https://republictn.com/

புச்சி பாபு சனா இயக்கத்தில், டோலிவுட் சூப்பர்ஸ்டார் ராம்சரன் மற்றும் நடிகை ஜான்வி கபூர் நடிப்பில் உருவாகியுள்ள ‘பெத்தி’ திரைப்படம், ஜூன் 4ஆம் தேதி உலக திரையரங்குகளில் வெளியானது.

இந்த திரைப்படத்தின் முன் வெளியீட்டு விழா ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் நடைபெற்றது. இதில் ராம்சரன், நடிகை ஜான்வி கபூர் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சி மிகச் சிறப்பாக நடைபெற்று கொண்டிருந்த நிலையில், ராம்சரனின் தீவிர ரசிகர் ஒருவர் திடீரென பாதுகாப்பு வளையத்தை மீறி, நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுடன் அமர்ந்து பேசிக் கொண்டிருந்த ராம்சரனை நோக்கி ஓடி வந்தார்.

இதனை கவனித்த ராம்சரனின் தனிப்பட்ட பாதுகாப்பு அதிகாரிகளும், நிகழ்ச்சியில் இருந்த பவுன்சர்களும் அந்த ரசிகரை தடுத்து நிறுத்தினர். இதனால் அந்த ரசிகர் நிலைதடுமாறி கீழே விழுந்ததாக கூறப்படுகிறது.

பின்னர் ராம்சரன் உடனடியாக அந்த ரசிகரை சமாதானப்படுத்தி, அவரது நலனை விசாரித்தார். இதனால் உணர்ச்சி வசப்பட்ட அந்த ரசிகர், ராம்சரனின் காலில் விழுந்து நன்றி தெரிவித்து பின்னர் அங்கிருந்து சென்றார்.

இந்த சம்பவத்தால் நிகழ்ச்சியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. மேலும், நிகழ்ச்சியில் இருந்த நடிகை ஜான்வி கபூர் இந்த சம்பவத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்ததாக கூறப்படுகிறது.

இந்த வீடியோ மற்றும் தகவல்கள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன. அதேசமயம், ரசிகரின் நலனை உடனடியாக விசாரித்த ராம்சரனின் செயலை பலரும் பாராட்டி வருகின்றனர்.

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 days ago at 2 days ago