திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர்… அமைதியாக இருந்த ஏ கஸ்பா ரோடு கங்காபுரம் கிராமத்தை, ஒரே இரவில் ரத்தக்களறியாக மாற்றியிருக்கிறது ஒரு கள்ளக்காதல் விவகாரம்!
அடித்து நொறுக்கப்பட்ட இரண்டு வீடுகள்!
சம்பவத்தன்று நேற்று இரவு… சங்கர் வீட்டின் கதவு ‘டமார்’ என உடைக்கப்படுகிறது. உள்ளே புகுந்த 8 பேர் கும்பல், அங்கிருந்த 70 வயது மூதாட்டி பாலம்மாவை கண்மூடித்தனமாக தாக்குகிறது. பீரோ, டி.வி., ஃபேன், பைக் என கண்ணில் பட்டதையெல்லாம் அடித்து நொறுக்குகிறது. பீரோவில் இருந்த 2 சவரன் நகை, ரூ.2 லட்சம் பணத்தை அள்ளிக்கொண்டு, அடுத்த இலக்கை நோக்கி நகர்கிறது அந்தக் கும்பல்.
அடுத்து, முனிராஜின் வீடு! அங்கும் அதே பாணி… கேட்டை உடைத்து உள்ளே புகுந்து ஸ்கூட்டர், சைக்கிள், ஃபிரிட்ஜ், டி.வி. என அனைத்தையும் சுக்குநூறாக்கிவிட்டு, 3 சவரன் நகை, ரூ.1.75 லட்சம் பணத்துடன் எஸ்கேப் , மொத்தம்… 5 சவரன் நகை, ரூ.3.75 லட்சம் கொள்ளை!‘
வில்லன்’ முனிராஜ் – ஹீரோயின்’ கீதா!
போலீஸ் விசாரணையில்தான் பகீர் பின்னணி வெளியானது. திருமணமாகாத முனிராஜுக்கும், வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த மேலவழி துணையாங்குப்பத்தைச் சேர்ந்த லட்சுமணனின் மனைவி கீதாவுக்கும் அவர்கள் வேளை பார்த்த ஷூ கம்பெனியில் கள்ளக்காதல் மலர்ந்திருக்கிறது.
இதன்காரணமாக கடந்த 3-ம் தேதி, அதிகாலை வீட்டிலிருந்த 10 சவரன் நகையை அள்ளிக்கொண்டு கீதா, முனிராஜுடன் ‘ஜூட்’ விட்டிருக்கிறார்! இதனைத் தொடர்ந்து மனைவியை பறிகொடுத்த ஆத்திரத்தில் லட்சுமணன் மேல்பட்டி போலீஸில் புகார் கொடுத்திருக்கிறார்.
‘‘முனிராஜை ஸ்டேஷனில் ஒப்படைக்கிறேன்’’ என்று சங்கர் சொல்லிவிட்டு, வந்தவர் சொன்னபடி செய்யவில்லை என்று கொந்தளித்த லட்சுமணன், தனது மகன் பிரசாந்த், உறவினர் கோபி என 8 பேரை திரட்டிக்கொண்டு, நேற்று நள்ளிரவில் கங்காபுரம் சங்கர் மற்றும் அவரது தம்பி முனிராஜ் வீடுகளில் புகுந்து இந்த ‘சூறையாடல்’ வேட்டையை நடத்தியிருக்கிறார்!‘‘

பிள்ளைங்க படிப்பு பணத்தையும் விடலையே…!’’ ‘ குழந்தைகளின் கல்விச் செலவுக்காக மகளிர் குழுவில் கடன் வாங்கி வச்சிருந்த பணத்தைக்கூட அள்ளிட்டுப் போயிட்டாங்களே… எங்களுக்கு நியாயம் வேணும்!’’ என்று கதறுகிறது சங்கர் குடும்பம்.
ஒரு பக்கம் ‘11 பவுன் நகையோடு மனைவியை மீட்கணும்’ என்று லட்சுமணன் தரப்பும்… இன்னொரு பக்கம் ‘கொள்ளையடிச்ச நகை- பணத்தை மீட்டுத் தாங்க’ என்று சங்கர் தரப்பு கதற , இருதரப்பு புகார்களையும் வாங்கிக்கொண்டு, தலையைப் பிய்த்துக்கொண்டிருக்கிறது ஆம்பூர் மற்றும் மேல்பட்டி போலீஸார் தரப்பு
இரண்டு குழந்தைகளை தவிக்கவிட்டு லட்சுமணன் மனைவி நகையுடன் முனிராஜியோடு ஓடிபோன மறுநாள் மேல்பட்டி போலீசாரிடம் கம்பளைணட் செய்தோம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதன்பிறகே ஆத்திரத்தில் அங்கு சென்று வீட்டை அடித்து நொறுக்கி இருக்கிறார்கள் என்றனர் லட்சுமணன் தரப்பினர்.

இது சம்பந்தமாக ஆம்பூர் டவுன் போலீசாரிடம் விசாரித்த போது மூதாட்டி பாலம்மாள் கொடுத்த புகாரின் பேரில் லட்சுமணன் தரப்பினர் 2 பேரை கைது செய்து இருக்கிறோம் தலைமறைவாக இருப்பவர்களை தேடி வருகிறோம் என்றனர்
எஸ்கேப் ஆன கீதா மற்றும் முனிராஜ் மீது வேலூர் மாவட்டம் மேல்பட்டி காவல் நிலையத்தில் புகார் உள்ளதால் மேல்பட்டி போலீசார் தேடி வருவதாக கூறப்படுகிறது
கீதா எங்கே? முனிராஜ் எங்கே? கீதா எடுத்துக் கொண்டு போன 10 சவரன் நகை என்னாச்சு? – சங்கர் மற்றும் முனிராஜ் வீட்டில் சூறையாடிய 5 சவரன் நகை, ரூ.3.75 லட்சம் யாரிடம் உள்ளது என முக்கோணத்தில் ஆம்பூர் டவுன் போலீசாரும் மேல்பட்டி போலீசார்களும் விசாரணை நடத்தி வருகின்றனர்…
