https://republictn.com/

அமெரிக்காவுடனான போர் நிறுத்தம் முடிவுக்கு வர இருக்கும் நிலையில், ஈரான் தனது வான்வெளியை மூடியிருப்பது போர் பதற்றத்தை அதிகரித்துள்ளது. 60 நாள் தற்காலிக போர் நிறுத்தம் விரைவில் முடிவுக்கு வரும் சூழலில், மீண்டும் முழு அளவிலான தாக்குதலுக்கு அமெரிக்கா தயாராகி வருவதாக கூறப்படுகிறது.

அணு ஆயுத தயாரிப்பிற்கான யுரேனியம் செறிவூட்டலை ஈரான் கைவிட வேண்டும் என அமெரிக்கா வலியுறுத்தி வருகிறது. ஆனால் அதை ஈரான் ஏற்க மறுப்பதால் பேச்சுவார்த்தையில் இழுப்பறி நீடிக்கிறது.

அடுத்த 24 மணி நேரத்திற்குள் ஈரான் வழிக்கு வராவிட்டால், ஈரான் மீது மிகப்பெரிய ராணுவ தாக்குதலுக்கு அமெரிக்க நிர்வாகம் திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதன் தொடர்ச்சியாக ஈரான் தனது வான்வெளியை மூடியிருப்பதும், போர் பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 days ago at 3 days ago