Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

dhanush

ரஜினிகாந்த் தன்னுடைய மக்கள் மேடை இயக்கத்தை வலுப்படுத்த லதாவும், தனுஷும் துவங்கி இருக்கியிருக்கிறார்கள். இருவரும் தனித் தனி ரூட்டில் போனாலும் போய் சேரப்போகிற இடம் ஒன்று தான் என்கிறார்கள்.

நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரப்போவதாக அறிவித்து அவரது ரசிகர் மன்றங்களை எல்லாம் ரஜினி மக்கள் மன்றமாக மாற்றி, பல சார்பு அணிகளையும் உருவாக்கி, ஒரு அரசியல் கட்சிக்கான முழு கட்டமைப்பை ஏற்படுத்தினார். அரசியலுக்கு வரப்போவதில்லை என்று அறிவித்து ரஜினி மக்கள் மன்றத்தை கலைப்பதாக அறிவித்தாலும் அதை ரஜினி ரசிகர் நற்பணி மன்றமாக மாற்றி மக்கள் நலப் பணிகளில் ஈடுபடும் என்று அறிவித்தார்.

ஒவ்வொரு மாவட்டத்திற்கும் செயலாளர்கள், இணை, துணை செயலாளர்கள், சார்பு அணிகள் அரசியல் சப்போர்ட் உடன் இருந்தாலும் ரஜினி மன்ற நிர்வாகிகள் பல கட்சிகளில் தங்களை இணைத்துக் கொண்டாலும் இன்னும் ரஜினி என்கிற ஒற்றை மந்திரத்துக்கு ஆட்பட்டே இருக்கிறார்கள். அதை நம்பியே மக்கள் மேடையை லதா துவங்கி இருப்பதாகவும் சொல்றார்கள். அதே சமயம் தனுஷ் தொகுதி வாரியாக நிர்வாகிகளை நியமித்து தன்னோட ரசிகர் மன்றத்தை அப்படியே ஒரு அரசியல் கட்சிக்கான கட்டமைப்பாக மாற்றி வருகிறார்.

இதையும் படியுங்க  அடிமேல் அடி.. செத்து செத்து பிழைக்கும் தனுஷ்.. ரசிகர்கள் அதிர்ச்சி..!

ஒரு பக்கம் தனுஷ், இன்னொரு பக்கம் லதா ரஜினிகாந்த் என அமைப்புகளை உருவாக்கி வருவது ரஜினி மக்கள் மன்றத்தை குறி வைத்துதான். ஆனால் ரஜினி தன்னோட மன்றத்தை அரசியலில் ஈடுபடுத்தும் முடிவில் இல்லை என்கிறார்கள். அவரது மன்றத்து நிர்வாகிகள் தனுஷின் அரசியலை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கிறார்கள். தனுஷின் அரசியல் ஒரு வடிவத்துக்கு வந்தவுடன் ரஜினியின் ஆதரவை கேட்பார் என அவருக்கு நெருக்கமானவர்கள் சொல்கிறார்கள். தேர்தல் ஆணையத்தில் தனது கட்சியை பதிவு செய்திருக்கிறார் தனுஷ். தமிழர் எழுச்சிக் கழகம் என பெயரும் வைத்திருக்கிறார். விரைவில் கட்சியை பொது வெளியில் அறிவிக்கவும் தயாராகி வருகிறார். ஏற்கெனவே தமிழர்ப் எழுச்சிக் கழகம் என்ற பெயரில் ஜெ.அருண் பாண்டியன் என்பவர் கட்சியை பதிவு செய்திருக்கிறார்.

ரஜினியின் ஆன்மீக அரசியலின் நீட்சியாகத்தான் தனுஷ் கட்சி இருக்கும் என்றே தோன்றுகிறது. ரஜினிக்காக தனுஷ் களத்தில் குதிக்கிறார் எனத் தோன்றுகிறது. அரசியலில் ரஜினி இருக்கிறாரோ.. இல்லையோ… தனுஷுக்காக அவர் மாமியார் இருப்பார் என்பது உறுதி.

இதையும் படியுங்க  அமைச்சர் செங்கோட்டையன் வெற்றி..! அதிமுக வேட்பாளர் வைத்த பரபரப்பு குற்றச்சாட்டு..!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 months ago at 2 months ago