Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

இன்றைய டிஜிட்டல் யுகத்தில் அரசியல் தலைவர்கள் தங்களது கருத்துக்களை மக்களிடம் கொண்டு சேர்க்க சமூக ஊடகங்களை ஒரு முக்கிய ஆயுதமாகப் பயன்படுத்தி வருகின்றனர். அந்த வரிசையில், அமைச்சர் கீர்த்தனா தற்போதைய ட்ரெண்டிற்கு ஏற்ப இன்ஸ்டாகிராம் ரீல்ஸில் செம ஆக்டிவாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

சமீபத்தில் அவர் தனது அதிகாரப்பூர்வ பக்கங்களில் பதிவிட்ட சில ரீல்ஸ் வீடியோக்கள், “அமைச்சர் கீர்த்தனாவின் அலப்பறைகள்” என்ற பெயரில் நெட்டிசன்கள் மத்தியில் பயங்கர ட்ரெண்டாகி வருகிறது. வழக்கமான அரசியல் மேடைப் பேச்சுகள், அரசு விழாக்கள் போன்ற ஃபார்மல் விஷயங்களைத் தாண்டி, இந்த ரீல்ஸ்களில் அவர் முற்றிலும் புதிய கோணத்தில் காட்சியளிக்கிறார்.

இந்நிலையில் தேனி மாவட்டம், பெரியகுளம், வடகரை உழவர் சந்தை பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற விழாவில் தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா பங்கேற்றார். அப்போது அமைச்சர் கீர்த்தனா தனது உறவினர்கள் மேளதாளத்துடன் சீர்சுமந்து வந்தபோது அமைச்சரும் இணைந்து சீர் சுமந்து ஊர்வலமாக மண்டபத்தில் நடைபெற்ற விழாவில் பங்கேற்றார்.

இதையும் படியுங்க  "ஸ்டாலினை வீழ்த்த நினைத்த சதி முறியடிப்பு! ஐகோர்ட் கொடுத்த பேரிடி.. துள்ளிக் குதித்த PKS அதிரடி பேட்டி!"


தமிழ்நாடு தொழிற்துறை அமைச்சர் கீர்த்தனாவிற்கு தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் பட்டாசு வெடித்து சால்வை அணிவித்து வரவேற்றனர். திருமண மண்டபத்தில் நடைபெற்ற விழாவில் சகோதரியின் மகளுக்கு மலர் தூவி வாழ்த்து தெரிவித்தார். இல்ல விழாவில் பங்கேற்று விட்டு புறப்பட்ட அமைச்சர் கீர்த்தனாவிடம், செய்தியாளர்கள் கேள்வி எழுப்ப முயன்ற போது, சந்திப்பை தவிர்த்து விட்டு வேகமாக சென்று விட்டார்.

Manikandan Kaliyappan

By Manikandan Kaliyappan

ஊடகங்களில், 5 ஆண்டுகள் பணி அனுபம் பெற்றிருக்கிறேன். அரசியல் , க்ரைம், ஸ்டோரி என செய்திகளை சுவாரசியமாக கொடுப்பதில் ஆர்வம் அதிகம். சமூக வலைதளங்களின் டிரெண்டை புரிந்துகொண்டு செய்திகளை வழங்குவதில் தேர்ந்த அனுபவம் உண்டு. தற்போது "REPUBLIC-தமிழ்" ஊடகத்தில் இணை ஆசிரியராக பணியாற்றுகிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 months ago at 2 months ago