https://republictn.com/

நடிகரும் கார் பந்தய வீரருமான அஜித்குமார், தற்போது சமூக வலைதளங்களில் மீண்டும் பேசுபொருளாகி உள்ளார். இந்த முறை அவர் வைரலாக காரணமானது சினிமா அல்ல; கிரிக்கெட் விளையாடிய வீடியோ தான்.

சமீபத்தில் இணையத்தில் வெளியாகியுள்ள காணொளியில், அஜித்குமார் நண்பர்களுடன் உற்சாகமாக கிரிக்கெட் விளையாடும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. முதலில் பேட்டிங் செய்த அவர், அழகான அடிகளால் கவனம் ஈர்த்தார். பின்னர் விக்கெட் கீப்பராக களமிறங்கி சுறுசுறுப்பாக செயல்பட்டார்.

குறிப்பாக, விக்கெட் கீப்பிங் செய்யும் போது அவரது உடல் மொழியும் ஸ்டைலும், இந்திய முன்னாள் கிரிக்கெட் அணித்தலைவர் மகேந்திர சிங் தோனியை ரசிகர்களுக்கு நினைவூட்டியது. இதனால் சமூக வலைதளங்களில் “தல ரிட்டர்ன்ஸ்”, “தோனி போல கீப்பிங் செய்யும் அஜித்” என ரசிகர்கள் ஆர்வமாக கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர்.

இந்த வீடியோவை அஜித் ரசிகர்கள் மட்டுமல்லாமல், கிரிக்கெட் ரசிகர்களும் அதிகமாக பகிர்ந்து வருவதால், இணையத்தில் வேகமாக வைரலாகி வருகிறது.

சினிமா, கார் பந்தயம், துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட பல துறைகளில் தனது திறமையை நிரூபித்துள்ள அஜித்குமார், தற்போது கிரிக்கெட் மைதானத்திலும் தனது இயல்பான பாணியால் ரசிகர்களின் கவனத்தை கவர்ந்துள்ளார்.

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 days ago at 3 days ago