கட்டாய மதமாற்றம் என்பது நெறிமுறையற்ற, சட்டவிரோதமான செயலாகக் கருதப்படுகிறது. அதிகாரமிக்க பதவிகளில் இருப்பவர்கள் பல நேரங்களில் மற்றவர்களைத் தங்கள் செல்வாக்கிற்குள் கொண்டுவரவும், அவர்கள் மனதை மாற்றவும் கட்டாயமாகத் தங்கள் மதத்திற்கு மாற்றவும் முயற்சிப்பதுண்டு. இந்நிலையில், தென்னிந்தியத் திரையுலகின் இசைத்துறையில் ஒரு சர்ச்சை எழுந்துள்ளது. ஒரு பிரபல இசையமைப்பாளர், பெண் பாடகர்களை மதம் மாற வற்புறுத்துவதாக அவர் மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
தமிழ் பாடகி ஸ்வாகதா எஸ்.கிருஷ்ணன், இன்ஸ்டாகிராம் ஸ்டோரி மூலம் குறிப்பிட்ட இசையமைப்பாளர் ஒருவரின் முறையற்ற செயல்களைப் பற்றிப் பதிவிட்டிருந்தார். சில மாதங்களுக்கு முன்பு, அந்த இசையமைப்பாளர் தொடர்ச்சியாகப் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபடுபவர் என்றும், மேலும் பல பாடகிகள் முன்வந்து அவரைப் பற்றி வெளிப்படையாகப் பேசும் சரியான தருணத்திற்காகக் காத்திருப்பதாகவும் அவர் குற்றம் சாட்டியிருந்தார்.
நம்பகமான வட்டாரங்களின் தகவலின்படி, அந்த இசையமைப்பாளர் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளத் திரையுலகில் அதிகம் புகழ் பெற்றவர். அவரது இசை பரவலான பார்வையாளர்களைச் சென்றடைந்துள்ளது; அத்துடன் சமீப காலத்தின் மிகப்பெரிய ‘பான்-இந்திய’ திரைப்படங்கள் சிலவற்றிலும் அவர் பணியாற்றியுள்ளார். அவர் இது போன்ற சர்ச்சைகளில் சிக்குவது இது முதல் முறையல்ல; கடந்த காலங்களிலும் அவர் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியுள்ளார்.
பல முன்னணி இயக்குநர்கள் அவருடன் பணியாற்ற விரும்புவதால், அவர் தொடர்ந்து பணி வாய்ப்புகளைப் பெற்று பரபரப்பாக இயங்கி வருகிறார்; இது அவருக்கு ஒருவித அதிகாரத்தையும் அளிக்கிறது. மேலும் பல பாடகிகள் முன்வந்து இது குறித்துப் பேசினால், அந்த இசையமைப்பாளர் கடுமையான சிக்கலைச் சந்திக்க நேரிடலாம் என்று திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பாடகி ஸ்வாகதா தமிழ் திரையுலகில் மிகவும் அறியப்பட்ட பாடகி. இசைக் கலைஞர். இவர் பிக்பாஸ் புகழ் மாயாவின் உடன் பிறந்த சகோதரி.
இதற்கு முன் அளித்துள்ள பேட்டி பலருக்கும் அதிர்ச்சி கொடுக்கும் வகையில் இருந்தது. அவர் ஒரு யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டி ஒன்றில் தன்னை ஒரு இசையமைப்பாளர் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கினார். என்றும் அதில் இருந்து மீண்டு வர தனது குடும்பத்தினர் தான் உதவினர் என்றும் தெரிவித்து இருந்தார்.
“நான் அந்த இசையமைப்பாளரிடம் சில ஆண்டுகள் இசைக் கலைஞராக பணியாற்றி வந்தேன். அவர் என்னிடத்தில் நன்றாகத்தான் பழகினார். என்னிடத்தில் இருந்து அவ்வப்போது செலவுக்கு பணம் வாங்கினார். இப்படி என்னிடத்தில் லட்சக்கணக்கில் வாங்கி விட்டார். ஒருமுறை என்னிடத்தில் அவரது ஸ்டூடியோவில் அத்துமீறி நடந்து கொண்டார். 7 ஆண்டுகளுக்கு முன்னர் நடைபெற்ற இந்த சம்பவத்தின் போது நான் மிகவும் சின்ன பெண். அந்த இசையமைப்பாளர் மிகவும் பெரிய ஆள். நான் காவல்துறையில் சென்று புகார் சொன்னாலும் எதுவும் எடுபடாது. சில நாட்கள் பேசிவிட்டு நகர்ந்து விடுவார்கள்.
ஸ்டூடியோவில் வைத்து அத்து மீறியது தொடர்பான சிசிடிவி வீடியோவைக் காட்டியும் என்னை பிளாக் மெயில் செய்தார். நான் இந்த வீடியோவை ரிலீஸ் செய்தால் உன்னுடைய மானம் தான் போகும். எனக்கு எந்த பயமும் இல்லை, நான் காவல்துறைக்கு போகிறேன் என்று கூறினேன். அதன் பின்னர் எனது காலில் எல்லாம் விழுந்து மன்னிப்பு கேட்டார். எனது வீட்டிற்கே வந்து எனது காலில் விழுந்தார். எனது சகோதரி மாயா மற்றும் மாயாவின் தோழிகள் கண் முன்னே தான் எனது காலில் விழுந்தார்.
நான் அவரது மியூசிக் கார்டுகளை திருடி விட்டேன், எனக்கு பைத்தியம் பிடித்துவிட்டது என்று கூறி மற்றவர்களைச் சமாளித்தார். எனது பெற்றோர்களுக்கு இந்த விஷயம் எல்லாம் தெரியும், இதைச் சொன்னதும் அவர்கள் பயந்து, எனக்கு திருமணம் செய்து வைக்க முடிவெடுத்து, மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்துவிட்டனர். எனது சகோதரி மாயா தான் என்னை தமிழ்நாட்டில் இருந்து ரிஷிகேஷிக்கு அனுப்பி வைத்தார். நான் முறையாக சட்டப்படி அந்த இசையமைப்பாளரை அம்பலப்படுத்துவேன்” என்றும் அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார். இவர் தொடர்ந்து குற்றச்ம்சாட்டி வரும் அந்த காம கொடூர இசையமைப்பாளர் யார் என்று ரசிகர்கள் என்று கேட்டு வருகிறார்கள்.
