Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

school teacher

தமிழகத்தில் உள்ள பள்ளி மாணவர்களின் தகவல்களை எமிஸ் (Education Management Information System) எனப்படும் கல்வி மேலாண்மை தகவல் அமைப்பின் மூலம் ஆன்லைனில் பள்ளிக் கல்வித்துறை பராமரித்து வருகிறது. அதேபோல் அரசு ஊழியர், ஆசிரியர்கள் பணிப் பலன்களை பெறுவதை எளிமையாக்கும் வகையில் ‘களஞ்சியம்’ செயலி உருவாக்கப்பட்டுள்ளது. விடுப்பு, சரண்டர் விடுப்பு, பே சிலிப் பதிவிறக்கம், பி.எப்., உள்ளிட்ட பணப் பலன்கள் நிலரவம் என அனைத்து விவரங்களும் இந்த செயலியில் இடம் பெற்றுள்ளன.

இந்நிலையில் தற்போது களஞ்சியம் ஆப்பிள் குடும்ப உறுப்பினர்களை இணைக்கும் செயலி நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதில் பதிவேற்றம் செய்யப்படும் உறுப்பினர்கள் மட்டுமே NHIS 2026 கார்டில் பெயர் சேர்க்கப்படும் என்பதால் அனைத்து ஆசிரியர்களும் மிக அவசரமாக தங்களது குடும்ப உறுப்பினர்களின் பெயர்களை அவர்களின் புகைப்படங்களோடு இதில் சேர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

களஞ்சியம் ஆப்பை அப்டேட் செய்ய வேண்டும். பின்னர் அப்டேட் ப்ரோபைல் பட்டனை அழுத்தி உள்ளே செல்லவும். இதில் பேமிலி மெம்பர் டீடைல் என்பதனை அழுத்தி உள் செல்லவும். இதில் ஏற்கனவே பதிவேற்றம் செய்யப்பட்ட குடும்ப உறுப்பினர்களின் பட்டியல் இருக்கும் அதில் புகைப்படத்தை இணைக்க வேண்டும். புகைப்படத்தை இணைக்க மேலே புகைப்படத்திற்கு அருகில் பேனா படத்தை அழுத்த வேண்டும். அதில் இரண்டு தேர்வுகள் காட்டப்படும் முதலாவது நேரடியாக புகைப்படம் எடுப்பது இரண்டாவது ஏற்கனவே எடுக்கப்பட்ட புகைப்படத்தை அப்டேட் செய்வது

இதையும் படியுங்க  நீட்: அமைச்சர் ஆதரிக்கிறார்… அரசு தடுக்கிறது.! இதென்ன தவெகவின் இரட்டை நிலைப்பாடு..? அன்புமணி ஆதங்கம்..! 

இதில் தங்களுக்கு தேவையானதை தேர்வு செய்து புகைப்படத்தை பெறவும் பின்னால் கீழே உள்ள அட்ஜஸ்ட்மென்ட் பயன்படுத்தி படத்தை தேவையான அளவிற்கு மாற்றி அப்டேட் செய்யவும். தாங்கள் சேர்க்க விரும்பும் குடும்ப உறுப்பினர் பட்டியலில் இல்லை என்றால் மேல் பகுதியில் add member என்ற தேர்வினை பயன்படுத்தி புதிய உறுப்பினரை சேர்க்கலாம்

இதில் புகைப்படத்தை இணைக்க அதே பேனா சின்னத்தை பயன்படுத்தவும் மீதம் கேட்கப்படும் வினாக்களுக்கு சிவப்பு நிற நட்சத்திர குறியீடு உள்ள வினாக்கள் கட்டாயம் பதில் அளிக்கப்பட வேண்டும். நட்சத்திர குறியீடு இல்லாத வினாக்களுக்கு தங்களிடம் உள்ள உண்மையான தகவல்களை பதிவேற்றவும் தகவல் இல்லை என்றால் நட்சத்திர குறியீடு இல்லாத கேள்விகளை தவிர்க்கலாம். இது மிக மிக அவசரமாக செய்ய வேண்டிய பணி என்பதால் அனைத்து ஆசிரியர்களும் வெகு விரைவாக செய்து முடிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Naruvi

By Naruvi

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 week ago at 1 week ago