Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

vijay

பதவியேற்று ஐந்து மாதங்கள்தான் ஆகிறது… அதற்குள் இப்படி ஒரு ஆபாச மிரட்டல் வீடியோவா?” – சேலம் அரசியல் வட்டாரத்தில் இப்போது பரபரப்பாகப் பேசப்படும் விவகாரம் இதுதான். த.வெ.க. ஆட்சி, ‘லஞ்சம் வாங்க மாட்டோம்’ என்று மேடைதோறும் முழங்கிக்கொண்டிருக்கும் நேரத்தில், அந்தக் கட்சியின் எம்.எல்.ஏ மீதே ‘கமிஷன்’ புகார் வெடித்திருப்பதுதான் பரபரப்புக்குக் காரணம்.

ஸ்பாட்டில் நடந்தது என்ன?

சேலம் கன்னங்குறிச்சி அருகே மாநகராட்சி 8-வது வார்டு. அங்கு மூக்கனேரி உபரிநீர் மற்றும் கழிவுநீர் வெளியேறும் கால்வாய் மீது சிமெண்ட் ஸ்லாப் அமைக்கும் பணி நடந்துவந்துள்ளது. (இந்த இடத்தின் அருகில்தான் செந்தில்குமார் என்ற ரியல் எஸ்டேட் அதிபர் வீட்டு மனைகள் அமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது). இந்தப் பணி மாநகராட்சி கமிஷனர் மற்றும் காவல்துறை அறிவுறுத்தலின் பேரில் நடப்பதாக நில உரிமையாளர்கள் தரப்பு சொல்கிறது.

இந்தப் பணியை ‘ஆய்வு’ செய்வதாகச் சென்றார் சேலம் வடக்கு தொகுதி த.வெ.க. எம்.எல்.ஏ சிவக்குமார். அங்கு அவர், “என்னைக் கேட்காமல் ஸ்லாப் அமைக்கக்கூடாது… எல்லாத்தையும் உடைத்து எறிந்துவிடுவேன்” என்று கூறி, ஒப்பந்ததாரரையும் ஊழியர்களையும் ஆபாச வார்த்தைகளால் திட்டி மிரட்டியதாக ஒரு வீடியோ வைரலாகியுள்ளது.

இதையும் படியுங்க  இந்த பக்கம் வராதீங்க... இன்று முதல் 10 நாட்களுக்கு பக்தர்களுக்கு தடை - எங்கு தெரியுமா?

அந்த வீடியோவில், “நான் ஒரு எம்.எல்.ஏ… நினைத்தால் உங்களை எல்லாம் எஃப்.ஐ.ஆர் போட்டு உள்ளே தள்ளிவிடுவேன்” என்று அவர் பேசியதாகக் கூறப்படுகிறது. பொது வெளியில் மக்கள் பிரதிநிதி ஒருவர் பயன்படுத்தியதாகக் கூறப்படும் இந்த மொழிதான் அனைத்துத் தரப்பிலும் கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.

‘பகீர்’ கிளப்பும் அடுத்த வீடியோ!

இந்த விவகாரம் அத்துடன் நிற்கவில்லை. ரியல் எஸ்டேட் உரிமையாளர்களில் ஒருவரான செந்தில்குமார் வெளியிட்ட இன்னொரு வீடியோ, எம்.எல்.ஏ மீது அடுத்த குண்டைத் தூக்கிப்போட்டுள்ளது.

அதில் அவர், “பதவியேற்ற சில நாட்களிலேயே எங்களைத் தொடர்புகொண்ட எம்.எல்.ஏ, ரியல் எஸ்டேட் தொழில் செய்வதால் பணம் தர வேண்டும் என்றார். பின்னர் 20,000 சதுரடி நிலம்… இல்லையென்றால் 5,000 சதுரடி… அதுவும் இல்லையென்றால் 3 கோடி ரூபாய் தர வேண்டும் என்று மிரட்டினார்” என்று பகிரங்கமாகக் குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும், “முதல்வர் விஜய் லஞ்சம் வாங்கக்கூடாது என்று பேசிவரும் நிலையில், எம்.எல்.ஏ இப்படிச் செய்வது வேதனை அளிக்கிறது. உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் நீதிமன்றம் செல்வேன்” என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

இதையும் படியுங்க  "What is surprising to me is how swift the backlash is

இந்தப் புகார் தொடர்பாக காவல்துறை விசாரணை நடத்திவருவதாகக் கூறப்படுகிறது.

எம்.எல்.ஏ தரப்பு என்ன சொல்கிறது?

வீடியோ தொடர்பான குற்றச்சாட்டு குறித்து விளக்கம் கேட்க எம்.எல்.ஏ சிவக்குமாரைத் தொடர்புகொண்டபோது, விவரத்தைக் கேட்டுவிட்டு அவர் போனை சுவிட்ச் ஆஃப் செய்துவிட்டார் 

இந்த நிலையில், திடீரென ஒரு யூடியூப் சேனலுக்குப் பேட்டியளித்துள்ளார் சிவக்குமார். அதில் அவர்,

Oplus_16908288

“பொதுமக்கள் அளித்த புகாரின் அடிப்படையில்தான் அங்கு ஆய்வுக்குச் சென்றேன். இது என்னுடைய தனிப்பட்ட விவகாரம் அல்ல. நான் எந்தக் கெட்ட வார்த்தையும் பேசவில்லை. வைரலாகும் வீடியோ AI மூலம் தவறாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது” என்று விளக்கம் அளித்துள்ளார்.

அடுத்தது என்ன?

த.வெ.க. ஆட்சிக்கு வந்து ஐந்து மாதங்களில் அடுத்தடுத்து சர்ச்சைகள் வெடித்துவருகின்றன. “ஆய்வு” என்ற பெயரில் அதிகார துஷ்பிரயோகம் நடந்ததா, அல்லது உண்மையிலேயே பொதுமக்கள் நலன் சார்ந்த தலையீடா என்பதை காவல்துறை விசாரணைதான் தெளிவுபடுத்த வேண்டும்.

இது குறித்து காவல்துறையின் அடுத்தகட்ட நடவடிக்கை அல்லது த.வெ.க. தலைமையின் அதிகாரப்பூர்வ விளக்கம் வெளியானால், அதையும் ஆதாரத்துடன் தொடர்ந்து அலசுவோம்.

இதையும் படியுங்க  DIYTrade is a world B2B platform connecting consumers with
Manikandan Kaliyappan

By Manikandan Kaliyappan

ஊடகங்களில், 5 ஆண்டுகள் பணி அனுபம் பெற்றிருக்கிறேன். அரசியல் , க்ரைம், ஸ்டோரி என செய்திகளை சுவாரசியமாக கொடுப்பதில் ஆர்வம் அதிகம். சமூக வலைதளங்களின் டிரெண்டை புரிந்துகொண்டு செய்திகளை வழங்குவதில் தேர்ந்த அனுபவம் உண்டு. தற்போது "REPUBLIC-தமிழ்" ஊடகத்தில் இணை ஆசிரியராக பணியாற்றுகிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 days ago at 2 days ago