Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

adhav

தமிழக அரசியலில் தற்போது அமைச்சரவை, கூட்டணி விவகாரங்கள் பெரும் விவாதத்தை ஏற்படுத்தி வரும் நிலையில், அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பற்றி அவரது மைத்துனரும், லட்சிய ஜனநாயக கட்சியின் தலைவருமான ஜோஸ் சார்லஸ் முன்வைத்துள்ள விமர்சனங்கள் பரபரப்பை கிளப்பியுள்ளன.

செய்தியாளர்களைச் சந்தித்த ஜோஸ் சார்லஸ், தனது மைத்துனர் என்றும் பாராமல் ஆதவ் அர்ஜுனா மீது கடுமையான புகார்களை முன்வைத்தார். குறிப்பாக, “தமிழக முதல்வர் விஜய், ஆதவ் அர்ஜுனாவை மிகவும் கவனமாகப் பார்த்துக்கொள்ள வேண்டும். அவர் காசை கையாடல் செய்யாமல் இருப்பதை விஜய் உறுதி செய்ய வேண்டும்” என்று நேரடியாகவே வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஆதவ் அர்ஜுனாவைச் சரியாகக் கண்காணிக்கத் தவறினால், அது நிர்வாகச் சீர்கேட்டிற்கு வழிவகுக்கும். நிர்வாகம் கமிஷன் வாங்கும் பாதையில் சென்றுவிட்டால், அது நாட்டிற்கும் மக்களுக்கும் மிகப்பெரிய தீங்காக முடிந்துவிடும். எனவே, அவரை முழுமையான கட்டுப்பாட்டில் வைத்து கண்காணிப்பது முதல்வரின் கடமை” என்று தெரிவித்துள்ளார்.

ஆதவ் அர்ஜுனா ஒரு முக்கிய அமைச்சர் பொறுப்பில் இருக்கும் வேளையில், அவரது குடும்பத்தைச் சேர்ந்த ஒருவரே இத்தகைய ஊழல் தொடர்பான எச்சரிக்கைகளை விடுப்பது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படியுங்க  ஆம்ஸ்ட்ராங் பாணியில் தவெக பிரமுகர் கொலை.. 10 வயதில் சபதம்.. விசாரணையில் அடுத்தடுத்து வெளியாகும் அதிர்ச்சி!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 months ago at 5 months ago