ஜெம் கிரானைட்டின் உரிமையாளர் வீரமணி சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் எஸ்ஐடி அமைக்கப்பட்டு தற்போது விசாரணை நடந்து வருகிறது. எழும்பூரில் உள்ள சிவிசிடி அலுவலகத்தில் வைத்து இந்த விசாரணைக்கு நடத்தப்பட்டு வருகிறது. சாந்தி மற்றும் அவரது கணவரிடம் இரண்டாவது நாளாக விசாரணை நடைபெற்றது. நேற்றும் காங்கிரஸ் பிரமுகர் ரஞ்சனிடம் 9 மணி நேரமாக விசாரணை நடத்தி இருக்கிறார்கள். இந்த நிலையில இந்த தொழிலதிபர் ஜெம் வீரமணி மீதான பாலியல் வழக்கில் பாதிக்கப்படவர்கள் தொடர்ந்து புகாரிளித்து வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
எஸ்ஐடி அதிகாரிகளிடம் நேரடியாக சென்று சிறுமிகள் புகார் அளித்திருக்கிறார்கள். நேற்று மட்டுமே மூன்றுக்கும் மேற்பட்ட பாதிக்கப்பட்டவர்கள் எஸ்ஐடி அதிகாரிகளை சந்தித்து புகார் அளித்திருக்கிறார்கள். இதனால் இந்த வழக்கின் பாதிக்கப்பட்டவர் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளதாக தகவல் வெளிவந்திருக்கிறது. இந்த வழக்கில் பாதிக்கப்பட்டவர்கள் யாராக இருந்தாலும் தயங்காமல் முன்வந்து புகார் அளிக்கலாம் என்றும், புகார் அளிப்பவர்களின் பெயர், முகவரி உள்ளிட்ட அனைத்து தகவல்களும் ரகசியம் காக்கப்படும் என்றும் அவர்களுக்கு முழு சட்ட பாதுகாப்பு வழங்கப்படும் என்றும் காவல்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்த வழக்குல பல்வேறு மாணவிகள், சிறுமிகள் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக பாதிக்கப்பட்டிருக்கக்கூடிய தகவலையும் எஸ்ஐடி அதிகாரிகள் கண்டறிந்து அது தொடர்பான விசாரணை முன்னெடுத்து வருகின்றனர். தொலைக்காட்சிகள் மற்றும் பத்திரிகைகளில் வரக்கூடிய செய்திகளை பார்த்து தாமாக முன்வந்து இந்த மாணவிகள் பாதிக்கப்பட்டவர்களும் புகார் அளித்து வருவதாகவும் அவர்களின் வாக்குமூலங்கள் பதிவு செய்து வைத்திருப்பதாகவும் அவர் கொடுத்த புகார் தனி வழக்கு பதிவு செய்வதா? அல்லது இந்த வழக்கில் அந்த வாக்குமூலங்களை பதிவு செய்து இவருக்கு உறுதிய தண்டனை பெற்று தருவதா? என்பது குறித்து விசாரணைகள் நடைபெற்று வருகிறது.
தற்போது வரை 15க்கும் மேற்பட்ட மாணவிகள் அடையாளம் காணப்பட்டிருப்பதாகவும், 15 புகார்கள் பெறப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. நேற்று மட்டுமே மூன்று பாதிக்கப்பட்டவர்கள் நேரடியாக அதிகாரிகளை சந்தித்து புகாரை அளித்திருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. இதேபோல இன்னொரு பக்கம் சாந்தியிடமும் அவரது கணவரிடமும் இரண்டாவது நாளாக விசாரணை நடைபெற்று வருகிறது.
இன்று அவர்களை அவரது வீடு மற்றும் எங்கெல்லாம் அவர்கள் அந்த சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்தார்களோ அங்கெல்லாம் அழைத்து சென்று விசாரணை நடத்தவும் போலீசார் திட்டமிட்டுருக்கிறார்கள். எஸ்ஐடி போலீசார் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். இன்று சாந்தி மற்றும் அவரது கணவரை பாதிக்கப்பட்டதாக கூறப்படக்கூடிய இடங்களில் நேரடியாக சென்று விசாரணை நடத்தவும் காவல்துறை தரப்பில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.
