மக்கள் தீர்ப்பா… அல்லது டிவி சேனல்களின் ஆர்ப்பாட்டமா? டிவியைத் திறந்தாலே ஒரே ரத்தக் களறிதான்! “இந்தக் கட்சிக்கு 130, அந்தக் கட்சிக்கு 150, மூன்றாவது அணிக்கு மகுடம் என ஆளாளுக்கு ஒரு கணக்கைச் சொல்லி அலற விடுகிறார்கள். ஆனால் ஒரு நிமிடம்… இந்த எக்ஸிட் போல் கணிப்புகள் எல்லாம் நிஜமாகவே பலித்திருக்கிறதா? வரலாறு என்ன சொல்கிறது? கொஞ்சம் பிளாஷ்பேக் போய் பார்ப்போமா?
எக்ஸிட் போல் பொய்த்துப்போன ‘டாப் 5’ அதிரடித் தோல்விகள்!
1.2004 – வாஜ்பாய்க்கு அதிர்ச்சி வைத்தியம்! “இந்தியா ஒளிர்கிறது” வாஜ்பாய் மீண்டும் பிரதமர்; 280+ இடங்கள் என்றது எக்ஸிட் போல். நிஜத்தில் காங்கிரஸ் (UPA) கூட்டணி ஆட்சியைப் பிடித்தது. மன்மோகன் சிங் பிரதமர் ஆனார். கணிப்பு அப்படியே தலைகீழ்!
- 2016 – தமிழகத்தின் ட்விஸ்ட்!
கணிப்பு: திமுக ஆட்சி, ஸ்டாலின் முதல்வர், ஜெயலலிதாவுக்குத் தோல்வி. நிஜம்: ‘ஜெயலலிதா’ 136 இடங்களுடன் மெஜாரிட்டி பெற்றார். 32 ஆண்டுகளுக்குப் பிறகு ஆளுங்கட்சி மீண்டும் ஜெயித்தது. கணிப்பு நிறுவனங்கள் மூஞ்சியில் கரி! - 2015 – பீகார் சுனாமி!
மோடி அலை வீசும்; பாஜக ஆட்சிக்கு வரும் என்று கணிப்பு சொன்னது. நிஜம் என்னவென்றால் நிதிஷ் + லாலு கூட்டணி 178 இடங்களை அள்ளியது. பாஜாவிற்கு வெறும் 53 தான். வித்தியாசம் 100+ இடங்கள்! - 2017 – உ.பி-யின் எக்ஸ்ட்ரா சீட்கள்!
எக்ஸிட் போல் கணிப்பு: பாஜகவுக்குக்கு 170-190 தான் வரும், இழுபறி நீடிக்கும்.
உண்மை என்னவென்றால் யோகி ஆதித்யநாத் தலைமையில் பாஜக 312 இடங்களை வென்றது. 120 சீட்டுகளைக் குறைவாகக் கணித்து சொதப்பினார்கள்.
- 2021 – வங்காளத்தில் கவிழ்ந்த ‘கணிப்பு’!
எக்ஸிட் போல் கணிப்பு: “தீதி கயி” (மம்தா அவுட்). இந்த முறை பாஜக தான். நிஜத்தில் மம்தா பானர்ஜி 213 இடங்களுடன் ஹாட்ரிக் வெற்றி! கணிப்பு நிறுவனங்கள் ‘எக்ஸைட்’ ஆகி ‘டைட்’ ஆகிப்போயின.
ஏன் இந்த எக்ஸிட் போல் இவ்வளவு சொதப்புகிறது?
4 முக்கிய காரணங்கள். சாம்பிள் குறைபாடு: 6 கோடி வாக்காளர்கள் இருக்கும் தமிழ்நாட்டில், வெறும் 10,000 பேரிடம் கேட்டுவிட்டு 100% முடிவைச் சொல்வது, ஒரு ஸ்பூன் சோற்றை வைத்து மொத்த பானைச் சோற்றையும் கணக்கிடுவது போன்றது.
மௌனமான வாக்காளர்கள் : வாக்குச்சாவடிக்கு வெளியே மைக்கை நீட்டினால், கட்சிக்காரர்களுக்கு பயந்து பலர் உண்மையைச் சொல்லமாட்டார்கள். அவர்கள் மனதுக்குள் வைத்திருக்கும் ரகசியம் வாக்குப்பதிவு இயந்திரத்தில் தான் தெரியும்.
கடைசி நேர ‘மூட்’ ஸ்விங்: காலை 7 மணிக்கு இருந்த மனநிலை மாலை 5 மணிக்கு இருக்காது. வாட்ஸ்அப் ஃபார்வேர்டுகளும், டிவி விவாதங்களும் கடைசி 2 மணி நேரத்தில் முடிவை மாற்றிவிடும்!
ஏஜென்சி பயாஸ்: சில நிறுவனங்கள் குறிப்பிட்ட கட்சிகளிடம் பணம் வாங்கிக்கொண்டு அவர்களுக்குச் சாதகமாக ‘செட்டிங்’ முடிவுகளை வெளியிடுவதாகப் புகார்கள் உண்டு. இதையே 2019-ல் ‘Godi Media’ என நெட்டிசன்கள் வறுத்தெடுத்தனர்).
2026 தமிழ்நாடு: யாருக்கு வெற்றி?
இப்போதே மூன்று விதமான கதைகள் ஓடுகின்றன.
திமுக ஆதரவு சேனல்கள்: “நாங்கதான் 130-150 சீட்!”
அதிமுக+பாஜக ஆதரவு சேனல்கள்: “இல்ல இல்ல, 130-150 சீட் எங்களுக்குத்தான்!”
தவெக விஜய் ஆதரவு கணிப்பு: “ரெண்டு பேரையும் ஓரம் கட்டுவோம்; நாங்க 40-60 சீட்!”
கொஞ்சம் யோசிங்க… மொத்தம் இருப்பதே 234 இடங்கள்தான். எல்லாரும் 150 சீட் ஜெயிச்சா, தோக்குறது யாரு? கணக்கு இடிக்குதே! எக்ஸிட் போல் என்பது டிவி சீரியல் கிளைமாக்ஸ் மாதிரி; பரபரப்புக்கு பார்க்கலாம். ஆனால் நம்பி இப்போதே பால்கோவா ஆர்டர் பண்ணக்கூடாது! உண்மையான எக்ஸிட் போல் மே 4-ம் தேதி தான். அன்று வாக்குப்பதிவு மிஷன் தான் பேசும். அதுவரை மற்றதெல்லாம் வெறும் பேச்சு தான்.
வரலாற்றை மறக்காதீர்கள்… கணிப்புகள் தோற்கலாம், ஆனால் மக்கள் தீர்ப்பு ஒருபோதும் தோற்காது!. உங்க கருத்து என்ன? 2026-ல் யார் களம் இறங்குவார்? கமெண்ட் பண்ணுங்க!
