புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது, கர்நாடக ரிசவர் பாரஸ்ட்-க்குள் அதிகாலை ஐந்து மணிக்கு மூன்று தமிழர்கள் ஏன் சென்றார்கள் என்பது குறித்தும்,அவர்களுக்கு அங்கு செல்ல உரிமை உள்ளதா என்பது குறித்தும், விசாரித்த பிறகு தான் அந்த விவகாரம் குறித்து கருத்து சொல்ல முடியும். முழுமையான விசாரணயை அந்த அரசு செய்யும் என நம்புகிறேன் விசாரணை முடிவுக்கு பின்பு அதில் திருப்தி உள்ளதா இல்லையா என்பதைப் பார்த்து அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கலாம்.
எடுத்தவுடன் எல்லாவற்ருக்கும் சிபிஐ விசாரணை தேவையில்லை, அந்தந்த ஊரில் அந்தந்த போலீஸ் உள்ளது சிபிசிஐடி உள்ளது. எடுத்தவுடன் சிபிஐக்கு அனுப்பி விட்டால் மாநில போலீசுக்கே வேலை இல்லாமல் போய்விடும். ஏதாவது ஒன்றென்றால் சிபிஐ விசாரணை கேட்பது எல்லா அரசியல் கட்சிக்கும் வாடிக்கையாக போய்விட்டது. எந்த மாநில காவல்துறை மீது யாருக்கும் நம்பிக்கை இல்லையா..?.
543 நாடாளுமன்ற தொகுதிகள் என்ற எண்ணிக்கையை இன்னும் 25 ஆண்டுகளுக்கு தொடர வேண்டும். அப்போது வட மாநிலத்தின் மக்கள் தொகை எவ்வளவு குறைகிறது என்பதை பார்த்து அடுத்த கட்ட முடிவு எடுக்கலாம். சில அரசியல் கட்சிகள் சொல்வது போல எல்லா மாநிலத்திற்கும் 50% கூடுதலாக ஒதுக்கி தொகுதியை வரையறை செய்தால் நாடாளுமன்றத்தில் 815 லிருந்து 850 க்குள்ளானதொகுதிகள் வரும்,அவ்வளவு எம்பிக்கள் வந்தால் நாடாளுமன்றத்தில் யாரும் பேச முடியாது,நேரம் கிடைக்காது.
543 பெயர் உள்ள சபையிலேயே சபாநாயகருக்கு என் பெயர் தெரியாது,நான் ஏழு வருடமாக எம்பியாக உள்ளேன்,கார்த்தி என்ற பெயருக்கு பதிலாக கீர்த்தி கீர்த்தி என்றுதான் சபாநாயகர் அழைத்து வருகிறார். நமக்கு அதுக்கு எண்ணிக்கை தருகிறார்கள் என்று அல்ப ஆசையில் இருந்து சிலர் ஏமாறப் போகிறார்கள். குறிப்பாக தெலுங்கு தேசம் கட்சியும் திமுகவும் அந்த வலையில் சிக்கி உள்ளனர். இதனை மேலோட்டமாக பார்க்க முடியாது,இந்தியாவில் 543 நாடாளுமன்ற தொகுதிகள் தான் இருக்க வேண்டும் என்பது காங்கிரஸ் கட்சியின் கருத்து.
முதலமைச்சர் விஜய் பிரதமராக வேண்டும் என்ற அமைச்சர்களின் பேச்சு குறித்த கேள்விக்கு பதில் அளித்த கார்த்தி சிதம்பரம், எல்லோரும் ஆசைப்படலாம்,ஆசைப்படுவதற்கு கனவு காண்பதற்கு எல்லாம் சட்டம் போட முடியாது. அன்புமணி ராமதாஸ் கூட 2031இல் தமிழகத்தின் முதல்வராவேன் என சொல்லி இருக்கிறார், யார் வேண்டுமானாலும் ஆசைப்படலாம் அதை தடை செய்ய முடியாது. ஆனால் தேர்தலில் வெற்றி,மெஜாரிட்டி இவைதான் தீர்மானிக்கும்,
சட்டம் ஒழுங்கு பிரச்சனை குறித்த கேள்விக்கு பதில் அளித்த கார்த்தி சிதம்பரம் கூறுகையில்: தனிநபர் ஆசா பசங்களால் நடைபெறும் தாக்குதலை குற்றங்களை எந்த அரசாங்கமும் தடுத்து நிறுத்த முடியாது. விசாரிக்கலாம் தண்டனை வாங்கி கொடுக்கலாம் அவ்வளவுதான் செய்ய முடியும். ஆனால் காவல் நிலைய மரணம் நடக்கிறது என்றால் அது போலீஸ் ககலாச்சார பிரச்சனை. வெள்ளைக்காரனாய் உருவாக்கப்பட்ட போலீஸ் மக்களை ஒடுக்க வேண்டும், பூட்ஸ் காலால் உதைக்க வேண்டும் என்ற மனப்பான்மையுடன் செயல்படுகின்றனர்.
போலீசுக்கு ரீட் ட்ரைனிங் கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை நான் எடப்பாடி பழனிச்சாமி காலத்திலிருந்து சொல்லி வருகிறேன். காவலரில் இருந்து டிஜிபி வரை எல்லோரும் ரீ ட்ரெயினிங் போய்,அடித்துத்தான் விசாரிக்க வேண்டும் என்றல்ல கேள்வி கேட்டு விசாரிக்கலாம் என்பதையெல்லாம் கற்றுக்கொள்ள வேண்டும். அதனால் குற்ற சம்பவங்களை அரசாங்கத்தின் மீது நான் குறை சொல்ல மாட்டேன் முன்பிருந்த அரசின் மீதும் நான் குறை சொல்லவில்லை,இது ஒரு போலீஸ் கலாச்சார பிரச்சனை.
இந்த அரசின் செயல்பாடு குறித்து ஓராண்டுகள் கடந்த பின்பு தான் எனது கருத்தை சொல்லலாம் என்று நான் இருக்கிறேன். 100 நாளில் தீர்மானமாக எதையும் சொல்ல முடியாது.வழக்கமாக வந்தே மாதரம் பாடலை பாட வேண்டும் என்றால் இரண்டு வரி போதும். அது தவறு என்றால் மகாத்மா காந்தி மீதும் சுபாஷ் சந்திர போஸ் நேரும் மீதும் சர்தார் வல்லபாய் பட்டேல் மீதும் தான் வழக்கு போட வேண்டும்.
தமிழ்நாட்டில் அரசு நிகழ்ச்சி நடந்தால் தமிழ்த்தாய் வாழ்த்தை முதலில் பாட வேண்டும் என்பதுதான் மரபு. அதை பின்பற்றாமல் இருந்தார்கள் என்றால் அது மரபை மீறி நடைபெறுகிற செயல். அதனை கடந்து நாட்டில் எவ்வளவு பிரச்சனை உள்ளது அது குறித்து எல்லாம் பேசுவோம், தெரு நாய் இன்னும் கடித்துக் கொண்டுள்ளது,விபத்தில் சாகின்றனர்,அதைப் பற்றி எல்லாம் பேசுவோம். என்ன பாட்டு பாட வேண்டும் என்ன பாட்டு பாடக்கூடாது என நாம் திசை மாறி செல்கிறோம்.
அடித்தட்டு மக்களின் அன்றாட பிரச்சினைகளை பேசாமல் சில விஷயங்களை வைத்து திசை திரும்பி செல்வதாக நான் கருதுகிறேன். ஊடகங்கள் மக்கள் பிரச்சனைக்கு கவனம் செலுத்த வேண்டும்.

