https://republictn.com/

தமிழக முதல்வர் விஜயின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகும் ‘சிக்மா’ (Sigma) திரைப்படம் வருகிற ஜூலை 31ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் மிகப்பெரிய பொருட்செலவில் தயாரித்துள்ள இந்த திரைப்படத்தில் நடிகர் சந்தீப் கிஷன் கதாநாயகனாக நடித்துள்ளார். அவருடன் பிரியா அப்துல்லா, ராஜு சுந்தரம், சம்பத் மற்றும் அன்புதாசன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். திரைப்படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் தமன் எஸ் இசையமைத்துள்ளார்.

இந்த நிலையில், ‘சிக்மா’ திரைப்படத்தின் முதல் சிங்கிள் பாடலான ‘சிக்மா ஸ்டைல்’ (Sigma Style) கடந்த ஜூன் 4ஆம் தேதி வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. துடிப்பான பீட்களைக் கொண்ட இந்த சுறுசுறுப்பான ரேப் வகை பாடலுக்கு தமன் எஸ் இசையமைத்ததுடன், ஸ்மைல் துபாகீஸ் மற்றும் எம்சி ரூடுடன் இணைந்து பாடியுள்ளார்.

இந்தப் பாடலின் முக்கிய சிறப்பம்சமாக, இயக்குநர் ஜேசன் சஞ்சய் சிறப்புத் தோற்றத்தில் இடம்பெற்று நடிகர் சந்தீப் கிஷனுடன் இணைந்து நடனமாடியுள்ளார். அவரது திடீர் தோற்றம் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பாக பாடலில் இடம்பெற்றுள்ள “வழி தனி வழி” என்ற வரிகள் சமூக வலைத்தளங்களில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளன. மேலும், ஜேசன் சஞ்சயின் நடன அசைவுகள் மற்றும் உடல்மொழி அவரது தந்தையான தமிழக முதல்வர் விஜய்யை நினைவுபடுத்துவதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இதனைத் தொடர்ந்து, “அப்பா ஒரு மாநிலத்தின் முதல்வராக இருக்கிறார்; ஆனால் மகன் தனக்கென தனிப்பாதையைத் தேர்வு செய்துள்ளார், நீங்களும் ரஜினி ரசிகரா, அப்பாவைப் போல நீங்களும் நடிக்க வரலாம் , போக்கிரி படத்தில் விஜய் நடித்ததைப் போல உங்கள் காட்சியும் மாஸாக உள்ளது.

சிக்மா படத்திற்காக ஆவலுடன் காத்திருக்கிறோம் என ரசிகர்கள் பல்வேறு விதமாக சமூக வலைத்தளங்களில் தங்களது கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.

தற்போது ‘சிக்மா ஸ்டைல்’ பாடல் 13 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை பெற்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. ஜேசன் சஞ்சயின் இயக்குநர் அறிமுகப் படமான ‘சிக்மா’ திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் இந்தப் பாடல் மேலும் அதிகரித்துள்ளது.

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

13 hours ago at 13 hours ago