Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

Republic Tamil

”பிரச்சனை வரும்போதெல்லாம் திமுகவினர் கூச்சமே இல்லாமல் டெல்லியில் சென்று காலில் விழுவார்கள்” என அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் நிர்மல் குமார் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ”வழக்குகளில் இருந்து வெளிவருவதற்காக பாஜகவுடன் நேரடியாக கூட்டணி வைக்க திமுக முயற்சி செய்தது. சொத்துக்களை குடும்பத்தை காப்பதற்காக நேரடியாக கூட்டணி வைக்க திமுக முயன்றது. தொகுதி மறுவரையறை குறித்த வாக்கெடுப்பின்போது, அதற்கு எதிராக வாக்களிப்பார்களா? இல்லையா? என திமுக இப்போதுவரைா சொல்லவில்லை.

அனைத்திற்கும் ஆதாரம் உள்ளதால், கொஞ்ச நாள் காலம் தள்ளிபோகலாம். ஆனால், வழக்குகளில் இருந்து தப்பிக்க முடியாது. கட்சி நிதி எல்லாமே அரசுக்கான நிதியாக மாறியுள்ளதால் ரூ.15,000 கோடி வருவாய். தேநீர் விருந்துக்கு செல்லவில்லை என கனிமொழி கூறுவது நம்பும்படியாக இல்லை. தேநீர் விருந்து நடைபெறும் என கனிமொழிக்கு தெரியாமலா அங்கு சொன்றார்?

சீட் மாற்றம் குறித்து அந்த நாளில் தான் பேசவேண்டுமா? பிரச்சனை வரும்போதெல்லாம் திமுகவினர் கூச்சமே இல்லாமல் டெல்லியில் சென்று காலில் விழுவார்கள். கடந்த ஆட்சியில் அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் நடந்தாலும் அதற்கு பின் குடும்பத்தினருடன் ஒரு ஒப்பந்தம். நாளை நடைபெற உள்ள தேநீர் விருந்தில் கலந்து கொள்வது குறித்த தற்போது வரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.

இதையும் படியுங்க  விஜய்யின் 'ரூட் மாஃபியா' மோசடி அம்பலம்..! தேசிய ஊடகங்கள் வெளியிட்ட பகீர் ஆதாரங்கள்..!

கோவையில் மாணவன் கொலை வழக்கில் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மாணவர்கள் இடையே ஏற்பட்ட தகராறில் தான் கொல்லப்பட்டுள்ளார். கோவை மாணவர், கைது நடவடிக்கை தொடர்கிறது. தவறு எங்கு நடந்தாலும் அதற்கு யார் காரணமாக இருந்தாலும் தவெக ஆட்சியில் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும். தமிழகத்தில் எங்குமே சொத்து வரி உயர்த்தப்படவில்லை. சொத்து வரியை முறைப்படுத்தி உள்ளோம்.

திமுக ஆட்சியில் சென்னையில் பெரிய குடியிருப்புகளிலும் சொத்துவரி முறைப்படுத்தப்படாமல் முறைகேடு நடந்துள்ளது. மதுரையில் சொத்த வரி முறைகேடு செய்யப்பட்டது. திமுக மேயர் கணவர் கைது செய்யப்பட்டார். தவெக அரசு யாருடன் பேசினாலும் வெளிப்படையாகதான் இருக்கும். மக்கள் நலனுக்காக மட்டுமே மத்திய அரசுடன் பேசுவோம். திருச்சி சிவா மத்திய அமைச்சர் ஆக உள்ளதாக கூறப்படுவதை திமுக தற்போது வரை மறுக்கவில்லை. தன்னுடன் எத்தனை பேர் நிற்கிறார்கள் என காண்பிக்கவே எடப்பாடி பழனிசாமி போராட்டம் நடத்துகிறார். வழக்குகளில் இருந்து தப்பிக்க பாஜகவுடன் திமுக மறைமுக கூட்டணி வைத்துள்ளது” என அமைச்சர் நிர்மல் குமார் ” எனக் கூறினார்.

இதையும் படியுங்க  திமுக Ex அமைச்சர்கள் என் லைனுக்கு வந்தார்கள்.. இபிஎஸின் போலி கடிதம்..! அம்பலப்படுத்திய சி.வி.சண்முகம்..!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 hours ago at 2 hours ago