Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

Republic Tamil

அரசியலில் இருந்தே ஒதுங்கி இருகிற மு.க.அழகிரியை மறுபடியும் அரசுகள் சீண்டி பார்க்கிறது என அவரது ஆதரவாளர்கள் கொந்தளிக்கிறார்கள். காரணம் அவரது மகன் துரை தயாநிதிக்கு எதிராக அமலாக்கத்ததுறை நீதிமன்றத்தில் எடுத்த நடவடிக்கைதான்.

சட்ட விரோத பணப்பரிமாற்ற வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருக்கிற மு.க.அழகிரி அழகிரியோட மகன் துரை தயாநிதியின் உடல்நிலை, மனநிலை பற்றிய மருத்துவ பரிசோதனை செய்து ரிப்போர்ட்டை கொடுக்க ஜிப்மர் மருத்துவமனைக்கு மதுரை சிபிஐ நீதிமன்றம் உத்தரவு போட்டிருக்கிறது. காரணம் நரம்பியல் குறைபாடு, பக்கவாதம் உள்ளிட்ட பிரச்சனைகளில் இருக்கிற துரை தயாநிதியால் விசாரணைக்கு நேரில் வர முடியாது என கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.

இதை எதிர்த்துதான் அமலாக்கத்ததுறை கோர்ட்டில் வாதாடி இருக்கிறது. கிரிக்கெட் போட்டியை பார்க்க போறாரு. ஓட்டு போடவும் போயிருக்காரு என அமலாக்கத்ததுறை துரை தயாநிதி பற்றிய ஆதாரங்களை கோர்ட்ல காட்டிய பிறகுதான் நீதிமன்றம் அவரை பரிசோதனை செய்ய உத்தரவிட்டுருக்கிறது. ஜெயலலிதா காலத்தில் கீழவளவு காவல் நிலையத்தில் போடப்பட்ட கிரானைட் முறைக்கேடு வழக்கில் அரசு நிலத்தில் சட்ட விரோதமாக கிரானைட் குவாரி நடத்தி அரசுக்கு
பெரிய வருவாய் இழப்பை ஏற்படுத்தினார் என குற்றம் சாட்டப்பட்டு இருந்தது. இந்த வழக்கில் உள்ளே வந்த அமலாக்கத்ததுறை 256 கோடிக்கு சட்டவிரோதமாக பணப்பரிவர்த்தனை தடை சட்டத்தில் துரை தயாநிதி மீது வழக்கு போட்டது. இந்த வழக்குதான் இப்போது மு.க.அழகிரி குடும்பத்தை நெருக்க துவங்கி இருக்கிறது.

இதையும் படியுங்க  விஜயை ஜெயிக்க வைத்த 'மாப்பிள்ளை' சபரீசன்..! குடும்பத்துக்குள்ளேயே வேட்டு..! அறிவாலயத்தை ஒழித்துக் கட்டிய பகீர் பின்னணி..!

ஆனால் அழகிரி ஆதரவாளர்களோ கிரிக்கெட் ஸ்டேடியத்துக்கு போனதும் துரை தயாநிதி அடிக்கடி போகிற பல இடங்களுக்கு அவரை கூட்டிட்டு போறதும் துரை தயாநிதியுடைய சிகிச்சைக்கான ஒரு அங்கம் என ஏற்கனவே போன இடங்களுக்கு அவரை கூட்டிச் சென்றால் அவருடைய நினைவுகள் திரும்ப வாய்ப்பு இருக்கிறது என மருத்துவர்கள் சொன்னதால் அவரை கூட்டிச் செல்கிறோம் எனச் சொல்கிறார்கள். இந்த வழக்கால் திரும்பவும் அழகிரியை அரசியலுக்குள் இழுக்கிற வேலைகளை யாரோ செய்ய ஆரம்பித்து இரக்கிறார்களோ என சந்தேகப்படுகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

52 minutes ago at 52 minutes ago