https://republictn.com/

திமுக தலைவர் மற்றும் முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், தேர்தல் தோல்வி குறித்து வீடியோ ஒன்றில் உரையாற்றியுள்ளார். அதில் அவர் கூறியதாவது:

தோல்வியால் முடங்கி விட மாட்டேன். எனக்கு எண்டே இல்லை என்று யாரும் நினைக்க வேண்டாம். தேர்தல் முடிவுக்கு முன் என்ன நடந்தது, அதன் பிறகு என்ன நடந்தது என்பதையெல்லாம் நான் கவனித்து கொண்டிருக்கிறேன்.

தேர்தல் தோல்விக்கு யாரையும் குறை கூற வேண்டாம். யாரும் யார் மீதும் பழி போட வேண்டாம். இந்த தோல்விக்கு நானே முழுப் பொறுப்பையும் ஏற்றுக்கொள்கிறேன். வெற்றி கிடைக்கும்போது அந்த கிரெடிட் எனக்குத்தான் சேரும் என்றால், தோல்வியிலும் அதன் பொறுப்பை நானே ஏற்க வேண்டும். அதுதான் ஒரு நல்ல தலைவரின் இலக்கணம்.

மு.க.ஸ்டாலின் பேசிய வீடியோ: https://www.facebook.com/share/v/1J4PyPh2Ct/

இது நிச்சயமாக நாம் எதிர்பார்த்த முடிவு அல்ல. ஆனால் இதை நினைத்துக் கொண்டு முடங்கி விட மாட்டேன். உடனே மாற்றங்களை செய்து, ‘அப்டேட்’ ஆகி மீண்டும் வருவோம்.

கட்சியின் அனைத்து நிலைகளிலும் தேவையான மாற்றங்களை மேற்கொள்ள உள்ளோம். திமுக மீண்டும் ஆட்சிக்கு வரும் என்ற நம்பிக்கை உள்ளது.

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 weeks ago at 2 weeks ago