Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

London

தமிழ்நாடு முதல்வர் விஜய் தனது லண்டன் பயணத்தின்போது, லண்டனில் உள்ள மிக உயரமான கட்டடமான ‘தி ஷார்ட்’ (The Shard) கோபுரத்தில் அமைந்துள்ள சாங்ரி-லா தி ஷார்ட் ஹோட்டலில் (Shangri-La The Shard, London) தங்கியுள்ளார்.

முதல்வர் விஜய் தங்கியிருக்கும் இந்த ஹோட்டலில் ஒரு நாள் அறை வாடகை, வரிகள் இல்லாமல், இந்திய ரூபாய் மதிப்பில் தோராயமாக ரூ.66,535 முதல் தொடங்குகிறது. அறையின் வகை மற்றும் முன்பதிவு செய்யும் தேதியைப் பொறுத்து, ஒரு நாள் கட்டணம் ரூ.70,000 முதல் ரூ.1,15,000 வரை உயரலாம்.

விசேஷமான ஆடம்பர சூட் அறைகளைத் தேர்வு செய்தால், ஒரு நாளுக்கான கட்டணம் மேலும் பல மடங்கு அதிகரிக்கும். பயணக் காலம் மற்றும் அறைகளுக்கான தேவையைப் பொறுத்து இந்த விலைகள் மாறுபடும்.

ஒட்டுமொத்தமாக, லண்டனில் முதல்வர் விஜய் தங்கியிருக்கும் Shangri-La The Shard ஹோட்டலின் ஒரு நாள் தோராய வாடகை ரூ.65,000 முதல் ரூ.3,50,000 வரை இருக்கும் எனக் கூறப்படுகிறது. சாதாரண அறைகளின் வாடகை ஒரு நாளுக்கு சுமார் ரூ.65,000 முதல் ரூ.1 லட்சம் வரையும், லண்டன் நகரத்தின் முழு அழகையும் ரசிக்கும் வசதி கொண்ட அறைகளின் வாடகை ரூ.1.50 லட்சம் முதல் ரூ.3.50 லட்சம் வரையும் இருக்கலாம்.

தமிழக முதல்வராகப் பொறுப்பேற்ற பிறகு, முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் விஜய் மேற்கொள்ளும் முதல் வெளிநாட்டுப் பயணம் இதுவாகும். மேலும், இது அவரது முதல் அதிகாரப்பூர்வ வெளிநாட்டுப் பயணமாகவும் அமைந்துள்ளது. ஆறு நாட்கள் நடைபெறும் இந்தப் பயணத்தில், அவர் பல்வேறு உலகளாவிய முதலீட்டாளர்களைச் சந்திக்க உள்ளார்.

இதையும் படியுங்க  "சரித்திரம் படைத்த சாமானியன்… கோட்டையின் புதிய நாயகனுக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள்!"
London

முதல்வர் விஜய் இந்த லண்டன் பயணத்திற்கு அரசு நிதியைப் பயன்படுத்தாமல், தனது சொந்தச் செலவிலேயே வணிகரீதியிலான (Commercial Flight) விமானத்தில் பயணித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கு சமூக வலைத்தளங்களில் பாராட்டுகளும் குவிந்து வருகின்றன.

தமிழகத்திற்கு புதிய முதலீடுகளை ஈர்ப்பதற்காக லண்டன் சென்றுள்ள தமிழக முதல்வர் சி. ஜோசப் விஜய், அங்குள்ள மிக உயரமான நட்சத்திர விடுதியான ‘தி ஷார்ட்’ அமைந்துள்ள கட்டடத்தில் தங்கியுள்ளார். இந்த ஹோட்டல் இணையதள விவரங்களின்படி, இங்குள்ள அறைகளின் ஒரு நாள் வாடகை இந்திய மதிப்பில் ரூ.70,000 முதல் ரூ.1.60 லட்சம் வரை, இதர கூடுதல் கட்டணங்களுடன் வசூலிக்கப்படுகிறது.

