Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டிக்கு முன்பாக, இந்திய அணி வீரர்கள் டீம் பேருந்தில் பயணம் செய்தபோது இந்த சுவாரஸ்யமான சம்பவம் நடைபெற்றுள்ளது.

பள்ளி நாட்களில் மாணவர்கள் மேசையின் மீது பேனாக்களை வைத்து மோதவிட்டு விளையாடும் பிரபலமான ‘பென் ஃபைட்’ விளையாட்டை, சர்வதேச கிரிக்கெட் நட்சத்திரங்களான சஞ்சு சாம்சன் மற்றும் வருண் சக்கரவர்த்தியும் லண்டன் பயணத்தின் போது விளையாடி மகிழ்ந்தனர்.

இந்த ஜாலியான போட்டியில், சஞ்சு சாம்சன் தனது சாதுரியமான ஆட்டத்தின் மூலம் வருண் சக்கரவர்த்தியின் பேனாவை விரைவாக வீழ்த்தி வெற்றி பெற்றார்.

இந்த வீடியோவை The Bharat Army உள்ளிட்ட சமூக வலைதளப் பக்கங்கள் பகிர்ந்ததைத் தொடர்ந்து, அது ரசிகர்கள் மத்தியில் வேகமாகப் பரவி வருகிறது.

வீடியோவை பார்த்த ரசிகர்கள், “எவ்வளவு பெரிய கிரிக்கெட் வீரர்களாக இருந்தாலும், பள்ளிப் பருவ நினைவுகளும் ‘பென் ஃபைட்’ விளையாட்டும் என்றுமே தனி மகிழ்ச்சிதான்” என்று நெகிழ்ச்சியுடன் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.

இந்திய கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்தில் நடைபெற்று வரும் டி20 தொடரில் விளையாடி வருகிறது.

இதையும் படியுங்க  ஐபிஎல் சூதாட்டம்… தாவூத் இப்ராஹிமின் மிரட்டல்..! லலித் மோடியில் அதிர வைக்கும் வாக்குமூலம்..!
Eswari

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 months ago at 2 months ago