Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

John Pandian

ஜெம் கிரானைட்ஸ் உரிமையாளர் வீரமணி சிறுமிகளை சீரழித்த விவகாரத்தில், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைவரும் தென் மாவட்ட அரசியல் புள்ளியுமான ஜான் பாண்டியன் சிக்கியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஜெம் கிரானைட்ஸ் அதிபர் வீரமணி மீது சிறுமிக்கு எதிரான போக்சோ வழக்கு மற்றும் தீவிரக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டபோது, அந்த விவகாரத்தில் சட்டப்பூர்வ நடவடிக்கைகளை எதிர்கொள்வதற்குப் பதிலாக, திரை மறைவில் கட்டப்பஞ்சாயத்து நடத்த முயன்றதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதில் ஜான் பாண்டியனின் பெயர் பலமாக அடிபட்டது.

Veeramani

இந்த விவகாரம் பூதாகரமானதைத் தொடர்ந்து, ஜான் பாண்டியன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அதில், வீரமணி விவகாரத்தில் தான் தலையிட்டது, பஞ்சாயத்து பேசியது உண்மைதான் என்பதைப் போன்ற தகவல்களை அவர் வெளிப்படையாக ஒப்புக் கொண்டது ஊடகங்களில் விவாதப் பொருளானது.

பாதிக்கப்பட்ட தரப்பிற்கு நியாயம் கிடைக்க வேண்டிய ஒரு தீவிரமான குற்ற வழக்கில், ஒரு அரசியல் இயக்கத் தலைவர் இடைத்தரகராகச் செயல்பட்டுப் பிரச்சினையைத் தீர்க்க முயன்றது எந்த வகையில் நியாயம் என்ற காரசாரமான விவாதங்கள் கிளம்பின. அதிகாரப் பின்னணி கொண்ட தொழிலதிபர்களுக்கு ஆதரவாகச் செயல்படுகிறாரா என்ற விமர்சனங்களும் அவர் மீது தொடுக்கப்பட்டன.

இதையும் படியுங்க  "போன் சுவிட்ச் ஆஃப்.. ஆபீஸ் பூட்டு.. நள்ளிரவில் நடுத்தெருவுக்கு வந்த மணலி மக்கள்: மின்வாரிய அலட்சியத்தால் வெடித்த போராட்டம்!

சட்டம் தன் கடமையைச் செய்ய வேண்டிய போக்சோ வழக்கில், “பஞ்சாயத்து அரசியல்” புகுந்ததும், அதைத் தொடர்ந்து வீரமணி கைது செய்யப்பட்டதும் ஜான் பாண்டியன் வகித்த சர்ச்சைக்குரிய பாத்திரத்தை வெளிச்சம் போட்டுக் காட்டியது. இது அவரது அரசியல் வாழ்க்கையில் மற்றுமொரு கறைப்படிந்த அத்தியாயமாகப் பார்க்கப்படுகிறது.

John Pandian

இந்நிலையில் இந்த விவகாரத்தில் இருந்து தப்பிக்க ஜான் பாண்டியன் வெளிநாடு செல்ல திட்டமிட்டுள்ளதாகவும், அதற்கு ஆதாரமாக விமான டிக்கெட்டையும் பதிவிட்டுள்ளார் யூடியூபர் வாராஹி. இதுகுறித்து அவர், ”CM சார், உங்களைச் சுற்றியுள்ள அதிகாரிகள் யார் என்பதை கொஞ்சம் கவனித்துப் பாருங்கள்.

நீங்கள் நல்லது செய்ய வேண்டும், தவறு செய்பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு செயல்படுகிறீர்கள் என்றால், அந்த நடவடிக்கைகள் உண்மையில் நடைமுறைக்கு வருகிறதா என்பதையும் நீங்கள் கண்காணிக்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது. ரித்தீஷ் தொடர்பான விவகாரத்தில் அவர் லண்டனுக்குச் செல்லும் நிலை எப்படி ஏற்பட்டது?

அடுத்து பிரகாஷ் கன்னையா தொடர்பான விவகாரத்தில், அவர்மீது எழுப்பப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் மற்றும் விசாரணையின் நிலை என்ன? ஜான் பாண்டியன் தொடர்பான விவகாரத்திலும், சட்டப்படி விசாரணை மற்றும் நடவடிக்கைகள் முழுமையாக நடைபெற்றுள்ளதா என்ற கேள்வி எழுகிறது. ஒருவருக்குப் பிறகு ஒருவர் தப்பிச் செல்லும் வாய்ப்பு ஏற்பட்டதாக பொதுமக்களுக்கு சந்தேகம் உருவாகும் நிலையில், அந்த முடிவுகளை எடுத்தது யார்? அதிகாரிகளின் பங்கு என்ன?

இதையும் படியுங்க  "விமான நிலையங்களுக்குப் பறந்த லுக்-அவுட் நோட்டீஸ்.. சிக்கிய ஆபாச வீடியோக்கள்.. ஜெம் வீரமணி வழக்கில் ஆட்டம் காட்டும் முக்கிய புள்ளி!"

எனவே, முதலில் உங்கள் பின்னால் செயல்படும் அதிகாரிகளின் நடவடிக்கைகளை நீங்கள் முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும். யார் தவறு செய்திருந்தாலும், அவர் எந்தப் பதவியில் இருந்தாலும், சட்டத்தின் முன் ஒரே அளவுகோல் இருக்க வேண்டும். தவறு செய்தவர் தப்பிக்கக் கூடாது. தவறு செய்தவரை காப்பாற்றியிருந்தால், அதற்கும் பொறுப்பு நிர்ணயிக்கப்பட வேண்டும்.

இதுதான் பொதுமக்களின் எதிர்பார்ப்பு. முதல்வர் சார், நீங்கள் நல்லது செய்ய நினைத்தால், உங்கள் அருகில் இருப்பவர்கள் என்ன செய்கிறார்கள் இன்று இரவு ஜான் பாண்டியன் தப்பிக்கப் போகிறார்” என கூறி பரபரப்பை கிளப்பியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 week ago at 1 week ago