Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

RBI

கடன் கொடுத்த வங்கிகள் நிதி நிறுவனங்கள் அதனை வசூலிக்க கடன் வாங்கியவரை மிரட்டவோ அல்லது அவருக்கு நள்ளிரவில் போன் பண்ணவோ கூடாது என்று ரிசர்வ் வங்கி புதிய விதிமுறைகளை அறிவித்திருக்கிறது.

கடன் வாங்கி பல வருடம் சரியாக பணத்தை கட்டி வந்திருப்பீர்கள். திடீரென பணக்கஷ்டம். சில மாதங்கள் உங்களால் இஎம்ஐ பணத்தை கட்ட முடியவில்லை. இஎம்ஐ ஆப்ஷன்ல டிவியை வாங்கி ஒரு சில இஎம்ஐ கட்ட முடியாமல் போயிருக்கலாம். அப்படியான நேரத்தில் கெட்ட நேரத்தில் போன் பண்ணியும் தொந்தரவு செய்கிறார்களா? உங்கள் சொந்தக்காரர்களிடம் எல்லாம் சொல்லி அசிங்கப்படுத்திடுவோம் என மிரட்டுறார்கள்களா? இனி அப்படி எதுவுமே செய்ய முடியாது. கடன் வாங்கிய காரணத்துக்காக மிரட்டவோ அவமானப்படுத்தவோ மன உளைச்சலுக்கு உள்ளாக்கவோ கூடாது. கடன் வசூலிக்கும் நடைமுறையில் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கு ரிசர்வ் வங்கி புதிய விதிமுறைகளை கொண்டு வந்திருக்கின்றது.

இது தொடர்பான விவரங்களை நாம் பார்க்கலாம். முதலில் கடன் வாங்கியவர்களை அடிப்படையில் மிரட்டவே கூடாது என சொல்லப்பட்டிருக்கிறது. அதாவது ஆர்பிஐயின் புதிய விதிகள் மிகவும் முக்கியமானது. ஹாராஸ்மென்ட்க்கு அந்த வகையில் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு இருக்கிறது. ரெக்கவரி ஏஜென்ட்கள் மிரட்டும் தொணியில் பேசக்கூடாது. ஆபாசமா பேசக்கூடாது. சண்டை மாதிரி வன்முறை செய்து அச்சுறுத்தக் கூடாது எனச் சொல்லப்பட்டிருக்கிறது.

கடன் வாங்கியவருடைய பெயர், புகைப்படம், வீடியோ போன்ற அவருடைய பிரைவசி சம்பந்தப்பட்ட தனிப்பட்ட தகவல்களை சமூக வலைதளங்களில் ஒருபோதும் வெளியிடக்கூடாது எனச் சொல்லப்பட்டிருக்கிறது. அதே வேளையில் அதிகப்படியான போன் செய்து அவர்களை தொந்தரவு செய்யக்கூடாது. தவிர கடன் வாங்கிய உறவினர்கள், நண்பர்கள், சக ஊழியர்கள் அவர் வேலை பார்க்கிற இடத்தில் இருக்கக்கூடிய, அவருடைய சக ஊழியர்களுக்கு எல்லாம் தேவையில்லாமல் போன் செய்து ”உங்க நண்பர் பணத்தை கட்டல எனச் சொல்லி தொந்தரவு செய்யக்கூடாது எனச் சொல்லப்பட்டிருக்கிறது.

கடன் வசூலிப்பதற்காக மிரட்டல், அவமானப்படுத்துதல், சமூகவிரோதங்கள் மூலமாக அசிங்கப்படுத்துதல் மாதிரி தற்போது நடைமுறையில் அடிக்கடி நடந்து கொண்டு இருக்கிறது. இந்த முறைகளுக்கு ரிசர்வ் வங்கி தடை வைத்திருக்கிறது. காலை 8 மணி முதல் அதாவது செல்போன் அழைப்பை பொறுத்தவரைக்கும் ஒரு இஎம்ஐ கட்டாவிட்டால்கூட உடனே அந்த நாள் முழுக்க 10, 15 முறை அந்த கடன் பெற்றவர்களுக்கு கால் செய்து ”நீங்க எப்ப பணத்த கட்டுவீங்க?” என அந்த வங்கிகள் சார்பாக பேசக்கூடிய ஏஜென்ட் ரொம்ப தொல்லை பண்ணுவாங்க. அதுக்காக காலை 8 மணி முதல் இரவு 7 மணி வரை மட்டுமே இனி அந்த ரெகவரி ஏஜென்ட்கள் உங்க கால் செய்ய வேண்டும் என சொல்லப்பட்டிருக்கிறது.

இதையும் படியுங்க  உலகின் முதல் டிரில்லியனர்..! வரலாறு படைத்தார் எலான் மஸ்க்..! ₹7 லட்சம் கோடியில் புதிய சரித்திரம்..!

காலை 8 மணி முதல் இரவு 7 மணி வரை மட்டுமே கடன் வசூல் தொடர்பாக கால் செய்ய வேண்டும். இல்லையென்றால் நேரடியாக சந்திக்க வேண்டும். ஒருவேளை கடன் பெற்றவர் எனக்கு இந்த டைம் சூட் ஆகல. நீங்க வேற ஒரு நேரத்துக்கு வாங்க” எனச் சொன்னால் மட்டுமே இதற்கு விதிவிலக்கு எனச் சொல்லப்பட்டிருக்கிறது. அதனால் இரவு 10 மணி 11 மணி கண்ட நேரத்தில் அடிக்கடி கால் பண்ணி தொந்தரவு செய்வதற்கும் புதிய விதிகள் கடிவாளம் போடப்பட்டிருக்கிறது. கடன் வசூல் சம்பந்தமாக வரக்கூடிய ஒவ்வொரு தொலைபேசி அழைப்பையும் ரெக்கார்ட் செய்யனும் என சொல்லி இருக்காங்க.

இது கடன் பெற்றவர்களுக்கு சாதகமான ஒரு முக்கியமான மாற்றமாக பார்க்கப்படுகிறது. அதாவது வங்கியில் தொலைபேசி உரையாடல்களை கண்டிப்பாகப் பதிவு செய்ய வேண்டும். அந்த ரெக்கார்டிங்ஸை குறைந்தபட்சம் ஒரு ஆறு மாதங்களுக்காவது பாதுகாத்து வைக்கணும். ப்யூச்சர்ல ஏதாவது டிஸ்ப்ளேட் வந்தது என்றால் அந்த ரெக்கவரி ஏஜென்ட் ஏதாவது தவறான வார்த்தைகளை பிரயோகப்படுத்தி ஆபாச வார்த்தைகளால் திட்டி இருந்தால் மேற்கொண்ட சட்டம் நடவடிக்கைகளுக்கு ஒரு ஆதாரமாக இது இருக்கும் என்கிற காரணத்துக்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.

இதே மாதிரி கால் பண்ணும் போதே இந்த கால் ரெக்கார்ட் செய்யப்படுகிற விஷயத்தையும் முன்கூட்டியே கடன் வாங்கியவருக்கு சொல்லிவிட வேண்டும். இதனால் ஏஜென்ட் என்ன பேசினார்? உண்மையிலேயே மிரட்டினாரா? அவதூறாக பேசினாரா? என்பதற்கு ஆதாரம் இருக்கும். நாளை சட்ட நடவடிக்கையின் போது இது மிகவும் உதவியாக இருக்கும். அதே நேரத்தில் உங்கள் வீட்டுக்கு கடன் வசூலுக்கு வரக்கூடிய அந்த ரெக்கவரி ஏஜென்ட் யார் என்று தெரிந்து கொள்ளக்கூடிய உரிமையும் புதிய விதிகளின்படி கொடுக்கப்பட்டிருக்கிறது.

அதாவது வங்கியில் இருந்து வீட்டுக்கு ஒருவர் வருகிறார் என்றால் ”நீங்கள் யார்? எனக் கேட்கக்கூடிய உரிமையும் கடன் பெற்றவருக்கு இருக்கிறது. அவருடைய ஐடி கார்டு கேட்கலாம். கடன் வசூலுக்காக அந்த வங்கி அவருக்கு ஒரு அதிகாரம் இருப்பதற்கான ஒரு ஆர்தரைசேஷன் லெட்டர் ஒன்று கொடுத்திருப்பார்கள். இதெல்லாம் கூட அவரிடம் நாம கேட்டு வாங்கிக் கொள்ளலாம். அதன் மூலமாகத்தான் அவர் அதிகாரப்பூர்வ வசூல் ஏஜென்ட் என நமக்கு தெரிய வரும். தவிர, வங்கியின் சார்பிலும் எந்த ரெக்கவரி ஏஜென்சியும் நியமித்திருக்கிறோம் என்பதையும் கடன் வாங்கியவருக்கு தெரிவிக்க வேண்டும். வங்கியில் எல்லாமே கடன் வசூலுக்காக நேரடியாக பணியாளர்களை அனுப்புவது கிடையாது. அந்த கட ன் வசூலுக்காக அவர்கள் ஒரு ஏஜென்சி நியமித்திருப்பார்கள்.

இதையும் படியுங்க  ஜூன் 30-முதல் காகித ரூபாட் நோட்டுகள் செல்லாதா..? அலறிய மக்கள்… உண்மையை உடைத்த ரிசர்வ் வங்கி..!

ஏஜென்சியிடம் அந்த கஸ்டமர்ஸ் பற்றிய தரவுகளை பற்றிய தரவுகளை கொடுத்துவிடுவார்கள். ஆகையால், அந்த ஏஜென்சிக்கள்தான் இந்த கடன் வசூல் வேலையில் பெரும்பாலும் ஈடுபடுவார்கள். அப்படிப்பட்ட ஏஜென்சி யார் என்பதையும் அந்த கடன் பெற்றவருக்கு வங்கிகள் தெரிவிக்க வேண்டும். ஒருவேளை ஒரு குறிப்பிட்ட காலம் ஒரு ஏஜென்சி இருக்கும். இந்த ஏஜென்சி நாளைக்கு மாறிட்டால் கூட அதை பார்வையருக்கு கண்டிப்பாக தெரிவிக்கணும். அந்த ஏஜென்சி ஒப்பந்தம் முடிவடைந்துவிட்டாலும் அது பற்றிய தகவல் தெரிவிக்கப்பட வேண்டும் என்று ரிசர்வ் வங்கியின் விதிகளில் தெள்ளத்தெளிவாக சொல்லப்பட்டிருக்கிறது.

வீட்டுக்கு அந்த ஏஜென்ட் வரும்போது பெரும்பாலும் நடைமுறை நாம பார்க்கிறோம். பல இடங்களில் சண்டை நடக்கிறது. ஏனென்றால் மாலை ஏழு மணி, எட்டு மணி, ஒன்பது மணி, பத்து மணிக்கு மேல் எல்லாம் வீட்டுக்கு வந்து தொல்லை செய்கிறார்கள் என ஒரு பொதுவான குற்றச்சாட்டு இருக்கிறது. அப்படியே ஏஜென்ட் வீட்டுக்கு வந்துட்டார் என்றால் கூட எல்லாரிடமும் அவர் கடன் விஷயத்தை பற்றி பேசக்கூடாது. குறிப்பாக கடன் வாங்கியவர் அல்லது அதற்கு கேரண்டி கையெழுத்து போட்டவர் என இவர்கள் இருவரிடமும் மட்டுமே கடன் வசூல் பற்றி பேச வேண்டும். அதுவும் நாகரீகமாகவும் மரியாதையாகவும் நடந்து கொள்ள வேண்டும்.

நேரில் சந்திக்க வருவதற்கு முன் முன்கூட்டியே முறையாக தகவல் சொல்லிவிட்டுத் தான் வர வேண்டும் என்பதும் விதிகளில் வலியுறுத்தப்பட்டிருக்கிறது. அதேபோல உங்களுடைய பர்சனல் டேட்டாவை பாதுகாக்க வேண்டும். அதாவது கடன் வசூலிப்பதற்காக வங்கிகள் பொதுவாக ரெக்கவரி ஏஜென்சிக்கு தகவல்களை கொடுப்பார்கள். அப்படி கொடுக்கும்போது கூட அவசியமான தகவல்களை மட்டுமே கொடுக்க வேண்டும். கடன் வாங்கியவரின் தனிப்பட்ட தகவல்கள் தவறாக பயன்படுத்தப்படாமல் பாதுகாப்பு ஏற்பாடுகளையும் வங்கிகள் செய்ய வேண்டும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. அதாவது கடன் வாங்கியவர் என்பதற்காக அவருடைய பிரைவசி சம்பந்தப்பட்ட தகவல்களை ரெக்கவரி ஏஜென்ட் அவருடைய விருப்பம் போல பயன்படுத்த முடியாது.

ஸ்மார்ட் போன் வாங்குவதற்காக ஒரு லோன் வாங்கி இருக்கிறார்கள். இது ரொம்பவே சுவாரஸ்யமான ஒரு விதியாக இருக்கிறது. ஸ்மார்ட் போன் வாங்குவதற்காக ஒரு லோன் வாங்கப்பட்டிருந்தால் அந்த மொபைலின் சில பங்ஷனை மட்டும் வங்கி வந்து கட்டுப்படுத்த முடியும். ஆனால் அதுக்கும் ஆர்பிஐ கடுமையான நிபந்தனைகளை கொண்டு வந்திருக்கிறது. அதன்படி லோன் வாங்கி ஒரு 30 நாட்கள் அவர்கள் வந்து கட்டவில்லை. ஓவர்டியூ அந்த மாத தவணை வந்து 30 நாட்கள் கடந்தும் கட்டப்படவில்லை என்றால் பிறகு அதற்கான கட்டுப்பாடுகளை தொடங்க முடியும். ஒரு வேளை 60 நாட்கள் ஆகிவிட்டது. அந்த ஓவர் டியூ இன்னுமும் இருக்கிறது என்கிற பட்சத்தில் தான் முழுமையான கட்டுப்பாடுகளை மேற்கொள்ள முடியும்.

