Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் தலைவர் முகேஷ் அம்பானியின் மனைவியான நீதா அம்பானி, மும்பை இந்தியன்ஸ் கிரிக்கெட் அணியின் இணை உரிமையாளராகவும், ரிலையன்ஸ் அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் தலைவராகவும் பல்வேறு பொறுப்புகளை வகித்து வருகிறார்.

உலகின் மிகவும் விலை உயர்ந்த பொருட்களை பயன்படுத்துபவர்களில் ஒருவராகக் கருதப்படும் நீதா அம்பானியிடம், “பால்கன் சூப்பர்நோவா ஐபோன் 6 பிங்க் டைமண்ட்” என்ற சிறப்பு கைப்பேசி இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த கைப்பேசியின் விலை 48.5 மில்லியன் அமெரிக்க டாலர்கள் என தெரிவிக்கப்படுகிறது. இந்திய மதிப்பில் இதன் விலை சுமார் 430 கோடி ரூபாய் ஆகும்.

கடந்த 2014ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட இந்த கைப்பேசி, 24 கேரட் தங்கம் மற்றும் இளஞ்சிவப்பு தங்கத்தால் வடிவமைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

மேலும், இதில் உயர்தர பாதுகாப்பு வசதிகள் இடம்பெற்றுள்ளதால், இந்த கைப்பேசியை ஊடுருவி அணுகுவது அல்லது தகவல்களை திருடுவது மிகவும் கடினம் என தெரிவிக்கப்படுகிறது. அத்தகைய முயற்சி யாரேனும் மேற்கொண்டால், அதன் உரிமையாளருக்கு உடனடியாக தகவல் அனுப்பப்படும் என்றும் கூறப்படுகிறது.

இதையும் படியுங்க  தப்பிய ராகுல்… தலையிலடித்துக் கொண்ட ஆப்கான்! ஒரே ஒரு 'DRS' தப்பால் ஆட்டமே மாறுதா?

நீதா அம்பானி பயன்படுத்துவதாக கூறப்படும் இந்த கைப்பேசியின் விலை, ஒரு மாவட்டத்தின் ஆண்டு நிதித் திட்டத்திற்கு இணையான அளவில் இருப்பது குறிப்பிடத்தக்கது

Eswari

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 months ago at 2 months ago