Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

Republic Tamil

தமிழக அரசின் வேளாண் நிதிநிலை அறிக்கை குறித்து கருத்து தெரிவித்த சௌமியா, இது வெறும் வேளாண் துறைக்கான பட்ஜெட் மட்டுமல்ல; கூட்டுறவு, மீன்வளம், கால்நடை பராமரிப்பு, பால்வளம் உள்ளிட்ட மொத்தம் 22 துறைகளை உள்ளடக்கிய விரிவான நிதிநிலை அறிக்கை என்றும் கூறினார். பல்வேறு துறைகளுக்கான தனித்தனி அறிவிப்புகள் இடம்பெற்றிருந்தாலும், விவசாயத்தின் அடிப்படைத் தேவையான நீர்ப்பாசனத்திற்கு உரிய முக்கியத்துவம் அளிக்கப்படாதது இந்தப் பட்ஜெட்டின் மிகப்பெரிய குறை என்றும் தெரிவித்தார்.

இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் பெயரில் வேளாண் பட்டயப் படிப்புக்கான பல்கலைக்கழகம் தொடங்கப்படும் என்ற அறிவிப்பையும், அவரது பெயரில் விருது வழங்கப்படும் என்ற அறிவிப்பையும் வரவேற்பதாக அவர் கூறினார். அதேபோல், சுதந்திரப் போராட்ட வீராங்கனை அஞ்சலை அம்மாள் பெயரில் விருது அறிவிக்கப்பட்டிருப்பதையும் மனமாரப் பாராட்டுவதாக தெரிவித்தார்.

Republic Tamil

சிறுதானியங்கள், குதிரைவாலி உள்ளிட்ட பயிர்கள், கரும்பு, பனை, நெல், வாழை போன்ற ஒவ்வொரு முக்கியப் பயிருக்கும் தனித்தனி வளர்ச்சிக் கழகங்கள் மற்றும் திட்டங்கள் அறிவிக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது என்றும் அவர் குறிப்பிட்டார்.

தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தனித்தனி வேளாண் தன்மைகள் உள்ளன என்றும், டெல்டா மாவட்டங்களில் நெல், கரும்பு, வாழை போன்ற அதிக நீர் தேவைப்படும் பயிர்கள் சாகுபடி செய்யப்படுகின்றன என்றும் தெரிவித்தார்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் வேர்க்கடலை, கடலூர்–பண்ருட்டி பகுதிகளில் முந்திரி மற்றும் பலா, கிருஷ்ணகிரி மற்றும் சேலம் மாவட்டங்களில் மாம்பழம், காய்கறிகள், மலர்கள் உள்ளிட்ட தோட்டக்கலைப் பயிர்கள், தருமபுரி போன்ற வறண்ட மாவட்டங்களில் சிறுதானியங்கள் மற்றும் குதிரைவாலி போன்ற பயிர்கள் அதிகளவில் விளைவிக்கப்படுகின்றன என்றும் சுட்டிக்காட்டினார்.

இதையும் படியுங்க  எடப்பாடியை முடக்கும் ஏழரைகள்..! விஜய் வீசிய தூண்டில்..! பொறி வைக்கும் அண்ணாமலை..! அதிமுகவுக்கு சவப்பெட்டி..!

தமிழ்நாட்டின் புவியியல் மற்றும் காலநிலை வேறுபாடுகளுக்கு ஏற்ப தனித்தனி திட்டங்கள் அவசியமானவை என்றாலும், அனைத்து வகை விவசாயத்திற்கும் பொதுவான அடிப்படைத் தேவை தண்ணீர்தான் என்றும், அந்த அடிப்படை அம்சத்திற்கு இந்தப் பட்ஜெட்டில் போதிய முக்கியத்துவம் வழங்கப்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார்

Republic Tamil

.

நீர்ப்பாசனத் திட்டங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும் என்று ஏற்கனவே பொதுப் பட்ஜெட்டிலேயே எதிர்பார்த்ததாகவும், சில ஆறு இணைப்புத் திட்டங்களுக்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்படும் என்ற அறிவிப்பைத் தவிர, பெரிய அளவிலான நீர்ப்பாசனத் திட்டங்கள் இடம்பெறவில்லை என்றும் கூறினார். நீர்ப்பாசன வசதிகளை வலுப்படுத்தாமல் வேளாண் வளர்ச்சி சாத்தியமில்லை என்றும் வலியுறுத்தினார்.

தமிழக விவசாயிகளின் முக்கிய கோரிக்கையான கூட்டுறவுக் கடன்களை முழுமையாகத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் இந்தப் பட்ஜெட்டில் நிறைவேற்றப்படவில்லை என்றும், இதற்காக சுமார் ரூ.14 ஆயிரம் கோடி மட்டுமே தேவைப்படும் நிலையில், அதற்கான அறிவிப்பு இடம்பெறாதது ஏமாற்றமளிப்பதாகவும் தெரிவித்தார்.

இலவச வேளாண் மின்சாரம் தொடர்பாகவும் புதிய அறிவிப்புகள் எதுவும் வெளியாகவில்லை என்றும், தற்போது இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் புதிய மின் இணைப்புக்காக பதிவு செய்து காத்திருப்பதாகவும், அவர்களுக்கு இலவச மின் இணைப்பு வழங்குவது குறித்து எந்தத் தெளிவான அறிவிப்பும் இல்லை என்றும் சுட்டிக்காட்டினார். ஏற்கனவே இலவச மின்சாரம் பெற்று வரும் விவசாயிகளுக்கு அது தொடரும் என மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

Republic Tamil

நெல் கொள்முதல் விலையை ஒரு குவிண்டாலுக்கு ரூ.500 உயர்த்த வேண்டும் என்பது நீண்டகால கோரிக்கை என்றும், தேர்தல் அறிக்கையிலும் இடம்பெற்றிருந்தது என்றும் தெரிவித்தார். ஆளுங்கட்சியும் இதேபோன்ற வாக்குறுதியை அளித்திருந்த நிலையில், தற்போதைய பட்ஜெட்டில் அதுகுறித்து எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை என்றும், தற்போது நடைமுறையில் உள்ள ரூ.2,350 கொள்முதல் விலையே தொடர்வது ஏமாற்றமளிப்பதாகவும் கூறினார்.

இதையும் படியுங்க  140 வருட கட்சிக்கு சமாதி கட்டாதே..! காங்கிரஸ் கட்சியில் வெடித்த மோதல்..! திமுக கூட்டணியால் பரிதாபம்..!

அதேபோல், கரும்புக்கான கொள்முதல் விலையை ஒரு டன்னுக்கு ரூ.500 உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கையும் நிறைவேற்றப்படவில்லை என்றும் விமர்சித்தார்.

Republic Tamil

நெல் கொள்முதல் நிலையங்களின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்றும், தற்போது பல இடங்களில் திறந்தவெளியில் நெல் மூட்டைகள் குவிக்கப்பட்டிருப்பதால், அவற்றைப் பாதுகாக்க நிரந்தர மேற்கூரைகள் அமைக்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்தார். தார்ப்பாய் வழங்குவது நிரந்தரத் தீர்வாக அமையாது என்றும், மேற்கூரை அமைப்பதே சிறந்த தீர்வாக இருக்கும் என்றும் கூறினார்.

மாநிலத்தின் மொத்த பட்ஜெட் சுமார் ரூ.5 லட்சம் கோடி அளவில் இருக்கும் நிலையில், வேளாண் துறைக்கான ஒதுக்கீடு வெறும் ரூ.14 ஆயிரம் கோடியாகவும், 22 துறைகளையும் சேர்த்து ரூ.58 ஆயிரம் கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டிருப்பது ஏமாற்றமளிப்பதாக தெரிவித்தார். வேளாண் மற்றும் கிராமப்புற வாழ்வாதாரத் துறைகளுக்கான நிதி ஒதுக்கீடு மேலும் அதிகரிக்கப்பட்டிருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

விவசாயிகளுக்கான மானியங்கள் மற்றும் பல்வேறு புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டிருந்தாலும், போதிய தண்ணீர் இல்லாத சூழலில் அவற்றை நடைமுறைப்படுத்துவது எப்படி என்பது மிகப்பெரிய கேள்வியாக இருப்பதாகவும் கூறினார்.

“வளமான தமிழ்நாட்டை நோக்கிய பட்ஜெட்” என்று முதலமைச்சர் கூறியிருப்பதை வரவேற்பதாக தெரிவித்த அவர், உண்மையில் வளமான தமிழ்நாட்டை உருவாக்க வேண்டுமெனில் முதலில் நீர்ப்பாசனத் திட்டங்களுக்கும், நீர்நிலைகள் பாதுகாப்பிற்கும் முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார். அண்மையில் உச்சநீதிமன்றம் ஐந்து ஏக்கருக்கு மேற்பட்ட அனைத்து நீர்நிலைகளையும் பாதுகாக்க வேண்டும் என்று வலியுறுத்தியிருப்பதை முழுமையாக நடைமுறைப்படுத்தினாலே விவசாயத்திற்கு மிகப்பெரிய ஆதரவாக அமையும் என்றும் கூறினார்.

இதையும் படியுங்க  "ஆடம்பரம் வேண்டாம், மக்களுக்கு 10 நாளில் தீர்வு! பெரம்பூரில் மிரட்டும் முதல்வர் விஜய்யின் மாடல் அலுவலகம்!"
Republic Tamil

மேலும், கடந்த 19 ஆண்டுகளாக மாற்று வேளாண் நிதிநிலை அறிக்கை வெளியிடப்பட்டு வருவதாகவும், அந்த அறிக்கைகளில் நீர்ப்பாசனத் திட்டங்கள் மற்றும் நீர்நிலைகள் பாதுகாப்புக்கு எப்போதும் முன்னுரிமை அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். அரசின் தற்போதைய வேளாண் பட்ஜெட்டை அந்த அறிக்கைகளுடன் ஒப்பிட்டு விரிவான ஆய்வு மேற்கொள்ளப்படும் என்றும் கூறினார்.

காவிரி நீர் பிரச்சினை குறித்து கருத்து தெரிவித்த அவர், காவிரி நீர் விவசாயிகளுக்கும் பொதுமக்களுக்கும் மிகவும் அவசியமானது என்பதால், அனைத்து அரசியல் கட்சிகளையும் உள்ளடக்கிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தை தமிழக அரசு உடனடியாக கூட்ட வேண்டும் என்றும், பின்னர் ஒருமித்த கருத்துடன் புதுடெல்லி சென்று பிரதமர் மற்றும் மத்திய நீர்வளத் துறை அமைச்சரைச் சந்தித்து தமிழகத்தின் உரிமையை வலியுறுத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.

22 துறைகளை உள்ளடக்கிய இந்த வேளாண் நிதிநிலை அறிக்கையில் சுற்றுச்சூழல் தொடர்பாக பண்ணைக் குட்டைகள் அமைப்பதற்கான அறிவிப்புகள் இடம்பெற்றிருப்பது வரவேற்கத்தக்கது என்றும், ஆனால் பள்ளிக்கரணை சதுப்புநிலம் பாதுகாப்பு தொடர்பாக எந்த அறிவிப்பும் இடம்பெறாதது ஏமாற்றமளிப்பதாகவும் தெரிவித்தார். சுற்றுச்சூழல் துறையின் மூலம் அதுகுறித்து தனி அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்த்து காத்திருப்பதாகவும் அவர் கூறினார்.

Eswari

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 week ago at 1 week ago