Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

Stalin Modi

தமிழக சட்டசபை கூட்டத்தொடர் முடிவடைந்த கையோடு, திமுக முன்னாள் அமைச்சர்கள் 8 பேரின் ஊழல் கோப்புகளை தூசு தட்டி எடுத்து, அதிரடி நடவடிக்கைக்கு முதல்வர் விஜய் தயாராகி வருகிறார். சட்டரீதியான ஆவணங்கள் அனைத்தும் தயாராக உள்ள நிலையில், ஆளுநர் அர்லேகரின் ஒப்புதலுக்குப் பின் அமலாக்கத்துறையும் களமிறங்கக்கூடும் என்ற தகவல் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த “மல்டி-ஆங்கிள்” நெருக்குதலைச் சமாளிக்க, பாஜக கூட்டணிக்குச் செல்லாமல், மத்திய அரசின் முக்கிய முடிவுகளுக்கு வெளிப்படையான ‘ஆதரவு நிலைப்பாட்டை’ எடுக்கும் புதிய அரசியல் வியூகத்தை மு.க. ஸ்டாலின் வகுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

“சட்டசபை கூட்டம் முடிந்ததும் திமுகவின் 8 முன்னாள் அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் முடிவில் உறுதியாக இருக்கிறார் முதல்வர் விஜய். இதற்கான அனைத்து வேலைகளும் ஜரூராக நடந்து வருகிறது. எல்லா ஆவணங்களையும் தெளிவாக ஆய்வு செய்ய அதிகாரிகளுக்கு விஜய் உத்தரவு போட்டிருக்கிறார்.

Republic Tamil

அப்படி 8 திமுக மாஜி அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றால் ஆளுநர் அர்லேகர் ஒப்புதல் தர வேண்டும். ஒருவேளை ஆளுநர் ஒப்புதல் கொடுத்து முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தால் அதை வைத்தே அமலாக்கத்துறையும் திமுக முன்னாள் அமைச்சர்களுக்கு எதிராக களமிறங்கும்.

இதையும் படியுங்க  நயினார் நாகேந்திரன் அதிரடி மாற்றம்..! தமிழக பாஜக-வின் புதிய தலைவர் இவரா..?

இப்படி ஒரே நேரத்தில் அனைத்து தரப்பில் இருந்தும் திமுகவுக்கு எதிராக ரவுண்டு கட்டக்கூடும் என்கிற தகவலை வைத்து ஸ்டாலின் ஆலோசனை நடத்தி இருக்கிறார். அந்த ஆலோசனை கூட்டத்தில், “ இந்த மாதிரி நெருக்கடி வராமல் இருக்க சில நகர்வுகளை செய்துதான் ஆகனும்.. அதற்காக பாஜக தலைமையிலான கூட்டணி சேரவும் முடியாது. மோடி கேபினட்டில் நாம் இடம் பெறவும் முடியாது.

அதற்கு பதிலாக, முக்கியமான சில விஷயங்களில் மத்திய அரசு முடிவெடுக்கும் போது ஆதரவு தரலாம். அது அவர்களுக்கு சப்போர்ட்டா இருக்கும். அந்த லிமிட்டுடன் நிற்போம்.. அரசியல் ரீதியாக ‘ஆதரவு வேற.. கூட்டணியில- அமைச்சரவையில சேர்றது வேற’ என சரிக்கட்ட செய்யவும் முடியும்” என சொல்லியிருக்கிறார் ஸ்டாலின்” என்கிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 hours ago at 3 hours ago

You missed