Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

Republic Tamil

அக்டோபர் 6-ல் நடைபெறவுள்ள மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் சூடுபிடித்துள்ள நிலையில், எதிர்க்கட்சியான திமுக தலைவர் திமுக தலைவர் ஸ்டாலின் ஆர்வம் காட்டாமல் இருக்கிறார். வேட்பாளர்கள் அறிவிப்பிலும் அவரது பங்கு எதுவும் இல்லை. பிரச்சாரத்துக்கே அவர் வருவது சந்தேகம் என்கிறார்கள்.

வழக்கமாக இடைத்தேர்தல் என்றால் திமுக தலைமை அலுவலகமான அறிவாலயத்தில் நேர்காணல், மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டம் எனப் பரபரப்பு தொற்றிக்கொள்ளும். ஆனால், மதுராந்தகம் பரந்தாமன், தாராபுரம்- சுகன்யா வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்ட விதமே முற்றிலும் மாறுபட்டதாக இருந்தது. தலைவர் மு.க.ஸ்டாலின் இந்த வேட்பாளர் தேர்வு நடைமுறைகளில் நேரடியாகப் பங்கெடுக்கவே இல்லை என்று கூறப்படுகிறது. ஆரம்பத்தில் “கடந்த தேர்தலில் அதிமுக வென்ற, கூட்டணி பலமும் இல்லாத இந்த இரு தொகுதிகளின் இடைத்தேர்தலை திமுக புறக்கணிக்கலாமா?” என்ற ஆலோசனைகூட முன்வைக்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறது.

ஆனால், “களத்தில் நின்றே ஆக வேண்டும்; வெற்றிக்கு நான் பொறுப்பு” எனக்கூறி, வேட்பாளர்களை முறைப்படி முடிவு செய்து களமிறக்கியது உதயநிதி ஸ்டாலின் தரப்புதான். ஸ்டாலின் இந்த இடைத்தேர்தல் விவகாரத்தில் ஆர்வம் காட்டாமல் ஒதுங்கியிருப்பதற்குப் பின்னணியில் உளவுத்துறை, உள்கட்சி சர்வே ரிப்போர்ட்டுகள் முக்கியக் காரணமாக அமைந்ததாகத் தெரிகிறது.

இதையும் படியுங்க  "தவெக ஜெயிச்சா தான் வார்டு குறைகள் தீரும்!" – சிவகாசி மேடையில் அமைச்சர் கீர்த்தனா அதிரடி பேச்சு!
M.K. Stalin

கூட்டணி பலமின்மை
கடந்த பொதுத்தேர்தலில் கூட்டணி பலத்தோடு களம் கண்டபோதே அதிமுகவிடம் கைநழுவிய தொகுதிகள் இவை. தற்போது ஆளுங்கட்சியான தவெக, அதிமுக, இடதுசாரிகள் என பலமுனைப் போட்டி நிலவும் சூழலில் திமுக இங்கு கணிசமான சவாலைச் சந்திக்கிறது.

ரிப்போர்ட் தந்த அதிர்ச்சி
சமீபத்தில் ஸ்டாலினின் பார்வைக்குச் சென்ற கள ஆய்வறிக்கையில், தற்போதைய சூழலில் திமுக இந்த இரண்டு தொகுதிகளிலும் மூன்றாம் இடத்திற்குச் செல்லவே அதிக வாய்ப்பிருப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாம். தலைவர் அந்தஸ்தில் உள்ள ஒரு தலைவர் நேரில் வந்து பிரச்சாரம் செய்து, முடிவில் வெற்றி கிடைக்காமல் போனால் அது எதிர்வரும் நாடாளுமன்ற, உள்ளாட்சித் தேர்தல்களில் கட்சிக்கு பின்னடைவாக மாறக்கூடும். அதனால் தான், “களத்தில் சாதகமான ட்ரெண்ட் உருவாகும் வரை தலைவரின் பிரச்சாரப் பயணத்தை உறுதி செய்ய வேண்டாம்” என்பதில் ஸ்டாலின் உறுதியாக இருக்கிறார்.

Udhayanidhi's

உதயநிதிக்கு ‘அசிட் டெஸ்ட்’
தலைவர் ஒதுங்கிக் கொண்ட நிலையில், இந்த இரண்டு தொகுதிகளின் முழுப் பொறுப்பையும் உதயநிதி ஸ்டாலின் தரப்பே ஏற்றுக்கொண்டுள்ளது. வேட்பாளர்களைத் தேர்வு செய்தது முதல், பூத் கமிட்டி அமைப்பது, தேர்தல் நிதி பகிர்வு, தொகுதிப் பொறுப்பாளர்களை நியமிப்பது வரை அனைத்தும் உதயநிதி தரப்பு மேற்பார்வையில்தான் நடந்து வருகின்றன. “எப்படியாவது கள நிலவரத்தை நமக்குச் சாதகமாக மாற்றி, தலைவரை குறைந்தபட்சம் ஒரு நாள் பிரச்சாரத்துக்காவது கூட்டி வந்துவிட வேண்டும்” என்ற கட்டாயத்தில் வேட்பாளர்களும், உதயநிதியின் ஆதரவு நிர்வாகிகளும் இரவும் பகலுமாகத் தொகுதியில் முகாமிட்டு பணியாற்றி வருகின்றனர்.

இதையும் படியுங்க  வாயைத் திறந்தாலே பொய்… டம்மி முதலமைச்சரா விஜய்? பரந்தாமன் அதிரடி சரவெடி!

தலைவர் வருவாரா… ‘ஸ்கிப்’ செய்வாரா?
அதிமுக, ஆளும் தவெக மற்றும் நாதக இடையே கடும் போட்டி நிலவும் இந்தத் தனித்தொகுதிகளில், திமுக வேட்பாளர்கள் எடுக்கும் உழைப்பும் உதயநிதி தரப்பு வகுக்கும் வியூகங்களும் மட்டுமே ஸ்டாலினின் பிரச்சாரப் பயணத்தை தீர்மானிக்கும். நாளுக்கு நாள் மாறிவரும் அரசியல் சூழலில், கடைசி நேரத்தில் திமுக சாதகமான நிலையை எட்டுமா அல்லது ஸ்டாலின் எதிர்பார்த்தபடியே பிரச்சாரத்தைத் தவிர்த்துவிட்டுத் தன் அரசியல் இமேஜைக் காப்பாற்றிக் கொள்வாரா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 days ago at 3 days ago