswari

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 days ago at 4 days ago