திமுகவை உலுக்கிய அதே உதயச்சந்திரன், தற்போது ஆதவ் அர்ஜுனா, ஜான் ஆரோக்கியசாமி, கலைச்செல்வன் ஆகிய ‘மூவரணி’ மூலம் கோட்டையை ஆட்டிப்படைப்பதாக அதிர வைக்கும் தகவல்கள் கசிகின்றன. திருமாவின் சிபாரிசுகளும், ஐஏஎஸ் அதிகாரிகளின் நியமனத்தில் புதுப் புயலைக் கிளப்பியுள்ளன.
திமுக அரசு 2021-ல் ஆட்சிக்கு வந்தபோது, உதயச்சந்திரன் ஐஏஎஸ் முதலமைச்சரின் முதன்மைச் செயலாளராக நியமிக்கப்பட்டார். பின்னர் அவர் நிதித்துறைச் செயலாளராக மாற்றப்பட்டார். அதிமுக ஆட்சிக்காலத்தில் ‘கூவத்தூர்’ பாணியில் சட்டமன்ற உறுப்பினர்கள் அதிருப்தி அடைந்தது போல, திமுக ஆட்சிக்காலத்திலும் நிதி ஒதுக்கீடு கிடைக்காமல் தங்களது தொகுதிகளில் பணிகளைச் செய்ய முடியாமல் பல திமுக எம்.எல்.ஏ-க்களும் அமைச்சர்களும் தவித்தனர்.

மு.க.ஸ்டாலின் அவர்கள் 2006-2011 திமுக ஆட்சிக்காலத்தில் உள்ளாட்சித்துறை அமைச்சராகவும், பின்னர் துணை முதலமைச்சராகவும் இருந்தபோதே உதயச்சந்திரனுடன் நெருக்கமானார் ஸ்டாலின். அமைச்சர்கள், மூத்த கட்சி நிர்வாகிகள் யார் சொன்னாலும் கேட்காத ஸ்டாலின், உதயச்சந்திரன் சொல்வதை கேட்பதில் அசைக்க முடியாத முன்னுரிமை கொடுத்தார். அந்த அளவுக்கு முதலமைச்சரின் ‘நம்பிக்கைக்குரிய நிழலாக’ அவர் திகழ்ந்தார். கோட்டைக்குள் முதலமைச்சருக்கு அடுத்தபடியாக அவரே ‘சூப்பர் சிஎம்’ போலச் செயல்படுகிறார் என்று அமைச்சர்களும், ஸ்டாலினின் குடும்பத்தினரும் அதிருப்தி அடைந்தனர்.
அதே உதயச்சந்திரன் இப்போது நிதித்துறையில் இருந்து மாற்றப்பட்டு, தவெக ஆட்சியில் தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளார். திமுகவில் சூப்பர் சிஎம் என அழைக்கப்பட்ட, ஸ்டாலினுக்கு நெருக்கமாக இருந்த அதே உதயசந்திரனுக்கு தவெக ஆட்சி நிர்வாகத்திலும் முக்கியத்துவம் கொடுப்பது தான் அதிர்ச்சி கலந்த ஆச்சர்யம் என்கிறார்கள் கோட்டை வட்டாரத்தினர். உதயசந்திரன் ஆலோசனையின் பெயரிலேயே தவெக ஆட்சி நிர்வாகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் முக்கிய நிர்வாகப்பதவிகளில் அமர்த்தப்படுகிறார்கள் என தகவல். உதயசந்திரன் ஐடியா கொடுக்க, அதை அப்படியே, அமைச்சர் ஆதவ் அர்ஜூனா, ஜான் ஆரோக்கியசாமி, முன்னாள் பத்திரிகையாளர் கலைச்செல்வன் ஆகியோர் மூலம் அப்படியே ஐஏஎஸ்கள் நியமிக்கப்படுவதாக கோட்டை வட்டாரத்தினர் குமுறுகின்றனர்.

அதேபோல முதல்வராக விஜய் பொறுப்பேற்ற கையோடு, தனி செயலராக இரண்டு ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளை நியமிக்கப்பட்டனர். அதில் ஒரு ஐ.ஏ.எஸ்., அதிகாரியான லட்சுமி ப்ரியா, வி.சி.க., தலைவர் திருமாவளவனின் சிபாரி என்கிறார்கள். கடந்த திமுக ஆட்சியில் முதல்வர் ஸ்டாலினை சுற்றியிருந்த ஐ.ஏ.எஸ், அதிகாரிகள் யாருமே திருமாவுக்கு தெரிந்தவர்கள் இல்லை. அதனால் தனக்கு ஆக வேண்டிய காரியங்களை சாதித்துக் கொள்ள, ரொம்ப திணறிப்போய் இருக்கிறார்.
அதனால் இந்தமுறை தனக்கு நெருக்கமான அதிகாரியான லட்சுமி ப்ரியாவை ஆதவ், கலை, ஜான் வகையறாக்கள் மூலம் திருமா உயர் பதவிக்கு கொண்டு வந்ததோடு மட்டுமல்லாமல், தனக்கான காரியங்களையும் செய்ய, திருமாவளவன் திட்டமிட்டு இருக்கிறார் என்கிறார்கள்.

வட் ப்ரோ.. இட்ஸ் வெரி ராங் ப்ரோ..!
