Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

சுப்ரமணியபுரம்’ படம் மூலம் பிரபலமானவர் சுவாதி. இவர் மந்த் ஆஃப் மது’ பட இயக்குநர் ஸ்ரீகாந்த் நாகோடியை ரகசியமாகத் திருமணம் செய்துகொண்டார். இந்தத் திருமணப் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.

சுவாதி, 2018-ல் மலையாள பைலட் விகாஸ் வாசு என்பவரைத் திருமணம் செய்தார். ஆனால், 2022-ல் அவரை விவாகரத்து செய்தார். தனது சமூக வலைதளப் பக்கங்களிலிருந்து கணவரின் படங்களை நீக்கியபோது இந்த விஷயம் வெளிச்சத்துக்கு வந்தது

சுவாதி தனது திருமணப் படங்களை சோஷியல் மீடியாவில் பகிர்ந்து, “திருமணமாகிவிட்டது” என ஒரே வார்த்தையில் பதிவிட்டுள்ளார். இந்த போஸ்ட் வைரலாகியுள்ளது.

2023-ல் வெளியான ‘மந்த் ஆஃப் மது’ படம் மூலம் சுவாதி மீண்டும் நடிக்க வந்தார். இதன் இயக்குநர் ஸ்ரீகாந்த் நாகோடி. இப்படத்தில் பணியாற்றியபோது இருவருக்கும் இடையே காதல் மலர்ந்து, தற்போது திருமணத்தில் முடிந்துள்ளது.

தெலுங்கில் ‘டேஞ்சர்’ படம் மூலம் நடிகையாக அறிமுகமானார் ஸ்வாதி. ஆனால், ‘ஆடவாரி மாடலகு அர்த்தாலே வேருலே’ படத்தில் த்ரிஷாவின் தங்கையாக நடித்து பெரும் புகழ் பெற்றார். தெலுங்கு மட்டுமல்லாமல், தமிழிலும் சுவாதி தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தார். குறிப்பாக, ‘சுப்ரமணியபுரம்’ படத்தில் இவரது இயல்பான நடிப்புக்கு பெரும் பாராட்டு கிடைத்தது. நடிப்பால் மட்டுமல்லாமல், தனது எளிமையான குணத்தாலும் ரசிகர்களைக் கவர்ந்தார்.

இதையும் படியுங்க  ”கண்ணீரில்-பூர்ணிமா-…-பாக்யராஜ்-நினைவில்-ஒவ்வொரு-நாளும்-மிஸ்-பண்றேன்-நெஞ்சை-உலுக்கும்-பதிவு!

நடிகை சுவாதி ரெட்டி தமிழில் சுப்ரமணியபுரம் மட்டுமின்றி, இதற்குத் தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, வடகறி போன்ற படங்களிலும் நாயகியாக நடித்திருந்தார்.

முதல் திருமணத்துக்கு பின் தமிழ் சினிமா பக்கம் தலைகாட்டாமல் இருந்தார். இருப்பினும் அந்த திருமணம் விவாகரத்தில் முடிந்ததால், தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளில் மட்டும் நடிக்கத் தொடங்கினார். தற்போது இயக்குநரையே அவர் இரண்டாவது திருமணம் செய்துள்ளதால், அவர் தொடர்ந்து நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது

Eswari

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 months ago at 2 months ago