Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

அதிமுக முன்னாள் எம்எல்ஏ வெங்கட்ராமன், திமுகவில் இணைந்துள்ளார். தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில், திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில், தனது ஆதரவாளர்களுடன் அவர் திமுகவில் இணைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

2014ஆம் ஆண்டு ஆலந்தூர் இடைத்தேர்தலில் வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராக பதவி வகித்த வெங்கட்ராமன், தற்போது அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்துள்ளார்.

இதுகுறித்து கருத்து தெரிவித்த அவர், நிலையான மற்றும் குழப்பமற்ற தலைமையின் கீழ் பணியாற்ற ஆவலாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறியதாவது, “அண்ணன் அவர்கள் என்னை திராவிட முன்னேற்றக் கழகத்தில் தாய்மையான உள்ளத்தோடு வரவேற்று அரவணைத்துக் கொண்டார்கள். அவருடன் நான் எப்போதும் உறுதியாக இருப்பேன். இந்த நிலையான, குழப்பமற்ற தலைமையின் கீழ் பணியாற்ற எனது மனம் ஆவலாக உள்ளது” என தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்க  "₹15 லட்சமா? ₹16 ஆயிரமா? தவெக MLA கனிமொழியின் வைரல் லேப்டாப் பேக்… பின்னணியில் இருக்கும்  உண்மை!"
Eswari

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 months ago at 5 months ago