https://republictn.com/

தமிழக அரசியலில் நடிகர் விஜய் நிகழ்த்திய அந்த பிரமாண்ட தேர்தல் வெற்றிக்குப் பின்னால் வெரும் மக்கள் செல்வாக்கு மட்டுமல்ல, ஒரு மிகப்பெரிய டிஜிட்டல் மாயாஜாலமும் ஒளிந்திருப்பதாக பகீர் குற்றச்சாட்டு அம்பலமாகி உள்ளது.

‘ரூட் மாஃபியா’ என்று அழைக்கப்படும் அந்த அதி நவீன டிஜிட்டல் மோசடி குறித்து முன்னணி தேசிய ஊடகங்கள் வெளியிட்டுள்ள ஆதாரங்கள் தமிழகத்தையே அதிரவைத்துள்ளன. மக்கள் உணர்ச்சிகளை தங்களுக்கு சாதகமாக மாற்றி, ஒரு செயற்கையான அலையை உருவாக்கி அதன் மூலம் வாக்குகளை கவர்ந்ததாக இந்த ஆய்வு அறிக்கைகள் குற்றம் சாட்டுகின்றன. இது வெறும் தேர்தல் பிரச்சாரம் அல்ல, ஒரு திட்டமிடப்பட்ட டிஜிட்டல் மூளை சலவை என்று ஊடகவியலாளர்கள் இதனை வர்ணிக்கின்றனர். தமிழக வெற்றி கழகம் பயன்படுத்திய சென்டிமென்ட் ட்ராக்கிங் தொழில் நுட்பம் குறித்த மர்மங்கள் விலகி உள்ளன.

சுமார் 34,000 வாட்ஸ்-அப் குழுக்கள், நாள் ஒன்றுக்கு 150-க்கும் மேற்பட்ட வீடியோக்கள் மூலமாக ஒவ்வொரு வாக்காளர்களின் செல்போன் திரையையும் தங்களது பிம்பத்தால் தவெக தரப்பு ஆக்கிரமித்துள்ளது. ஒரு சாமானிய மனிதர் தனடு செல்போனில் எதை தேடுகிறார்? எதைக் கண்டு வருத்தப்படுகிறார் என்பதை நுணுக்கமாக கண்காணித்து அதற்கு ஏற்றார் போல் போலி தகவல்களையும் மிகைப்படுத்த வாக்குறுதிகளையும் அவர்கள் போனுக்கு நேரடியாக தள்ளும் இன்பர்மேஷன் பபார்ட்மெண்ட் உத்தியோ இவர்கள் கையாண்டுள்ளதாக கூறப்படுகிறது.

இது ஜனநாயக முறையில் வெற்றி என்பதைவிட ஒரு தொழில் நுட்பரீதியிலான விமர்சனங்கள் என தற்பொழுது வலுவாகி வருகின்றன. இந்த ரூட் மாஃபியா மோசடிக்கு பலகோடி ரூபாய் செலவிடப்பட்டதாகவும், இதற்காக வெளிநாட்டு தொழில் நுட்ப வல்லுநர்களின் உதவிகள் பெறப்பட்டதாகவும் தேசிய ஊடகங்கள் சுட்டிக்காட்டுகின்றன. மக்களின் உண்மையான தேவைகளை விட, அவர்களது மனநிலையை மென்பொருட்கள் மூலம் சிதைத்து வாக்குகளாக மாற்றுவது ஒரு ஆரோக்கியமான ஜனநாயகத்திற்கு மிகப்பெரிய ஆபத்து என்று அரசியல் விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன.

குறிப்பாக நடத்தர மற்றும் ஏழை எளிய வாக்களர்களின் அறியாமையை பயன்படுத்தி அவர்கள் பார்க்கும் வீடியோக்கள் மூலமாகவே ஒரு மாய உலகத்தை உருவாக்கியது எப்படி? என்பது குறித்த விரிவான ஆதாரங்களை இந்த ஊடகங்கள் பொதுவெளியில் வைத்துள்ளனர். இது விஜய் பேசும் தூய அரசியல் என்ற பிம்பத்திற்கு ஒரு மிகப்பெரிய கறையாகவே பார்க்கப்படுகிறது. இந்த டிஜிட்டல் மோசடி விவகாரம் நீதிமன்றத்திற்கு சென்றால் அது விஜயின் அரசியல் எதிர்காலத்திற்கு ஒரு மிகப்பெரிய இடியாக அமையும் என வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.

இதுபோன்ற செய்திகளை உடனே பெற வாட்ஸ்-அப் சேனலில் இணையுங்கள். லிங்க்: https://whatsapp.com/channel/0029VbCLl4wAzNbnK5JVXq3s

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 weeks ago at 3 weeks ago