Saudi Houthi War

இஸ்ரேல், சவுதி அரேபியாவுக்கு உளவு, கண்காணிப்பு ஆதரவை உறுதியளித்துள்ளது. சவுதி அரேபியா இந்த உதவியை அமெரிக்கா வழியாக இஸ்ரேலிடம் கோரியிருந்தது. ஹூதி போராளிகள் ட்ரோன் மூலம் மெக்காவைத் தாக்க முயன்ற நேரத்தில் இந்தத் தகவல் வெளியாகியுள்ளது. அந்த ட்ரோன் வெடிப்பதற்கு முன்பே இடைமறிக்கப்பட்டதாக சவுதி அரேபியா கூறுகிறது.

பாகிஸ்தான், துருக்கியிடம் இருந்து உதவி கிடைக்காததால், ஹூதி போராளிகளுக்கு எதிராக சவுதி அரேபியா இஸ்ரேலின் உதவியை நாடியுள்ளது. சவுதி அரேபியாவும் இஸ்ரேலும் இந்த விவகாரம் தொடர்பாக சென்ட்காம் வழியாக ஏற்கனவே ஒரு சுற்று சந்திப்புகளை நடத்தியுள்ளன.

ஹூதி போராளிகளின் செயல்பாடுகளைக் கண்காணித்து, அவர்கள் சவூதி அரேபியாவிற்குள் நுழைவதற்கு முன்பே அவர்களைத் தடுத்து நிறுத்துவதற்காக, அவர்களைப் பற்றிய உளவுத் தகவல்களை இஸ்ரேல் வழங்க வேண்டும் என சவூதி அரேபியா விரும்புகிறது.

இந்த ஆண்டு, சவூதி அரேபியா பாகிஸ்தானுடன் மெக்கா பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. இந்த ஒப்பந்தத்தின்படி, ஏதேனும் தாக்குதல் நடந்தால் பாகிஸ்தான் சவூதி அரேபியாவுக்காக போராடும். மெக்காவைப் பாதுகாப்பதற்காக சவூதி அரேபியாவுடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதாக பாகிஸ்தான் ராணுவத் தளபதி ஆசிம் முனீர் ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.

இதையும் படியுங்க  விசுவாசமாக வாலாட்டி வேஷம்..! 'ஒரே சீனா' பாசக் கூத்து..! சீனாவே மிரண்டுபோன பாகிஸ்தானின் பல்டி..!

ஆனாலும், ஹூதி கிளர்ச்சியாளர்கள் சவூதி அரேபியா மீது தாக்குதல் நடத்தியபோது, ​​பாகிஸ்தான் இந்தச் சூழ்நிலையிலிருந்து தன்னை விலக்கிக் கொண்டது. ஹூதிப் போர் பல ஆண்டுகளாக நடந்து வருவதாக பாகிஸ்தான் கூறுகிறது. ஹூதிகள் ஒரு ஆயுதக் குழுவே தவிர, ஒரு நாடு அல்ல. இருப்பினும், மெக்கா மீதான ஆளில்லா விமானத் தாக்குதல் முயற்சியை பாகிஸ்தான் எதிர்த்துள்ளது.

சவூதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் மூன்று நாட்களுக்கு முன்பு அமெரிக்காவைத் தொடர்பு கொண்டார். அதிபர் டிரம்புடன் தொலைபேசியில் பேசியபோது, ​​ஹூதிகளுக்கு எதிராகப் போரிட எம்.பி.எஸ் அழைப்பு விடுத்தார். இருப்பினும், தங்களால் ஹூதிகளுக்கு எதிராகப் போரிட முடியாது என்று டிரம்ப் கூறிவிட்டார்.

சவூதி பட்டத்து இளவரசர் பிரிட்டன், எகிப்து போன்ற நாடுகளையும் தொடர்பு கொண்டுள்ளார். பிரிட்டன் சவூதி அரேபியாவுக்கு ஆதரவளிப்பதாக உறுதியளித்துள்ளது. லண்டனில் இந்து சில இராணுவ நிபுணர்கள் ரியாத்துக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

ஹூதி போராளிகள் சவூதி அரேபியாவுக்குத் தொடர்ந்து சேதத்தை ஏற்படுத்தி வருகின்றனர். ஹூதிகள் செங்கடல் பாதையைத் தடுத்து, சவூதியின் எண்ணெய் விநியோகத்தைத் தடை செய்துள்ளனர்.

இதையும் படியுங்க  இந்து சிறுமிகளை கட்டாயப்படுத்தி திருமணம்… பாகிஸ்தானில் அட்டூழியம்..! கதறி அழும் குடும்பங்கள்..!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *