Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

Veeramani

ஜெம் கிரானைட் வீரமணி தொடர்பான பாலியல் வழக்கு விவகாரம் தற்போது தமிழக அரசியல், காவல்துறை வட்டாரத்தில் தொடர்ந்து பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த வழக்கின் விசாரணை நிலவரம், அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் விஜய் நேரடியாக கண்காணித்து வருகிறார்.

காவல்துறைக்கு பொறுப்பு வகிக்கும் முதலமைச்சர் விஜய், வீரமணி வழக்கு தொடர்பாக சென்னை காவல்துறையின் முக்கிய அதிகாரி ஒருவரிடம் நேரடியாக விசாரணையின் முன்னேற்றம் குறித்து கேட்டறிந்து வருவதாகவும், வழக்கை எப்படி சட்டரீதியாக முன்னெடுப்பது என்பது குறித்தும் ஆலோசித்து வருகிறார்.

மூன்று கோணங்களில் விசாரணை
வீரமணி தொடர்பான விவகாரத்தில் தற்போது மூன்று வெவ்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகின்றன. முதலாவதாக, வீரமணி மீது ஏற்கனவே பதிவு செய்யப்பட்டுள்ள பல்வேறு வழக்குகள் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. இரண்டாவதாக, இந்த வழக்குகளை முறையாக விசாரிக்காமல் தாமதப்படுத்தியதாக கூறப்படும் காவல்துறை அதிகாரிகள் குறித்தும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மூன்றாவதாக, வீரமணி தொடர்பான வழக்குகளில் சமரசம் செய்வதற்காக பணம் கைமாறியதா என்பது குறித்தும் தனியாக விசாரணை நடைபெற்று வருகிறது.

இதையும் படியுங்க  "அரசியல் தகுதி அவ்வளவுதானா?" - முதல்வர் விஜய்க்கு கனிமொழி  சோசியல் மீடியாவில் அனல் பறக்கும் பதிலடி!
Veeramani - Vijay

கூடுதல் ஆணையர் தலைமையில் சிறப்பு குழு
வீரமணி வழக்குகளில் சமரசத்திற்காக பணம் கைமாறியதாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பாக, சென்னை மாநகர காவல்துறை கூடுதல் ஆணையர் நரேந்திர நாயர் தலைமையில் சிறப்பு குழு அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த குழு பணப்பரிமாற்றம் தொடர்பான தகவல்கள், வழக்குகளை கையாண்ட விதம், சம்பந்தப்பட்ட நபர்களுக்கு இடையிலான தொடர்புகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை ஆய்வு செய்யப்படுகிறது.

விசாரணை நிலவரம் கேட்கும் முதல்வர்
இந்நிலையில், இந்த ஒட்டுமொத்த விசாரணையின் முன்னேற்றம் குறித்தும் முதலமைச்சர் விஜய் தொடர்ந்து தகவல்களை கேட்டறிந்து வருகிறார். குறிப்பாக, சென்னை மாநகர காவல்துறையின் முக்கிய அதிகாரிகளிடம் வழக்கின் தற்போதைய நிலவரம், விசாரணையில் கிடைத்துள்ள தகவல்கள், அடுத்தகட்ட சட்ட நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் நேரடியாக கேட்டறிகிறார்.

இதனால் வீரமணி வழக்கு விவகாரம் காவல்துறையின் வழக்கமான விசாரணையை தாண்டி, அரசின் உயர் மட்டத்திலும் கவனம் செலுத்தப்படும் விவகாரமாக மாறியுள்ளது.

Veeramani

செட்டில்மெண்ட் குற்றச்சாட்டு
இதற்கிடையே, வீரமணி மீதான வழக்குகள் வெளியில் வராமல் தடுப்பதற்காக ஆரம்பகட்டத்தில் சிலரிடம் சமரசம் செய்யப்பட்டதாக ஒரு குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது. அந்த சமரச நடவடிக்கைகளில் பணப்பரிமாற்றம் நடைபெற்றதாகவும் கூறப்படுகிறது. இந்த செட்டில்மெண்ட் விவகாரங்களை சென்னையைச் சேர்ந்த பிரபல ஆடிட்டர் ஒருவர் கையாண்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த குற்றச்சாட்டுகள் தொடர்பாகவும் காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.

இதையும் படியுங்க  "விஜய் ஆட்சியில் 'ஆட்ட நாயகன்' சபாநாயகர்… மு.க.ஸ்டாலினே சொன்ன அந்த 'ஒரே' வார்த்தை!"

கைது செய்யப்படுவாரா ஆடிட்டர்?
வீரமணி வழக்கு தொடர்பான இந்த சமரச விவகாரத்தில் தொடர்புடையதாக கூறப்படும் அந்த ஆடிட்டரையும் காவல்துறை விரைவில் கைது செய்யக்கூடும் என்று கூறப்படுகிறது. வீரமணி தொடர்பான வழக்குகள், அவற்றை விசாரித்த அதிகாரிகளின் செயல்பாடுகள், சமரசத்திற்காக பணம் கைமாறியதாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் என பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்று வரும் நிலையில், அடுத்தகட்டத்தில் காவல்துறை எத்தகைய நடவடிக்கையை மேற்கொள்ளும் என்பது அரசியல் மற்றும் காவல்துறை வட்டாரங்களில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Naruvi

By Naruvi

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 hours ago at 3 hours ago