திமுக தீயசக்தி என்கிறார்கள்… அவர்களின் நிலை என்ன ஆனது? என திமுக ஐடிவிங்க் ஒரு பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில், ”திமுக தீயசக்தி என்றார்கள்… அவர்களின் நிலை என்ன ஆனது?
1 1957ல் ராசகோபாலாச்சாரியார் திமுக தீயசக்தி என்றார். கரைந்து காணாமல் போனது அவரது சுதந்திரா கட்சி.
1962ல் காமராஜர் திமுக தீயசக்தி என்றார். கரைந்து காணாமல் போனது அவரது ஸ்தாபன காங்கிரஸ்.
1967 ஈ.வி.கே. சம்பத் திமுக தீயசக்தி என்றார். கரைந்து காணாமல் போனது அவரது தமிழ் தேசியக் கட்சி.
1972 எம்.ஜி.ஆர். திமுக தீயசக்தி என்றார். பிளவுபட்டது அவரது அதிமுக.
1993ல் வைகோ திமுக தீய சக்தி என்றார், கரைந்து காணாமல் போனது அவரது மதிமுக.
1999ல் ஜி.கே.மூப்பனார் திமுக தீயசக்தி என்றார். கரைந்து காணாமல் போனது அவரது தமிழ் மாநில காங்கிரஸ்.
2002ல் ஜெயலலிதா திமுக தீயசக்தி என்றார். ஊழல் ராணி என்று அவரை நிரூபித்து ஊதுபத்தி உருட்ட வைத்தது திமுக.
2005ல் விஜயகாந்த் திமுக தீயசக்தி என்றார். கரைந்து காணாமல் போனது அவரது தேமுதிக.
2013ல் சீமான் திமுக தீயசக்தி என்றார், மானங்கெட்டு மதிகெட்டுத் தறிகெட்டு அலைகிறது நாதக.
2016ல் மோடி திமுக தீயசக்தி என்றார், இன்றுவரை தமிழ்நாட்டில் தகிடுதத்தம் போடுகிறது பாஜக.
2019ல் அமித் ஷா திமுக தீயசக்தி என்றார், தேர்தல் களத்தில் தண்ணி காட்டுகிறது திமுக.
2021ல் எடப்பாடி திமுக தீய சக்தி என்றார். அதிமுக நாலு பிரிவாகி நாறிக் கிடக்கிறது.
2025ல் விஜய் திமுகதியசக்தி என்கிறார். எழுதி வைத்துக் கொள்ளுங்கள். தவெக வை தவக்களையைப் போல மிதித்துத் தள்ளும் திமுக.

திமுக -ஒரு வரலாறு, ஒரு வெற்றிப்பயணம்
1949 திமுக உதயம்.
1956ல் திமுக சட்டமன்ற உறுப்பினர் 15.
1961 ல் திமுக சட்டமன்ற உறுப்பினர் 50.
1967ல் திமுக ஆட்சி. அறிஞர் அண்ணா முதலமைச்சர்.
1974ல் திமுக வெள்ளி விழா கலைஞர் முதலமைச்சர்.
1999ல் திமுக பொன்விழா கலைஞர் முதலமைச்சர்.
2024ல் திமுக பவளவிழா ஸ்டாலின் முதலமைச்சர்.
2049 திமுக நூற்றாண்டு விழா. திமுக நூற்றாண்டு விழா
அன்றைக்கும் இவர்களைப் போல யாரேனும் ஒருவர் பிதற்றிக் கொண்டிருப்பார். நமது பாதை சமூகநீதிப் பாதை. சமத்துவப் பாதை. வென்றோம். வெல்வோம்” எனக் கூறியுள்ளது.
இதனை தனது எக்ஸ் தளப்பதிவில் பகிர்ந்துள்ள சினிமா விமர்சகர் ப்ளூசட்டை மாறன், ”அதெல்லாம் இருக்கட்டும்.
காமராஜர், MGR ஜெயலலிதாவை தொடர்ந்து இருமுறை மக்கள் ஜெயிக்க வைத்தனர். கருணாநிதி & ஸ்டாலினை ஏன் இரண்டாம் முறை ஜெயிக்க வைக்கவில்லை? காணாமல் போன காங்கிரஸ், தேமுதிகவை லாபம் இல்லாமலா கூட்டணியில் சேர்த்தீர்கள்? உருட்டா இருந்தாலும் நியாயம் வேணாமா?” என கிண்டலடித்துள்ளார்.
இதற்கு கருத்து தெரிவித்துள்ள நெட்டிசன்கள், ”கேள்வி கேட்பதில் தவறில்லை… ஆனால் வரலாற்றையும் தேர்தல் அரசியலையும் முழுமையாகப் பார்த்தால்தான் நியாயமான பதில் கிடைக்கும். யாரை மக்கள் இருமுறை தேர்ந்தெடுத்தார்கள், யாருக்கு வாய்ப்பு மறுத்தார்கள் என்பதற்கு ஒவ்வொரு தேர்தலிலும் வேறு வேறு காரணங்கள் இருந்திருக்கின்றன. கூட்டணி அரசியலும் வெறும் “லாபம்” என்ற ஒரே காரணத்தால் தீர்மானிக்கப்படுவதில்லை. விமர்சனம் இருக்கட்டும்; ஆனால் தரவுகளோடும் வரலாற்றுப் பின்னணியோடும் இருக்கட்டும்” மற்றொருவர், ”அப்ப 2046ல் தான் இனி திமுக ஆட்சிக்கு வருமா? எனப் பதிவிட்டுள்ளார்.