ஐரோப்பாவின் மிகப்பெரிய கட்டடங்களில் ஒன்றான ‘தி ஷார்ட்’ 52 தளங்களைக் கொண்டது. இதில் சாங்ரி-லா நட்சத்திர ஹோட்டல் மட்டும் 34 தளங்களில் இயங்கி வருகிறது. இந்த ஹோட்டலின் உயரமான பகுதிகளில் இருந்து பார்த்தால், ஒட்டுமொத்த லண்டன் நகரத்தின் அழகையும் ரசிக்க முடியும்.

உலகத்தரம் வாய்ந்த உணவகங்கள், திருமணக் கூடங்கள், அதிநவீன திரையரங்கம் மற்றும் மிக உயரத்தில் அமைந்துள்ள நீச்சல் குளம் உள்ளிட்ட பல்வேறு சொகுசு வசதிகள் இங்கு உள்ளன. குறிப்பாக, 52-வது தளத்தில் அமைந்துள்ள Sky Pool, மேற்கு ஐரோப்பாவிலேயே மிக உயரத்தில் அமைந்துள்ள ‘இன்ஃபினிட்டி’ நீச்சல் குளமாகக் குறிப்பிடப்படுகிறது. லண்டன் நகரத்தின் அழகை ரசித்தபடியே இதில் நீந்த முடியும்.

இங்குள்ள படுக்கையறைகள் அனைத்தும் தரை முதல் கூரை வரை பிரம்மாண்டமான கண்ணாடிகளால் வடிவமைக்கப்பட்டுள்ளன. இதனால், படுக்கையில் இருந்தபடியே லண்டன் பிரிட்ஜ், தேம்ஸ் நதி உள்ளிட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களை 360 டிகிரி கோணத்தில் ரசிக்க முடியும்.

இதையும் படியுங்க  17–வது இடத்துக்கு தள்ளப்பட்ட தமிழ் நாடு..! முதல்வர் மாறியதும் முதலீடும் மாறியது? அம்பலமான அதிர்ச்சி!

லண்டன் மாநகரத்தின் முக்கிய அடையாளங்களான லண்டன் ஐ (London Eye), பிக் பென் (Big Ben), தேம்ஸ் நதி உள்ளிட்டவற்றை அறையில் இருந்தபடியே ரசிப்பதற்காக ஒவ்வொரு அறையிலும் பைனாகுலர்கள் வைக்கப்பட்டுள்ளன. சில சொகுசு சூட்களில் (Suites) பிரத்யேக தொலைநோக்கிகளும் (Telescopes) அமைக்கப்பட்டுள்ளன.

லண்டனின் கடுமையான குளிரைத் தாங்கும் வகையில், இந்த ஹோட்டலின் குளியலறைகளில் பளிங்குத் தரைகள் தானாகவே சூடாகும் (Underfloor Heating) தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. மேலும், குளியலறைகளில் உள்ள கண்ணாடிகளுக்குள்ளேயே எல்.இ.டி. தொலைக்காட்சிகள் (Integrated TVs) பொருத்தப்பட்டுள்ளன.

இங்குள்ள Shangri-La Beds எனப்படும் படுக்கைகள், மனிதர்களின் உடல் அமைப்பிற்கு ஏற்ப வளைந்து கொடுத்து, ஆழ்ந்த உறக்கத்தை வழங்கும் அதிநவீன Body-contouring technology-யைக் கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளன.

லண்டன் நகரின் வான் அழகை ரசித்தபடி உடற்பயிற்சி செய்யக்கூடிய பிரம்மாண்ட உடற்பயிற்சிக் கூடமும் இங்கு உள்ளது. இது 24 மணி நேரமும் செயல்படுகிறது. மேலும், லண்டன் நகரின் அழகைப் பார்த்துக்கொண்டே உடலை ரிலாக்ஸ் செய்யும் வகையில், பெரிய கண்ணாடிகளுடன் கூடிய பிரத்யேக நீராவிக் குளியல் (Sauna) அறையும் உள்ளது.

