Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

Coffee

காபி அருந்துவது மனிதர்களின் கல்லீரல் ஆரோக்கியத்திற்கு பல நன்மைகளை வழங்குவதாக மருத்துவ ஆய்வுகளில் தெரிய வந்திருக்கிறது. உலகளவில் சுமார் மூன்றரை லட்சத்துக்கும் அதிகமான மக்களிடம் 13 ஆண்டுகளாக நடத்தப்பட்ட விரிவான ஆய்வில் காபி குடிக்கும் பழக்கம் உள்ளவர்களுக்கு கல்லீரல் இழைநார் வளர்ச்சி எனப்படும் சிரோசிஸ், கல்லீரல் புற்றுநோய் மற்றும் கல்லீரல் சார்ந்த இறப்புகள் ஏற்படுவதற்கான ஆபத்து கணிசமாக குறைவது தெரிய வந்துள்ளது.

குறிப்பாக வழக்கமான காபின் கொண்ட காபி மட்டுமல்லாமல், காபின் நீக்கப்பட்ட டீ காப் காபியும் கூட இது போன்ற பலன்களை தருவது தெரிய வருகிறது. காபியில் உள்ள ஆன்டி ஆக்சிடன்ட்கள் மற்றும் பாலிபினால்கள் இதற்கு முக்கிய காரணமாக விளங்குவதாக நிபுணர்கள் விளக்குகிறார்கள்.

அதே சமயம் கல்லீரல் ஆரோக்கியத்துக்கு என காபி குடிப்பதில் பிரத்தயேகமான அளவுகோள் எதுவும் இல்லை என்றாலும் ஆரோக்கியமான பெரியவர்கள் ஒரு நாளைக்கு இரண்டு முதல் மூன்று கப் வரை காபி அருந்துவது பாதுகாப்பான மற்றும் ஏற்கத்தக்க அளவாக கருதப்படுகிறது.

இதையும் படியுங்க  டீ குடித்த கேப்பில் ‘எஸ்கேப்’… கர்நாடகா வரை பறக்கும் தனிப்படை! திணறும் போலீஸ் பட்டாளம்!

தினசரி காபி நுகர்வு 400 மில்லி இருப்பது உடல் நலத்திற்கு நல்லது. இருப்பினும் காபியை அளவுக்கு அதிகமாக ஐந்து கப்புகளுக்கு மேல் பருகுவது, காபின் ஒவ்வாமை உள்ளவர்களுக்கு, பக்க விளைவுகளை ஏற்படுத்தலாம் என்றும் மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள்.

மேலும் காபியில் அதிகளவு சர்க்கரை, சுவை ஊட்டப்பட்ட சிறப்புகள் அல்லது கிரீம்களை சேர்ப்பது, கலோரி அளவை அதிகரித்து, குறிப்பாக கல்லீரல் கொழுப்பு பிரச்சனை அல்லது உடல் பருமன் உள்ளவர்களுக்கு, எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்த கூடும் என்றும் மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

காபி என்பது நமது சீரான வாழ்க்கை முறையின் ஒரு சிறிய அங்கமே தவிர அது எந்த ஒரு கல்லீரல் நோய்க்கான முழுமையான சிகிச்சையோ அல்லது தடுப்பு மருந்தோ அல்ல என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். கல்லீரலை பாதுகாக்க சீரான உணவு முறை, வழக்கமான உடல் பயிற்சி, சரியான உடல் இடையை பராமரித்தல், மதுவை தவிர்த்தல் மற்றும் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருத்தல் போன்ற ஆரோக்கியமான பழக்க வழக்கங்களே மிக அவசியமானவை என்று மருத்துவ நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர்.

இதையும் படியுங்க  மூளை மந்தமா இருக்கா? கவனம் சிதறுதா..? மூளைக்கும் 'பவர் பேங்க்' கிரியேட்டின்..! கவனம், நினைவாற்றலை அதிகரிக்கும் ரகசியம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 week ago at 1 week ago