பிரபல தொழில் அதிபரும், ‘ஜெம் கிரானைட்ஸ்’ நிறுவனத்தின் நிறுவனருமான ஆர். வீரமணி (84), சிறுமிகளுக்கு எதிரான பாலியல் குற்றச்சாட்டு தொடர்பாக போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
அக்டோபர் 2025-ல் சென்னை மத்திய குற்றப்பிரிவின் விபச்சார தடுப்புப் பிரிவிடம் ஒரு பென்-டிரைவ் ஒப்படைக்கப்பட்டது. அதில் சிறுமி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்படும் வீடியோ காட்சிகள் இடம்பெற்றிருந்தன. ஆய்வில், வீடியோவில் இருந்த நபர் தொழிலதிபர் வீரமணி என்பது உறுதி செய்யப்பட்டது. வீரமணி சென்னை தேனாம்பேட்டையில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து, அதைத் தனது உதவியாளர்களான மகேந்திர சிம்கன் மற்றும் அவரது மனைவி சாந்தி ஆகியோரின் பொறுப்பில் விட்டுள்ளார். அங்கு பல சிறுமிகள் வரவழைக்கப்பட்டு பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டதாக காவல்துறை விசாரணையில் தெரியவந்தது.
வீரமணியின் வீடு மற்றும் அலுவலகங்களில் நடத்தப்பட்ட சோதனையில் பல சிறுமிகள் மற்றும் பெண்களின் புகைப்படங்கள் மற்றும் பிற ஆதாரங்கள் கைப்பற்றப்பட்டன. இந்த வழக்கில் போதிய ஆதாரங்கள் இல்லை என்றும், பாதிக்கப்பட்ட சிறுமியை அடையாளம் காண முடியவில்லை என்றும் கூறி வழக்கை முடிக்க சென்னை விபச்சார தடுப்புப் பிரிவு காவல்துறை முயன்றது.
ஆகஸ்ட் 2026-ல் இந்த முடிவை நிராகரித்த போக்சோ சிறப்பு நீதிமன்றம், வழக்கை மீண்டும் விரிவாக விசாரிக்க உத்தரவிட்டது. நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்ட காவல்துறை, வீரமணி, அவருக்கு உடந்தையாக இருந்த சாந்தி மற்றும் மகேந்திர சிம்கன் ஆகிய மூவரையும் ஆகஸ்ட் 29, 2026 அன்று கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். இந்த விவகாரத்தில் 2003-ல் உயிரிழந்த ஒரு சிறுமியின் மரணத்திற்கும் தொடர்பு இருக்கிறதா என்பது குறித்தும், வேறு நபர்கள் இதில் சம்பந்தப்பட்டுள்ளனரா என்பது குறித்தும் காவல்துறை தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறது.

இந்நிலையில் வீரமணி சமீபத்தில் 100 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை விற்று இருக்கிறாராம். இதன் பின்னணியை விசாரிக்க துவங்கி இருக்கிறது வருமான வரித்துறை.
பிரபல தொழில்திபர் ஜெம் கிரானைட்ஸ் வீரமணி சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வீடியோ ஆதாரங்கள் சென்னை போலீஸ் கமிஷனர் டேபிளுக்கு போன அடுத்த நொடியே ஆக்சன் எடுக்க உத்தரவு போட்டுட்டாராம். ஆனால் இது தொடர்பான வழக்கு கடந்த ஆட்சியில் கடந்த அக்டோபர் மாதம் போடப்பட்டது எனச் சொல்கிறார்கள். அந்த வழக்கில் சிக்காமல் இருப்பதற்காக உயர் போலீஸ் அதிகாரிகள், பெண் இன்ஸ்பெக்டர்கள் பவர் சென்டரில் இருந்த பலர் என சுமார் 50 கோடிக்கும் மேல் வீரமணி கொடுத்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
இந்த கொடுக்கல் வாங்கலில் மீடியேட்டராக செயல்பட்டவர் ஒரு ரயில்வே தொழிற்சங்க விஐபியோட மகனாம். இன்னொரு பக்கம் வீரமணி தனக்கு சொந்தமான 100 கோடி ரூபாய் மதிப்புள்ள ஒரு சொத்தை விற்றுத்தான் எல்லாருக்கும் பட்டுவாடா செய்திருப்பதாக செய்திகள் பரவி கிடகிறது. இந்த நிலையில்தான் வீரமணியின் சொத்து விற்பனை தொடர்பாக வருமான வரித்துறை அதிகாரிகள் முதல் கட்ட விசாரணையில் இறங்கி இருக்கிறார்கள். இந்த சோதனைக்கு பின்னால் சொத்து விற்பனையில் வந்த தொகை வேறு யார் யார் கைகளுக்கு போயிருக்கிறது என்கிற விசாரணையும் அடங்கி
இருக்கிறது. இந்த விவகாரத்தில் சில உயர் காக்கிகளும் இன்னும் பலரும் வீரமணியிடம் பலனடைந்த விவரங்கள் சிக்கும் எனச் சொல்கிறார்கள்.
