Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

anbumani

சென்னையின் வாழ்வாதாரம் பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை பாதுகாக்க கோரி மருத்துவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் விழிப்புணர்வு பிரச்சாரப் பேரணி துவங்கி வைத்து பேசினார்,

சென்னை, துரைப்பாக்கம் One IT Park அருகில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அன்புமணி, ”100 ஆண்டுகளுக்கு முன்பு 15,000 ஏக்கராக இருந்த பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் இப்போது 2,500 ஏக்கர்தான் இருக்கிறது. அடையாறு, இந்திரா நகர், பெருங்குடி, சோழிங்கநல்லூர், நாவலூர் எல்லாமே சதுப்பு நிலத்தில்தான் இருக்கிறது. இந்த 2,500 ஏக்கரையாவது பாதுகாக்க வேண்டும். இதைதான் நாங்கள் கேட்கிறோம். பள்ளிக்கரணை சதுப்பு நிலம் இயற்கை கொடுத்த வரம்; அதை பாதுகாக்க திமுக, அதிமுக என ஒரு அரசுக்கு கூட துப்பில்லை.

இத்தனை ஆண்டுகள் ஆட்சி செய்த திராவிட கட்சியினரின் நிலமாக இருந்தால் இப்படி அலட்சியம் காட்டுவார்களா? அரசு நிலம் என்பதற்காக யார் வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளட்டும், வீடு கட்டிக் கொள்ளட்டும் என விட்டுவிட்டனர். குப்பை கொட்டும் இடமா சதுப்புநிலம்..? திராவிட கட்சிகளை போல விஜய் அரசுக்கும் பெயர் வந்துவிட கூடாது. மக்களுக்கு மாற்றம் வேண்டும் என்று தான் உங்களை முதலமைச்சராக தேர்வு செய்தார்கள். சதுப்பு நிலம் பாதுகாக்கப்பட வேண்டும்”

இதையும் படியுங்க  “இடைத்தேர்தலில் CM Vijay-க்கு எதிராக மக்கள் வாக்களிப்பார்கள்” – அன்புமணி எச்சரிக்கை

பள்ளிக்கரணை சதுப்பு நிலம் பாதுகாக்கப்பட வேண்டும். 2002-ல் 5 ஆயிரம் இளைஞர்களுடன் போராட்டம் நடத்தினோம், பாதுகாக்க வலியுறுத்தினோம். இதுவரை எந்த அரசும் அறிவிப்பு வெளியிடவில்லை.

100 ஆண்டுகளுக்கு முன்பு 15 ஆயிரம் ஏக்கர் இருந்தது.தற்போது 2,500 ஏக்கராக சதுப்பு நிலம் சுருங்கியது. எஞ்சிய நிலத்தையாவது பாதுகாக்க வேண்டும். ஊழலுக்காக பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கவில்லை” என்று வேதனை தெரிவித்தார்.

அப்போது செளமியா அன்புமணி குறித்து பேசிய அன்புமணி, ”தமிழக சட்டமன்றத்தின் சூப்பர் ஸ்டார் சௌமியா” என பாராட்டியபோது வெட்கப்பட்டு சிரித்தார் பாமக எம்எல்ஏ சௌமியா. பாமக எம்.எல்.ஏ-வாக சட்டப்பேரவையில் கவனிக்கத்தக்க வகையில் பேசிவரும் மனைவி செளமியாவை பலரும் புகழ்ந்து வருகின்றனர்.

தமிழக மக்களின் உரிமைக்காகவும், மக்கள் பிரச்சினைகளுக்காகவும் சட்டமன்றத்தில் துணிச்சலாகக் குரல் கொடுத்டு வருகிறார் மருத்துவர் சௌமியா அன்புமணி.

இதையும் படியுங்க  திடீர் தைலாபுர கிளைமாக்ஸ்..! பின்னணியில் தவெக வியூக வி.ஐ.பி.? அதிர்ச்சியில் அறிவாலயம்..!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 hours ago at 2 hours ago