Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

ttv

2024 நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது அதிமுக பொதுச்செயலாளராக டிடிவி.தினகரன் பதவி ஏற்பார் என சொன்னார் அன்றைய பாஜக தலைவர் அண்ணாமலை. ஆனால் இதுவரை அப்படி நிகழவில்லை. இந்த நிலையில் இடைத்தேர்தல் முடிவுகளால் அதிமுக கூடாரம் கொந்தளித்து கிடக்க, அதிமுக பொதுச் செயலாளராக தினகரன் அமர்த்தப்படலாம் என டெல்லி பற்றி படப்படப்பதுதான் எம்ஜிஆர் மாளிகையை கிடுகிடுக்க வைக்கும் ஹாட் டாபிக்.

இது குறித்து அரசியல் பார்வையாளர்கள் சிலரிடம் பேசினோம். ”அதிமுகவுக்கு எடப்பாடி தலைமை ஏற்ற பிறகு 2019 நாடாளுமன்ற தேர்தல் முதல் 2026 சட்டமன்ற தேர்தல் வரை 11 தோல்விகளை சந்தித்தவர் என்கிற குற்றச்சாட்டு அவர் மீது வைக்கப்படுகிறது. அதுவும் 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டதை அடுத்து ஆளுமைக்குரிய தலைவராக எடப்பாடி இல்லை என்ற சத்தம் அதிகமாக கேட்க தொடங்கிவிட்டது.

அதுவும் எஸ்.பி.வேலுமணி, பி.தங்கமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட இரண்டாம் கட்ட தலைவர்களே, அவருக்கு எதிராக பகிரங்கமாக போர்கொடி தூக்கி உள்ளனர். இப்படிப்பட்ட சூழலில் தாராபுரம், மதுராந்தகம் ஆகிய இரண்டு தொகுதிகளிலும், அதிமுக தோல்வியை சந்தித்ததால், பொதுச்செயலாளர் பதவியில் இருந்த எடப்பாடி பதவி விலக வேண்டும் என்ற முழக்கம் கட்சியில் உள்ள எதிர் முகாமினரால் அழுத்தமாக முன்வைக்கப்படலாம்.

eps

அதே நேரத்தில் டிடிவி.தினகரன் தலைமையிலான அமமுகவை அதிமுகவுடன் இணைப்பதற்கான முயற்சியில் டெல்லி மேலிடம் தீவிரம் காட்ட தொடங்கும். இந்த நடவடிக்கைக்கு எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம், பி.தங்கமணி உள்ளிட்ட மாஜிக்கள் ஆதரவு தருவார்கள் என்பதால், 2017ல் அதிமுகவில் இருந்து தன்னை நீக்கிய எடப்பாடிக்கு பாடம் புகட்டும் சந்தர்ப்பம் கிடைத்திருப்பதாக எண்ணி டிடிவி.தினகரனும் அதிமுக பொதுச்செயலாளராக பதவி ஏற்று கொள்வார். இதை கணக்கில் வைத்தே 2026 சட்டமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக தலைமையை ஏற்று தினகரன் அதில் இணைந்தார்.

இதையும் படியுங்க  “‘பொய்க்கால் குதிரை அரசு’… இரட்டை கொலைக்கு பின் தவெக அரசை தாக்கிய எடப்பாடி!”

இப்போது மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்தும் அவர் பிரச்சாரம் செய்தார்.
இந்த சூழலில்தான் கடந்த இரு தினங்களாக அதிமுகவும், அமமுகவும் ஒன்றாக இணைய போகின்றன என்ற தகவல்கள் டெல்லியில் இருந்து கசிய விடப்படுகின்றன. ஒரு தேர்தலில் கூட எடப்பாடியால் வெற்றி பெற முடியாத நிலையில் பொன்விழா கண்ட 31 ஆண்டுகள் தமிழகத்தை ஆட்சி செய்த அதிமுக அடித்தளம் பொத்துக்கொண்டு தடுமாறுகிறது.

சட்டமன்ற தேர்தலின் போது பாஜக அழுத்தத்தால் அமமுகவை கூட்டணிக்குள் கொண்டுவர எடப்பாடி ஒப்புக்கொண்டார். ஆனால் சசிகலா, ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்டோரை கட்சியில் சேர்த்து கொள்ள உறுதியாக மறுத்துவிட்டார். இப்போது நடைபெற்ற இடைத்தேர்தல் கூட அதிமுகவுக்கானதுதான். இதிலும் அதிமுக வெற்றி பெறவில்லை. இதனால் அடுத்தடுத்த கட்சி நிர்வாகிகளும் எம்எல்ஏக்களும் ஆளும் கட்சியை நோக்கி படையெடுக்க தொடங்குவார்கள். இதை தடுக்க அதிமுகவை முதலில் பலப்படுத்த வேண்டும்.

