பிரபல லாட்டரி அதிபர் மார்ட்டினின் மனைவி லீமா ரோஸ் இந்திய ஜனநாயக கட்சியின் மாநில இணைப்பொதுச்செயலாளராக இருந்து வந்த நிலையில் திடீரென விலகி எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். இவர் அதிமுகவில் இணைந்ததில் இருந்தே கடுமையான விமர்சனங்களையும் குற்றச்சாட்டுகளையும் கே.சி.பழனிசாமி முன்வைத்து வந்தார். இந்நிலையில் ஜாம்பவான்கள் வேலுமணி, சண்முகம், நத்தம் விஸ்வநாதன் ஆகியோரை கட்சி பொறுப்புகளில் தூக்கி எறிந்த எடப்பாடி பழனிசாமியால் லீமாரோஸ் பதவியிலிருந்து நீக்க முடியவில்லை என்ற காரணத்தை கே.சி.பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சி.பழனிசாமி வெளியிடடுள்ள எக்ஸ் தளத்தில்: லீமா ரோஸ் இந்திய ஜன நாயக கட்சியில் மாநில மகளிர் அணி செயலாளராக இருந்தார். அவருக்கு MLA எலெக்ஷனில் போட்டியிட்டு சட்டசபை போக விரும்பினார். அந்த கட்சியின் தலைவர் பாரி வேந்தர் அதிமுகவுடன் கூட்டணி முடிவு ஆகவில்லை. முடிவு ஆனபின் லீமா ரோஸ் சொந்த ஊரான திருவாடனையில் நிற்க சொன்னார். அது அந்த அம்மாவிற்கு ஒத்து வரவில்லை. அதனால் IJKலிருந்து விலகி அதிமுக வில் சேர முடிவு செய்தார் அதற்காக கோவை வேலுமணியினை சந்தித்து 50 C கொடுத்தார்.
அவர் எடப்பாடியிடம் அழைத்து சென்று கட்சியில் சேர ஏற்பாடு செய்தார். அதற்கு party fund 200c கொடுத்தார். எடப்பாடி லீமாரோஸி ற்கு மகளிர் அணி மாநில துணை பொது செயலாளர் பதவி கொடுத்தார். மேலும் அவர் சார்ந்த சமுதாய ஒட்டுக்கள் அதிகம் உள்ள குன்னம் தொகுதியினை கொடுப்பதாக உறுதி அளித்தார். லீமா ரோஸ் குன்னம் வேண்டாம் லால்குடி தொகுதி தான் வேண்டும் என கேட்டு வாங்கினார். அதற்காக மேலும் ரூ.25 கோடி கொடுத்தார். லால்குடி தொடர்ந்து திமுகவே வெற்றி பெறும் நிலை இருந்தது.
மேலும் லீமா ரோஸ் லால்குடி தொகுதிக்கு மட்டுமல்ல அருகிலுள்ள ஸ்ரீரங்கம், மண்ணச்சநல்லூர், முசிறி, உட்பட 6 தொகுதிகளின் தேர்தல் செலவுகளை பார்த்து கொள்கிறேன் என உறுதி அளித்தார். திமுக, தவெக இரண்டையும் தோற்கடித்து அதிமுக MLA ஆனார். அரசியல் அனுபவம் இல்லாததால் மீடியா முன்னாள் உளறி கொட்டினார். வேலுமணி, மருமகன் ரெட்டியுடன் சேர்ந்து கட்சிக்கு எதிரான வேலைகளும் செய்தார்.
ஜாம்பவான்கள் வேலுமணி, சண்முகம், நத்தம் விஸ்வநாதன் ஆகியோரை கட்சி பொறுப்புகளில் தூக்கி எறிந்த எடப்பாடியாரால் லீமாரோஸ் பதவியிலிருந்து நீக்க முடியவில்லை. அப்படி நீக்கினால் பாதி பணம் எடுத்து வையுங்கள் என கறாராக சொல்லிவிட்டாராம். அதனால் அவர் விஷயத்தில் எடப்பாடியார்
அடக்கி வாசிக்கிறார் என குறிப்பிட்டுள்ளார்.
