Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

Republic Tamil

நவம்பர் 1, 2026 முதல் அமலுக்கு வந்துள்ள புதிய நிதி விதிகள் நமது தனிப்பட்ட நிதி, அன்றாடச் செலவுகளில் நேரடித் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. ஓய்வூதியதாரர்கள், வரி செலுத்துவோர், மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டாளர்கள் மற்றும் வாகன ஓட்டிகள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான மாற்றங்கள் இவை.

கடுமையான காலக்கெடு
ஓய்வூதியத் தொகை தடையின்றி கிடைக்க, ஓய்வூதியதாரர்கள் தங்களின் வருடாந்திர ஆயுள் சான்றிதழை நவம்பர் 30-க்குள் சமர்ப்பிக்க வேண்டும். வங்கி கிளைக்கு நேரில் சென்றோ, டிஜிட்டல் ‘ஆயுள் சான்றிதழ்’ (ஆதார் மூலம்) மூலமாகவோ அல்லது அஞ்சல் துறையின் ‘வீட்டு வாசலில் வழங்கும் சேவை’ மூலமாகவோ சமர்ப்பிக்கலாம். தவறினால் ஓய்வூதியம் தற்காலிகமாக நிறுத்தப்படலாம்.

வருமான வரி தாக்கல் நீட்டிப்பு
வணிகங்கள், தொழில் வல்லுநர்கள் மற்றும் தணிக்கைக்கு உட்பட்ட நிறுவனங்களுக்கான ITR தாக்கல் செய்யும் காலக்கெடு நவம்பர் 21 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. வழக்கமான தனிநபர்களுக்கான (ITR-1, ITR-2) காலக்கெடு ஏற்கனவே முடிந்துவிட்டது குறிப்பிடத்தக்கது.

ஜிஎஸ்டி விதைகளில் புதிய மாற்றங்கள்
பல மாநிலங்களில் வியாபாரம் செய்யும் சுமார் 9.5 லட்சம் சிறு விற்பனையாளர்கள், தாங்கள் விற்கும் தளத்தின் கிடங்கையே பிரதான வணிக இடமாகப் பதிவு செய்ய எளிமையான வழிவகை செய்யப்பட்டுள்ளது (மாதசரி உள்ளீட்டு வரி வரம்பு ₹2.5 லட்சம் வரை). விற்பனைக்குப் பிந்தைய தள்ளுபடி மற்றும் வரித் திருப்பியளிப்பு (Refund) முறைகளும் எளிமைப்படுத்தப்பட்டுள்ளன.

இதையும் படியுங்க  "5 வயது சிறுவனின் மரணத்தால் மாறிய இந்திய வரலாறு! உச்சநீதிமன்றம் பிறப்பித்த 'நடைபாதை' சட்டம்!"

பிஎன்பி கிரெடிட் கார்டு கட்டண உயர்வு
பிஎன்பி ஏடிஎம்களில் 2.5% அல்லது ₹400 (எது அதிகமோ அது); இதர ஏடிஎம்களில் 2.5% அல்லது ₹500 கட்டணமாக வசூலிக்கப்படும். ₹500-க்கு உட்பட்ட நிலுவைகளுக்குக் கட்டணம் இல்லை. ₹50,000-க்கு மேற்பட்ட நிலுவைகளுக்கு அதிகபட்சமாக ₹1,200 வரை தாமதக் கட்டணம் விதிக்கப்படும்.

மின்சாரம், தண்ணீர் போன்ற பயன்பட்டுக் கட்டடங்கள் மாதமொத்தமாக ₹50,000-ஐத் தாண்டினால் 1% கட்டணம் (அதிகபட்சம் ₹2,000) வசூலிக்கப்படும்.

இண்டஸ்இண்ட் வங்கி சேமிப்புக் கணக்கு அபராதங்கள்
சில குறிப்பிட்ட சேமிப்புக் கணக்குகளில் பின்வரும் காரணங்களால் பரிவர்த்தனை தோல்வியுற்றால் கட்டணம் உண்டு: கணக்கில் பணம் இல்லாததால் கார்டு ஸ்வைப் (POS) தோல்வியுற்றால்: ₹25 வங்கி ஏடிஎம்மில் பணம் இல்லாததால் பரிவர்த்தனை தோல்வியுற்றால்: ₹25 நிதிப் பற்றாக்குறை அல்லாமல் பிற காரணங்களுக்காக காசோலை (Cheque) திரும்ப அனுப்பப்பட்டால்: ₹50 (ஜிஎஸ்டி தனி).

சுங்கச்சாவடிஅருகில் வசிப்பவர்களுக்கு ஆண்டு பாஸ்
சுங்கச்சாவடியிலிருந்து 20 கிலோமீட்டர் சுற்றளவிற்குள் வசிக்கும் ஃபாஸ்டேக் (Fastag) வைத்துள்ள தனியார் வாகன உரிமையாளர்கள் உள்ளூர் ஆண்டு பாஸைப் பெறலாம்.

இதையும் படியுங்க  ரெட் அலர்ட் கேரளா! எபோலா வைரஸ் பீதி: திருவனந்தபுரம் ஆய்வகத்திற்கு பறந்த ரத்த மாதிரிகள்!

சுங்கச்சாவடி நகராட்சிப் பகுதிக்கு வெளியே இருந்தால் ஆண்டுக்கு ₹1,500, நகருக்குள் இருந்தால் ₹3,000 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது (ஒரே ஒரு சுங்கச்சாவடிக்கு மட்டுமே இது பொருந்தும்).

தங்கப் பத்திரங்கள் முன்கூட்டியே மீட்பு
நவம்பர் மாதத்தில் 2020-21 மற்றும் 2021-22 கால கட்டத்தைச் சேர்ந்த நான்கு குறிப்பிட்ட தவணை சவரன் தங்கப் பத்திரங்களை முன்கூட்டியே திரும்பப் பெறும் (Redemption) வாய்ப்பு முதலீட்டாளர்களுக்கு வழங்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

12 hours ago at 12 hours ago