ttv dhinakaran

அதன் முதல்படியாக தினகரன் தலைமையிலான அமமுகவை, அதிமுகவுடன் இணைக்கும் முயற்சி தொடங்கப்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது. 1989ல் அதிமுக இரண்டாக உடைந்த போது சேவல் சின்னத்தில் ஜெயலலிதாவும், புறா சின்னத்தில் ஜானகியும் தனித்தனியாக தேர்தலில் போட்டியிட்டனர். அப்போது, ஜெயலலிதா தன்னுடன் வந்த பலருக்கு மாவட்ட செயலாளர் உள்ளிட்ட பொறுப்புகளை வழங்கினார். பின்னர் அதிமுக ஒன்றிணைந்ததும், ஜெயலலிதா நியமித்த நிர்வாகிகளின் எதிர்காலம் குறித்த கேள்வி எழுந்தது.

இதையும் படியுங்க  விஜயை பழி வாங்க நடந்த நாடகம்..! குமுறும் தவெக நிர்வாகிகள்..!

அப்போது எம்ஜிஆரால் நியமிக்கப்பட்டவர்கள் மீண்டும் அதே பொறுப்புக்கு வந்தனர். இணைந்தவர்களுக்கு இணை, துணை போன்ற பொறுப்புகள் வழங்கப்பட்டன. அமமுகவிலிருந்து வருபவர்களுக்கு இதே பாணியில் பதவி வழங்க வாய்ப்பு இருக்கிறது. அதிமுக தோல்வி அடைந்ததால் எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் ஆகியோர் பொதுக்குழுவை கூட்டி விளக்கப்பட்டவர்களை கட்சிக்குள் இணைக்க வேண்டும் என்று எடப்பாடிக்கு நெருக்கடி கொடுக்கலாம் என்றும் இவர்களுக்கு பின்னால் பாஜக இருக்கலாம் என்றும் தெரிகிறது.

கட்சி வளர்ச்சிக்கான தங்கள் பேச்சை கேட்காமல் எடப்பாடி தனது இஷ்டத்துக்கு செயல்படுவது டெல்லி பாஜகவுக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது. எனவே, எடப்பாடியை அதிமுக பொதுச்செயலாளர் பொறுப்பிலிருந்து விலக்கிவிட்டு, அவ்விடத்தில் தினகரணை அமர வைப்பது குறித்து, டெல்லி பாஜக தீவிர ஆலோசனையில் ஈடுபட்டிருப்பதாகவும் கூறுகிறார்கள்.

Edappadi

எப்படி இருந்தாலும், வரக்கூடிய நாட்கள் எடப்பாடிக்கு நெருக்கடியான நாட்களே என்று முடித்தார்கள். இது குறித்து அமமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் செந்தமிழனிடம் கேட்டபோது, நாங்கள் இப்போதும் அண்ணன் தம்பிகளாகத்தான் இருக்கிறோம். அக்டோபர் 3ன்ற ஆம் தேதி தாராபுரத்தில் அதிமுக மாவட்ட செயலாளரை காவல்துறை கைது செய்தபோது கூட எங்கள் பொதுச்செயலாளர் நேரில் சென்று கண்டனம் தெரிவித்தார்.

இதையும் படியுங்க  "அதிமுக கரைவதற்கு ஒன்றும் சர்க்கரை அல்ல; இது இரும்பு தவெக அரசுக்கு எடப்பாடி கொடுத்த 55-வது ஆண்டு ‘அதிர்வேட்டு’ அறிக்கை!

அதிமுகவை கைப்பற்றுவதே நோக்கம் என்று அமமுக ஆரம்பிக்கப்பட்டாலும் இப்போது அதற்கான தேவை எழவில்லை. ஆனால் இரு கட்சிகளும் ஒன்றாக வேண்டும் என்ற எண்ணம் இரு கட்சிகளின் தொண்டர்கள் நிர்வாகிகள் மத்தியில் இருக்கிறது. அதை மறுப்பதற்கு இல்லை என்றார். அதிமுக கொள்கை பரப்பு துணைச செயலாளர் ஆவடி குமாரோ 1989ல் அதிமுக என்ற கட்சி இரண்டு அணிகளாக இருந்தது. அதனால் இணைப்பு சாத்தியமானது. ஆனால் இப்போது அதிமுகவும், அமமுகவும் தனித்தனி கட்சிகள் என்பதால் இணைந்தாலும் கூட நிர்வாகிகளை அவர்களுக்குரிய மரியாதையோடு தக்க வைத்துக் கொள்வதில் சிக்கல் ஏற்படும்.

எத்தனை தோல்வி ஏற்பட்டாலும் மேல்மட்ட நிர்வாகிகள் வேண்டுமானால் பாதை மாறி செல்லலாம். ஆனால் அடிமட்ட தொண்டர்கள் ஒருபோதும் அதிமுகவை விட்டு கொடுக்க மாட்டார்கள். எனவே இரு கட்சியினரும் வழக்கம் போல ஒன்றாக பயணிப்போம்” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 days ago at 5 days ago