thiruma

சென்னை, பூந்தமல்லி, இவிபி அரங்கில் நடைபெற்ற “திருமா 35 – சமூகநீதியின் சகாப்தம்” பாராட்டு விழா, தமிழ்நாட்டு அரசியலில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது. விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல். திருமாவளவனின் 35 ஆண்டுகால அரசியல் பயணத்தைக் கொண்டாடும் வகையில் இந்த பிரம்மாண்ட மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த விழாவிற்கு வருகை தந்த தலைவர் திருமாவளவன், வழக்கமான வாகனத்தில் வராமல், சன்ரூஃப் வசதி கொண்ட நவீன டெஸ்லா காரில் வலம் வந்து தொண்டர்களுக்குக் கையசைத்து வரவேற்பைப் பெற்றார். மஞ்சள் பூக்களால் அலங்கரிக்கப்பட்ட அந்த காரில் அவர் வந்திறங்கிய காட்சி அரங்கை அசைத்துப் பார்த்தது.

ஆனால், தொண்டர்களையும் அரசியல் பார்வையாளர்களையும் பெருமளவில் ஈர்த்தது அந்த காரின் மாடல் மட்டுமல்ல; அதன் நம்பர் பிளேட்டில் இருந்த பதிவு எண்தான்!

கவனத்தை ஈர்த்த “TN 07 CM 2031” எண் பலகை. திருமாவளவன் பயணித்த அந்த நவீன காரின் முன்பகுதியிலும் பின்பகுதியிலும் TN 07 CM 2031 என்ற எண் பலகை பொருத்தப்பட்டிருந்தது. இந்த எண் சாதாரண பதிவெண் போலத் தெரிந்தாலும், இதில் ஒளிந்திருக்கும் அரசியல் குறியீடு விசிக தொண்டர்களிடையே பெரும் உத்வேகத்தையும், அரசியல் அரங்கில் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படியுங்க  திருமா-வின் நாக்கு… இரண்டு திசையில் சுழலும் காற்றாடி..!

TN 07 – தமிழ்நாடு மாநிலத்தைக் குறிக்கும் வகையில்… CM – முதலமைச்சர் என்ற சொல்லின் சுருக்கமாக… 2031-ஆம் ஆண்டு நடைபெறும் சட்டமன்றத் தேர்தலைக் குறிக்கும் விதமாக…

அதாவது, “2031-இல் தமிழ்நாட்டின் முதலமைச்சராக திருமாவளவன் பொறுப்பேற்பார்” என்ற விசிக தொண்டர்களின் நீண்டகாலக் கனவையும் எதிர்பார்ப்பையும் வெளிப்படுத்தும் விதமாக இந்த எண் பலகை வடிவமைக்கப்பட்டிருந்தது தெளிவாகத் தெரிகிறது.

Republic Tamil

காரில் இருந்து சன்ரூஃப் வழியே வெளியே வந்து தொண்டர்களை நோக்கிப் புன்னகையுடன் கையசைத்தவாறே திருமாவளவன் உள்நுழைந்த போது, பூந்தமல்லி இவிபி அரங்கம் முழுவதும் “எழுச்சித்தமிழர் வாழ்க!”, “அடுத்த இலக்கு 2031!” என்ற தொண்டர்களின் எழுச்சி முழக்கங்களால் அதிர்ந்தது.

கட்சித் தலைவருக்குத் தொண்டர்கள் அளித்த இந்த வித்தியாசமான, குறியீடுகள் நிறைந்த வரவேற்பு சமூக வலைதளங்களிலும் காட்டுத்தீ போலப் பரவி வைரலாகி வருகிறது.

சமூகநீதிப் பாதையில் 35 ஆண்டுகளை நிறைவு செய்து, தலித் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாக ஒலித்து வரும் தொல். திருமாவளவனின் அரசியல் நகர்வில், இந்த “CM 2031” குறியீடு விசிக-வின் அடுத்தகட்ட இலக்கையும், தொண்டர்களின் மனநிலையையும் மிகத் தெளிவாகப் படம் பிடித்துக் காட்டியுள்ளது.

இதையும் படியுங்க  "கோட்டைக்கு வெளியே குவிந்த இளைஞர் அலை.. உள்ளே உடைந்த ரகசியம்!" – இன்று நேர்ந்த பேரதிர்ச்சி!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *