மத்திய அரசால் உத்தேசிக்கப்பட்டுள்ள தொகுதி மறுவரையறை பணிகள் தொடர்பாக, முதலமைச்சர் விஜய் தலைமையில் தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு, தொகுதி மறுவரையறை தொடர்பான மசோதாவை விரைவில் தாக்கல் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், அதுதொடர்பாக கலந்தாலோசிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாக தமிழக அரசு கருதுகிறது.
இதனை முன்னிட்டு, தொகுதி மறுவரையறையால் தமிழகத்திற்கு ஏற்படக்கூடிய தாக்கங்கள் குறித்து விவாதிக்க, தமிழகத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆலோசனைக் கூட்டத்தை முதலமைச்சர் விஜய் ஏற்பாடு செய்துள்ளார்.
அதன்படி, இந்தக் கூட்டம் வரும் ஆகஸ்ட் 8ஆம் தேதி, சனிக்கிழமை, பிற்பகல் 3.00 மணிக்கு, சென்னை சேப்பாக்கம் கலைவாணர் அரங்கில் நடைபெறவுள்ளது. முதலமைச்சர் விஜய் தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில், தமிழகத்தைச் சேர்ந்த மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் பங்கேற்க உள்ளனர்.
இதற்கான அழைப்பிதழ்கள், தமிழக அரசு சார்பில் அனைத்து மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளன. மத்திய அரசு மேற்கொள்ள உள்ள தொகுதி மறுவரையறை பணிகள் குறித்து விரிவாக ஆலோசித்து, அதன் அடிப்படையில் தமிழக அரசின் நிலைப்பாட்டை ஒருமித்த கருத்துடன் உருவாக்குவதே இந்தக் கூட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.
தொகுதி மறுவரையறை தொடர்பாக, கடந்த திமுக ஆட்சிக் காலத்திலும் தமிழகத்தைச் சேர்ந்த பல்வேறு அரசியல் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் ஆலோசனைக் கூட்டம் சென்னையில் நடைபெற்றது.
அப்போது முதலமைச்சராக இருந்த மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அந்தக் கூட்டத்தில், தொகுதி மறுவரையறையால் தமிழகத்திற்கு, குறிப்பாக தென் மாவட்டங்களுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டு, அதனை எதிர்கொள்ள சட்டரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
அதேபோல், தற்போதைய முதலமைச்சர் விஜயும் தொகுதி மறுவரையறை விவகாரத்தில் தனது எதிர்ப்பு நிலைப்பாட்டை ஏற்கனவே வெளிப்படுத்தியுள்ளார். எந்தச் சூழ்நிலையிலும் தமிழ்நாட்டின் நாடாளுமன்ற பிரதிநிதித்துவம் குறையக் கூடாது என்பதில் அரசு உறுதியாக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
இருப்பினும், இந்த விவகாரத்தில் அனைத்து அரசியல் கட்சிகளின் கருத்துகளையும் கேட்டு, ஒருமித்த நிலைப்பாட்டை உருவாக்கும் நோக்கிலேயே திமுக, அதிமுக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் இந்தக் கூட்டத்திற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
முதலமைச்சர் விஜய் தலைமையில் நடைபெறும் இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கான அழைப்பிதழ்கள் ஏற்கனவே அனுப்பப்பட்டுள்ளன. இதையடுத்து, அரசியல் கட்சிகள் தங்களது நிலைப்பாட்டை அறிவித்து, கூட்டத்தில் பங்கேற்பார்களா என்பது வரும் நாட்களில் தெரியவரும்.ர்கள் முன்வைப்பதற்கான வாய்ப்பு உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எதிர்காலத்தில் தவெகவுக்கு நாடாளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் கிடைக்கும் சூழல் உருவானாலும், அதற்கு முன்னரே மாநிலத்தின் நிலைப்பாட்டை உறுதிப்படுத்தும் முக்கிய ஆலோசனைக் கூட்டமாகவே இந்தக் கூட்டம் பார்க்கப்படுகிறது.
