Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

விளாத்திகுளம் மாணவி வழக்கில் குற்றவாளிக்கு இரட்டை தூக்கு தண்டனை விதிக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது என முதலமைச்சர் விஜய் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக முதலமைச்சர் விஜய் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் 12ஆம் வகுப்பு படித்து வந்த மாணவி கடந்த மார்ச் மாதம் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டார் என்று குறிப்பிட்டுள்ளார்.

இவ்வழக்கில் குற்றவாளி தர்ம முனீஸ்வரனுக்கு தூத்துக்குடி மாவட்ட போக்சோ நீதிமன்றம் இரட்டை தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், இவ்வழக்கில் 71 சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டு, துரிதமாக விசாரணை மேற்கொள்ளப்பட்டதன் மூலம் தர்ம முனீஸ்வரன் என்ற குற்றவாளிக்கு பாலியல் குற்றம் மற்றும் கொலை குற்றத்திற்காக இரட்டை தூக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இந்த கொடூர சம்பவம் நடைபெற்ற மூன்று மாதங்களுக்குள் மிக விரைவாக நீதி வழங்கப்பட்டுள்ளது என்றும், பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் அரசின் நடவடிக்கைகளுக்கு துணையாக வழங்கப்பட்டுள்ள இந்த தீர்ப்பு வரவேற்கத்தக்கது என்றும் முதலமைச்சர் விஜய் தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்க  "முதல்வர் விஜய் Vs இயக்குநர் சஞ்சய்! பாக்ஸ் ஆபீஸ் யுத்தம் ஆரம்பம்! வதந்திகளை உடைத்த சஞ்சய்யின் மாஸ் வீடியோ!"
Eswari

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 months ago at 5 months ago