இதையும் படியுங்க  வண்ண விளக்குகள்.. வாண வேடிக்கை.. ஆந்திராவை உலுக்கிய ‘தவளை’ கல்யாண வைபோகம்!

அதே நேரத்தில் கூட எமர்ஜென்சி மாதிரியான சில முக்கியமான அத்தியாவசியமான செயல்பாடுகள் இருக்கும். நமது போனில் இருந்து தொலைபேசி அழைப்புகள் இந்த மாதிரியான விஷயங்களை நிச்சயமாக கண்டிப்பாக முடக்கவே கூடாது என்று சொல்லப்பட்டிருக்கிறது. குறிப்பாக கடன் வாங்கியவருடைய காண்டாக்ட், எஸ்எம்எஸ், போட்டோஸ், கால் லாக்ஸ், லொகேஷன் டேட்டா இது எதுவுமே வங்கி அணுக கூடாது எனச் சொல்லப்பட்டிருக்கிறது.

லோனுக்கு செக்யூரிட்டியாக வீடியோ அல்லது சொத்து வைக்கப்பட்டிருந்தால் அதைக் கைப்பற்றுவதற்கான நடைமுறை லோன் அக்ரிமெண்ட்டில் அதாவது கடன் ஒப்பந்தத்தில் சட்டப்படி செல்லுபடியாக கூடிய வகையில் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும். அது மட்டும் இல்லாமல் லோன் அக்ரிமெண்ட்டில்கையெழுத்து போடும்போதே அந்த கைப்பற்ற கூடிய அந்த விதிகள் பற்றியும் கடன் வாங்குபவருக்கு தெள்ளத் தெளிவாக விளக்கி சொல்ல வேண்டும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. அதாவது கடன் கட்டவில்லை என்கிற ஒரே காரணத்துக்காக உடனே உங்களுடைய சொத்துக்களை நாங்கள் பறிமுதல் செய்து விடுவோம் என ரெக்கவரி ஏஜென்ட் தன்னிச்சையாக செயல்பட முடியாது. அதற்கான இருக்கக்கூடிய சட்டம் நடைமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்று சொல்லப்பட்டிருக்கிறது.

இந்த நேரத்தில் அந்த ரெக்கவரி ஏஜென்ட் வந்து ஏதாவது தவறு செய்தால் அது அவருடைய தவறு மட்டுமே கிடையாது. அதற்கு வங்கிகளும் தான் பொறுப்பு என ரிசர்வ் வங்கியின் புதிய விதிகளில் சொல்லப்பட்டிருக்கிறது. வங்கிகள் இதற்கு நிச்சயமாக பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும். வங்கிகள் ரெக்கவரி ஏஜென்ட்களுக்கு முறையான ட்ரெயினிங் வழங்க வேண்டும். அந்த வந்து கோடக் கண்டன்ட், அதாவது வாடிக்கையாளரை அணுகும் போது அவரிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும்? அவரிடம் எப்படி பேச வேண்டும்? எந்த மாதிரியான வார்த்தைகளை வந்து பிரயோகப்படுத்தக் கூடாது? என்கிற விஷயங்கள் எல்லாம் அவர் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

அதே மாதிரி வெளிப்புற ரெக்கவர் ஏஜென்சிகளிடம் இருந்து விதிகளை பின்பற்றுவதாக சம்பந்தப்பட்ட வங்கி அவர்களிடம் அந்த ஒப்புதல் வாக்குமூலத்தை முன்கூட்டியே பெற வேண்டும். ரெக்கவரி பணியில் ஈடுபடக்கூடிய ஊழியர்களும் விதிகளை சரியாக முறையாக பின்பற்றுவதை உறுதி செய்ய வேண்டும். அது மட்டும் இல்லாமல் ரெக்கவரி ஏஜென்ஸிஸ் இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் பேங்கிங் அண்ட் பினான்ஸ் அமைப்பிலிருந்து ஸ்டெப் ரெகவரிக்கான ஏஜென்ட் ட்ரைனிங் மாதிரியான பரிந்துரைக்கப்பட்ட பயிற்சிகளையும் கண்டிப்பாக பெறவேண்டும் என்று இந்த ரிசர்வ் வங்கியின் புதியவிதிகளில் தெள்ளத் தெளிவாக சொல்லப்பட்டிருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 days ago at 5 days ago