Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

Republic Tamil

சேலம் மாவட்டம், மேட்டூர் அணையை காவரி டெல்டா விவசாயிகளுக்காக ஜூன் 12 ஆம் தேதி அன்றே திறந்திருக்க வேண்டும். ஆனால் இந்த தடவை கர்நாடக அரசாங்கம் ”நாங்க ஏன் தண்ணீர் தரணும்?” என ரொம்ப வீம்பாக அடம்பித்துக் கொண்டு இருந்து விட்டார்கள். இரண்டு மாநிலத்துக்கும் நடுவில் பேச்சு வார்த்தை முற்ற அந்த பஞ்சாயத்து முடிவதற்குள் கர்நாடக பகுதிகளில் மேகப்பள்ளியில் சும்மா பொழந்து கொண்டு அணை நிரம்பி வழிந்ததால் இப்போது தண்ணீரை திறந்து விடவில்லையென்றால் மொத்த ஊரும் தண்ணீரில் மிதக்கும் என பயந்து போய் வேற வழியே இல்லை என்று உபரி தண்ணீரை கீழே திறந்து விட்டார்கள்.

அதன் பிறகு மேட்டூர் அணை 80 அடி வரை நிரம்பியது. இந்த நிலையில் கிட்டத்தட்ட இரண்டரை மாதம் தாமதமாக அணையை திறந்து வைப்பதற்காக முதலமைச்சர் விஜய் தனி விமானத்தில் சேலம் வந்து இறங்கி அங்கிருந்து மேட்டூருக்கு வந்தார்.

Republic Tamil

சேலம் ஏர்போர்ட்டில் இறங்கி மேட்டூர் போக வேண்டும் என்றால் 68 கிலோமீட்டர் தூரம் போயாக வேண்டும். ”சிஎம் வரார். சின்னதா ஒரு அசம்பாவிதம் கூட நடந்திடக்கூடாது” என மேலிடத்தில் இருந்து ஆர்டர் பறக்கவும் ஆபீசர்கள் எல்லாம் அலறி அடித்து சாலைகள் எல்லாம் பாதுகாப்பு போட்டார்கள். 68 கிலோமீட்டர் தூரத்துக்கு கிட்டத்தட்ட 45000 பேரி கார்டுகளை வரிசையாக அடுக்கி வைத்து சேலத்தையே ஒரு வழி செய்து விட்டார்கள். ஏடிஜிபி அன்பு, ஐஜி ரம்யா நான்கு, டிஐஜிகள் என பெரிய பெரிய ஆபீசர்கள் தலைமையில் 2000 போலீஸ்காரர்கள் விடிய விடிய நின்று சோதனையில் ஈடுபட்டார்கள். இந்த அனைத்தையும் எல்லா நியூஸ் சேனல்களும் லைவ் ஆக ஒளிபரப்பின. அது போக நியூஸ் சேனல்கள் முதலமைச்சரிலன் இந்த ஒரு நாள் மேட்டூர் விசிட்டுக்கு மட்டுமே அரசு பணம் 5 கோடி ரூபாய் காலி என தகலவ்ல் கூற ஃபயர் ஆகி பறக்க ஆரம்பித்தது.

இதையும் படியுங்க  விஜய் அமைச்சரவையில் துரை வைகோ..? கனவை சுக்குநூறாக்கிய மதிமுக எம்.எல்.ஏ-க்கள்..!
Republic Tamil

இதைப் பார்த்ததும் மேட்டூர் கெஸ்ட் ஹவுஸில் ஓய்வெடுத்துட்டு இருந்த ஆலோசகர்களும், ஆபீசர்களும் பதப்றி போய் ”5 கோடி செலவு என நியூஸை போட்டு தாக்குறாங்கயா.. இத எப்படியே விட்டா சரி வராது. மக்கள் மைண்ட அப்படியே வேற பக்கமா திசை திருப்பணும். உடனடியா ஏதாவது பிளான போடுங்கப்பா” என விரைவாக ஆலோசனை நடத்தி இருக்கிறார்கள். அதன் பிறகுதான் ”சார் அங்க ஒரு விவசாய குடும்பம் இருக்கு. அதுல ஒரு பாட்டி இருக்காங்க. நீங்க நேரா அவங்கள போய் பார்கறீங்க. அவங்களுக்கு ஏதாவது ஒரு பரிசு கொடுக்குறீங்க. அவங்க, உங்களை பார்த்து பரவசமாவாங்க. எம்ஜிஆர் ஸ்டைல்ல அவங்களை கட்டி அனைச்சு, அவங்களோட ஒரு வாக் வாங்க. செம்ம வைரல் ஆகும்” என பிளாந் போட்டு கொடுக்க, முதல்வரும் அப்படியே எம்ஜிஆர் ஸ்டைல்ல அந்த பாட்டிக்கு கூலிங் கிளாஸ் மாற்றிவிட்டு ஒரு போட்டோ எடுத்ததும், ஒட்டுமொத்த மீடியாவும் அதை ரிப்பீட் அடித்துக் கொண்டே இருந்தது.

இதையும் படியுங்க  அன்று ஸ்டாலினுக்கு நிழல்.. இன்று தவெக-வின் நிர்வாக மூளை..! கோட்டையை ஆட்டிப்படைக்கும் திருமா+மூவரணி..!

ஒவ்வொரு யூடியூப் சேனலும் விடாமல் அந்த பாட்டி முதல்வரும் வந்த அந்த காட்சியை போட்டு பாட்டிக்கு பரிசாக கொடுத்த அந்த கூலர்ஸ் என்ன விலை? என அந்தப் பக்கம் திரும்பி பேச ஆரம்பித்து விட்டார்கள். விவசாயிகள் சந்திப்பு என கூலிங் கிளாஸ் கிப்ட் கொடுத்து கேமராவை அந்தப்பக்கம் திருப்பி விட்டார்கள். தமிழ்நாடு முழுக்க இப்போது அந்த டாபிக் தான் ஓடிக்கொண்டு இருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 hours ago at 2 hours ago