https://republictn.com/

தமிழ் சினிமாவின் போக்கையே மாற்றியமைத்த ‘இயக்குனர் இமயம்’ பாரதிராஜாவின் உடலுக்கு, தேனி மாவட்டத்தில் உள்ள அவரது பண்ணை இல்லத்தில் இன்று முழு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்குகள் நடைபெற்றன.

இத்தகைய உயரிய அரசு மரியாதை இதற்கு முன்பு மூத்த கம்யூனிஸ்ட் தலைவர் நல்லகண்ணு மற்றும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் உள்ளிட்ட மிகச் சில முக்கிய ஆளுமைகளுக்கு மட்டுமே வழங்கப்பட்டிருந்தது.

பாரதிராஜா இயக்கிய முதல் திரைப்படமான ’16 வயதினிலே’ மற்றும் அவரது திரைப்பயணத்தின் மிக முக்கியமான படைப்புகளில் ஒன்றான ‘முதல் மரியாதை’ திரைப்படத்தை நினைவுகூரும் வகையில், “முதல் மரியாதைக்கு இறுதி மரியாதை” என தமிழ் திரையுலகினரும் ரசிகர்களும் உருக்கத்துடன் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

தமிழ் சினிமாவுக்கு அவர் ஆற்றிய மகத்தான பங்களிப்பையும், திரைப்பட உலகில் ஏற்படுத்திய தாக்கத்தையும் கவுரவிக்கும் விதமாக, நாட்டின் தலைசிறந்த ஆளுமைகளுக்கு வழங்கப்படும் இந்த உயரிய மரியாதையை தமிழ்நாடு அரசு அறிவித்திருந்தது.

இதனைத் தொடர்ந்து, தேனியில் உள்ள அவரது பண்ணை இல்லத்தில் இன்று பிற்பகல் ஆயுதப்படை போலீசார் அணிவகுப்பு மரியாதை செலுத்தினர். மேலும், 72 குண்டுகள் முழங்க துப்பாக்கிகளை வானத்தை நோக்கிச் சுட்டு அரசு மரியாதை செலுத்தப்பட்டது.

ரசிகர்கள், திரையுலக பிரபலங்கள் மற்றும் பொதுமக்களின் இறுதி அஞ்சலிக்குப் பிறகு, இயக்குனர் இமயம் பாரதிராஜாவின் உடல் முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 days ago at 3 days ago