52-வது தளத்தில் அமைந்துள்ள காக்டெய்ல் பார், லண்டன் மாநகரிலேயே மிக உயரத்தில் அமைந்துள்ள காக்டெய்ல் பாராகக் குறிப்பிடப்படுகிறது. அதேபோல், 35-வது தளத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற உணவகத்தில் ஆசிய மற்றும் பிரிட்டிஷ் கலப்பு உணவுகள் (Pan-Asian cuisine) பரிமாறப்படுகின்றன. தரை முதல் கூரை வரை கண்ணாடியால் சூழப்பட்டுள்ள இந்த உணவகத்தில் அமர்ந்து, 360 டிகிரி கோணத்தில் லண்டன் நகரின் அழகை ரசிக்க முடியும்.

இதையும் படியுங்க  விவாகரத்து வேண்டாம்.. வாபஸ் பெற்ற சங்கீதா..! 20 நிமிட கெடு… லண்டனில் இருந்து ஒரே 'U-Turn'! உடைந்த ரகசியம்!

இந்த கட்டடத்தில் மொத்தம் 36 லிஃப்ட்கள் உள்ளன. தரைத்தளத்தில் இருந்து ஹோட்டலின் வரவேற்பறை அமைந்துள்ள 35-வது தளத்திற்கு, ஒரு நொடிக்கு 6 மீட்டர் வேகம் என்ற கணக்கில், கண் இமைக்கும் நேரத்தில் இந்த லிஃப்ட்கள் பயணிகளை மேலே கொண்டு சேர்த்துவிடும்.

முதல்வர் விஜய் தனது லண்டன் பயணத்தின் போது, இங்கிலாந்தின் புகழ்பெற்ற கார் பந்தய மைதானமான ‘சில்வர்ஸ்டோன் மோட்டார் ரேசிங் சர்க்யூட்’ (Silverstone Motor Racing Circuit)-க்கும் நேரில் சென்று பார்வையிட உள்ளார்.

சில்வர்ஸ்டோன் மைதானத்தின் பாதுகாப்பு உள்கட்டமைப்பு மற்றும் அதன் வணிகச் செயல்பாடுகளை ஆராய்ந்து, அதேபோன்ற உலகத்தரம் வாய்ந்த மோட்டார் ஸ்போர்ட்ஸ் விளையாட்டு உள்கட்டமைப்பை தமிழகத்திலும் ஏற்படுத்தி, விளையாட்டுச் சுற்றுலாவை மேம்படுத்துவதே இதன் முக்கிய நோக்கமாகும்.

தமிழகத்தின் பொருளாதாரத்தை 2036-ஆம் ஆண்டிற்குள் 1.5 டிரில்லியன் அமெரிக்க டாலராக உயர்த்த அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. அதன் ஒரு பகுதியாக, உலகளாவிய முதலீட்டாளர்களைச் சந்தித்து, தமிழகத்தின் உள்கட்டமைப்பு வசதிகளை எடுத்துக்கூறி பெரிய அளவிலான முதலீடுகளை ஈர்ப்பதற்காக இந்த ஆறு நாள் அதிகாரப்பூர்வப் பயணம் திட்டமிடப்பட்டுள்ளது.

அரசுமுறை ஆலோசனைகள் மற்றும் முதலீட்டாளர் சந்திப்புகள் மட்டுமின்றி, லண்டனில் வாழும் புலம்பெயர் தமிழ் அமைப்புகள் மற்றும் தமிழ் மக்களையும் முதல்வர் விஜய் நேரில் சந்தித்து கலந்துரையாட உள்ளார்.

‘தி ஷார்ட்’ கட்டடம் லண்டனின் வானலையில் மிகப் பிரம்மாண்டமாக காட்சியளிக்கிறது. ஐரோப்பாவின் 7-வது மிக உயரமான கட்டடமாகக் குறிப்பிடப்படும் இதன் உயரம் காரணமாக, லண்டன் நகருக்கு மேலே பறக்கும் விமானங்களில் இருந்து பார்த்தால்கூட இந்தக் கட்டடம் தெளிவாகத் தெரியுமாம்.

Eswari

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 hour ago at 1 hour ago