”மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்த முதலமைச்சர் விஜய் மனித மாண்புகளை காக்க வேண்டுமே தவிர, மற்ற கட்சிகளை கேலி செய்வதும் ஏளனமாக பேசுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது” என அதிமுக புதுச்சேரி மாநில செயலாளர் அன்பழகன் கண்டனம் தெரிவித்துள்ளார்
அதிமுக அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ”மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951- ல் குறிப்பிட்டுள்ளபடி தற்காலிக சபாநாயகரோ அல்லது நிரந்தர சபாநாயகரோ தனது கட்சி வேட்பாளருக்கோ அல்லது கூட்டணி கட்சி வேட்பாளர்களின் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடக்கூடாது என்று குறிப்பிடப்படவில்லை.
இந்த நிலையில் சபாநாயகர் அன்பழகன் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுவது தேர்தல் விதிமுறைகளுக்கு எதிரானது இது சம்பந்தமாக நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க போவதாக முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்த அன்பழகன் சபாநாயகர் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடக்கூடாது என்று எந்த சட்டத்தில் இருக்கிறது என்று நாராயணசாமி ஆதாரப்பூர்வமாக தெரிவித்தால் தனது பதவி ராஜினாமா செய்ய தயாராக இருப்பதாகவும், அப்படி இல்லாத பட்சத்தில் அரசியல் வாழ்க்கையிலிருந்து நாராயணசாமி ஒதுங்கிக் கொள்வாரா? என கேள்வி எழுப்பினார்,

தொடர்ந்து தனது பெயருக்கு கலங்கம் விளைவிக்கும் வகையில் அவதூறு பரப்பினால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும் என்றும் எச்சரித்தார்.
புதுச்சேரியில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை விட நியமிக்கப்பட்ட துணைநிலை ஆளுநருக்கு தான் அதிகாரம் என்று நீதிமன்றம் வரை சென்று தீர்ப்பு வாங்கி வந்தவர் தான் முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி என்று சுட்டிக்காட்டிய அன்பழகன், ஒரு அதிகாரியை இடம் மாற்றம் செய்ய கூட ஆளுநரிடம் அனுமதி வாங்க வேண்டும் என்ற நிலையை உருவாக்கியவரே நாராயணசாமி தான் என்றும் குற்றம் சாட்டினார். எனவே தன்னைப் பற்றியும் தனது கட்சியை பற்றியும் பேச நாராயணசாமிக்கு எந்தவித உரிமையும் இல்லை என்று குறிப்பிட்டார்.
ஏதோ ஒரு சூழ்நிலையில் கவர்ச்சிக்காகவோ அல்லது மக்களை ஏமாற்றி விஜய் ஆட்சிக்கு வந்து விட்டார். ஆனால் மற்ற கட்சிகளை பார்த்து கேலி செய்வது, ஏளனமாக பேசுவது என்பது ஏற்றுக் கூடியது அல்ல என்றும் அவர் குறிப்பிட்டார்.
முதலமைச்சர் நிவாரண நிதியில் முறைகேடு என்று கூறும் திமுக மாநில அமைப்பாளர் சிவா எப்போதாவது அரசை எதிர்த்து போராட்டம் செய்திருப்பாரா? என்று கேள்வி எழுப்பிய அவர் கடந்த ஐந்தாண்டு காலத்தில்
என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் நிழல் கட்சியாக தான் திமுக இருந்தது என்றும் விமர்சித்தார்.
-பி.சக்திவேல்- புதுச்சேரி செய்தியாளர்
