“என்னதான் நாங்க தவெக ஆட்சியை ஆதரித்தாலும், அமைச்சரவையில் இடம் பெற்றிருந்தாலும் பாமகவுடன் தவெக நெருக்கம் காட்டுகிறதோ என்கிற சந்தேகம் எங்களுக்கு இருக்கிறது” என கவலையில் உள்ளது விசிக.
மதுராந்தகம், தாராபுரம் 2 தொகுதிகளிலும் தவெக வெற்றிபெற்றால் சட்டசபையில் அந்த கட்சியின் பலம் 109 ஆகிவிடும். தவெகவுக்கு ஆதரவு தந்து அமைச்சரவையில் இருக்கிற காங்கிரஸ் கட்சி ஏற்கனவே அவர்களிடம் முழுமையாக சரண்டராகி விட்டார்கள். அதேபோலதான் ஐயூஎம்எல் கட்சியும் சரண்டராகி விட்டார்கள். தவெக சொல்வதைத்தான் அவர்கள் எல்லாம் கேட்கிறார்கள்.

தவெகவுடன் அமைச்சரவையில் இருந்துகொண்டு கேள்வி கேட்டு வருகிற ஒரே கட்சி விசிகதான். இப்போது தவெகவுக்கு 2 எம்.எல்.ஏ.க்கள் கூடுதலாக கிடைத்து விட்டால் எங்கள் 2 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு, விஜய் அரசுக்கு முக்கியமானதாக இல்லாமல் போகும். எங்களுடைய ஆக்டிவ் ரோல் என்பது கேள்விக்கு உள்ளாகிடும். அதுதான் எங்களின் பெரும் கவலை” என்கிறார்கள் விசிகவினர்.

இப்போது இருக்கிற நிலைமையில் கடந்த தேர்தலில் அதிமுகவின் வெற்றிக்கு துணையாக இருந்த பாமக ஓட்டு இப்போது யாருக்கு போகும் என உறுதியாக சொல்ல முடியவில்லை. இன்னொரு பக்கம் கூட்டணியிலே இருந்தாலும் தவெக வெற்றி பெற்றால் முக்கியத்துவம் போய்விடும் என கவலைப்படுகிறது. விசிக ஓட்டு, அப்படியே தவெக வேட்பாளருக்கு கிடைக்குமா? என்கிற சந்தேகமும் இருக்கிறது. அதனால் மதுராந்தகம், தாராபுரம் இடைத் தேர்தல் களம் அனைத்து கட்சிகளையும் ரொம்பவே டென்ஷனாக்கி வருகிறது.
