கன்னியாகுமரி ‘ரேட் கார்டு’ ஆடியோ விவகாரம் மதுரை கிளையில் DVAC விசாரணை வரைக்கும் போயிருக்கும் நிலையில்,
இப்போது திருப்பத்தூர் மாவட்டத்திலிருந்து இன்னொரு பகீர் கிளம்பியிருக்கிறது. இங்கேயும் அரசு வழக்கறிஞர் நியமனத்தில் ‘பல லட்சம் கைமாறியது’ முறையாக வழக்கறிஞர்கள் நியமிக்கப்படவில்லை என்கிற அந்த புகார் விரைவில் சென்னை ஹைகோர்ட் வாசலைத் தட்ட இருக்கிறதாம்
முதலில் புகார் சொன்னது யார்? விழுப்புரம் சாலாமேடு பகுதியைச் சேர்ந்த வழக்கறிஞர் ஞானசௌந்தரி. இவர் சாதாரண வக்கீல் இல்லை… தமிழக வெற்றிக் கழகத்தின் வழக்கறிஞர் அணி இணைச் செயலாளராக இருந்தவர் அதாவது, ஆளும் கட்சியைச் சேர்ந்தவரே ஆளும் அரசு மீது மனு போட்டிருந்தார் அதில்”தமிழ்நாடு அரசு ஜூன் 5-ம் தேதி அரசு வழக்கறிஞர் நியமனத்துக்கு அறிவிப்பு வெளியிட்டது.
விழுப்புரம் தவெக மாவட்டச் செயலாளர் மோகன்ராஜ் சொன்னதால், மகளிர் நீதிமன்ற சிறப்பு வழக்கறிஞர் பணிக்கும், மாவட்ட முதன்மை நீதிமன்ற கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் பணிக்கும் விண்ணப்பித்தேன்.” விண்ணப்பிக்க கடைசி தேதி ஜூன் 29 மாலை. ஆனால், அன்று பிற்பகலிலேயே வாட்ஸ் அப்பில் ‘நியமனப் பட்டியல்’ சுற்ற ஆரம்பித்துவிட்டதை . மாவட்டச் செயலாளரிடம் கேட்டால், “அதுதான் ஃபைனல் லிஸ்ட்” என்று சொல்ல, ஷாக்கான ஞானசௌந்தரி “ஒரு அரசு வழக்கறிஞர் நியமனத்துக்கு ரூ.5 லட்சம் முதல் ரூ.30 லட்சம் வரை லஞ்சம் வாங்கிக்கொண்டு, பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த வழக்கறிஞர்களே நியமிக்கப்படுகிறார்கள். மாவட்டச் செயலாளர் மோகன்ராஜ், மாவட்ட ஆட்சியர் கூட்டணியில், அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் பரிந்துரையில் இந்த நியமனம் நடந்துள்ளது.” ‘விஜய் சார்… நீங்கதான் பதில் சொல்லணும்!'” லஞ்சம், ஊழலை அனுமதிக்க மாட்டேன் என்று முதலமைச்சர் விஜய் சொல்கிறார். ஆனால், சட்டத்துறைச் செயலாளர், மாவட்ட ஆட்சியர், அமைச்சர் ஆனந்த் ஆகியோர் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய பொறுப்பு முதல்வருக்கு உள்ளது” என்று மனுவில் நேரடியாகவே குற்றம் சாட்டியிருந்தார்
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், அரசு தரப்பில் தற்போதைய நியமனங்கள் தற்காலிகமானவை என்றும், விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படும் என்றும் விளக்கம் அளிக்கப்பட்டதை அடுத்து வழக்கை முடித்து வைத்தது அத்தோடு ஞானசௌந்திரியை கட்சியை விட்டு நீக்கியும் விட்டது ஆளும் தரப்பில் இந்த விவகாரங்கள் அடங்குவதற்குள்

திருப்பத்தூர் அரசு வழக்கறிஞர்கள் நியமனத்தில் முறைகேடு குறித்து விசாரிக்க வேண்டும் என்று தற்போது சில வழக்கறிஞர்கள் தரப்பில் பேச்சுக்கள் எழ தொடங்கி இருக்கிறது
குமரி டு திருப்பத்தூர்… ஒரே ஃபார்முலா?
குமரியில் தவெக நிர்வாகி அனீஸ் ‘ரூ.15 லட்சம், பெண் என்பதால் ரூ.2 லட்சம் டிஸ்கவுண்ட்’ என்று பேரம் பேசிய ஆடியோ வெளியாகி, அது மதுரை கிளையில் நீதிபதி முருகன் முன் “லஞ்சம் கொடுத்துட்டு வந்தவங்க சட்டத்தைக் காப்பாத்துவாங்களா?” என்ற காட்டமான கேள்வி வரை போய், இப்போது DVAC விசாரணைக்கு உத்தரவாகியிருக்கிறது.
அதே பாணியில், திருப்பத்தூர் தரப்பிலும் ‘ரூ.5 லட்சம் முதல் ரூ.30 லட்சம் வரை ரேட்’ புகார் எழுந்து தற்போது வரை தவெக வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
நியமனத்தின் போது சமூக வலைதளங்களில் ஒரு தரப்பு, “பணத்தை பெற்றுக் கொண்டு ஆடு திருட்டு வழக்கில் சிக்கிய வக்கீலுக்கே அரசு பிளீடர் பதவியா?” என்று கிண்டலடித்து சர்சையானதால் மாற்றப்பட்டார் அதே வேளையில் திருப்பத்தூர் மாவட்டத்தில் 6 அரசு வழக்கறிஞர்கள் வரை நியமனம் செய்திருக்கிறார்கள் , இவர்களில் சிலர் முறையாக சட்டம் படிக்கவில்லை என்றும் அவர்களிடமும் 15 லட்சம் முதல் 20 லட்சங்கள் வரை , எம்எல்ஏ மற்றும் மாவட்ட செயலாளர்கள் பணத்தை பெற்றுக் கொண்டு பணி ஆணை வழங்கினார்கள் இந்த விவகாரத்திலும் DVAC விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்பதுதான் அந்த மற்றோர் தரப்பினர் சலசலப்பு
ஆக, குமரி ஃபைல் DVAC கைக்கு போயிருக்க, திருப்பத்தூர் ஃபைல் சென்னை ஹைகோர்ட் பெஞ்சுக்கு போக ரெடியாகி வருகிறதாம் . அடுத்து வெடிக்கப்போவது எந்த மாவட்டமோ…?
